You are here

புத்தகமற்ற வாழ்க்கையை யோசிக்கவே முடியாது!

– தொகுப்பு: எஸ் வி வேணுகோபாலன் இவ்வாண்டு உலக புத்தக தினத்தை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச – உடன் இணைந்து பாரதி புத்தகாலயம் 1000 இடங்களில் கொண்டாடியது. இதனை முன்னிட்டு சென்னையில் நூல் வெளியீட்டுத் திருவிழாவாகக் கொண்டாடியது. வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை என்றாலும் கோடையின் வெம்மை மனிதர்களை கூட்டுக்குள்ளிருந்து வெளியேறாது மிரட்டிக் கொண்டிருந்ததைப் பொருட்படுத்தாத புத்தகக் காதலர்கள் அன்று காலையிலேயே, இளங்கோ சாலையில் இருக்கும் பாரதி புத்தகாலயக் கடைக்குள் நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்தனர். மேலே இரண்டாம் தளத்தில் நூல் வெளியீட்டுக்கான மும்முரம் பரவிக் கொண்டிருந்தது. இந்த முறை மிக இளம் மற்றும் குழந்தை வாசகர்கள் சிலரும் ஆர்வத்தோடு கலந்து கொள்ள வந்திருந்தனர். நூல் வெளியீடுகள் நிறைவு பெற்றதும், புத்தக தின சிறப்புக் கூட்டம் மிகச் சுருக்கமாக, ஆனால் ரசனை மிக்கதாக சொற்பொழிவுகளால் தன்னியல்பாக…

Read More
நிகழ்வு 

சாதியொழிப்புக் களத்தில் ஓர் இலக்கிய ஆயுதம் ம. மணிமாறன்

குளிர்காற்று ஊர்ந்து பரவி தோழர்களோடு தோழராக அமர்ந்தபோது விழாவிற்கேயான உற்சாக மனநிலை உருவானது. ப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய ‘கரசேவை’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா அது. தமுஎகச மாவட்டத் தலைவர் தேனி வசந்தன் தலைமையேற்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் முத்துக்குமார் வரவேற்றார். நிகழ்வுகளை லட்சுமி காந்தன் ஒருங்கிணைத்தார்.”என்னோடு தெருப்புழுதிக்குள் உழன்ற மனிதனைத் தேடியபோது நான் ப்ரதிபா ஜெயச்சந்திரன் எனும் கதைக்காரனைக் கண்டடைந்தேன்,” என்று தன்னுடைய ஆய்வுரையைத் துவக்கினார் பொ. வேல்ச்சாமி. எல்லாக் கதைகளுக்குள்ளும் புரளும் மொழி, பைபிளின் சாரத்திலிருந்து எழுத்தாளன் கண்டறிந்தது என மொழியழகின் வழியே நிறுவினார். அவரது உரை மொழியென்றால் என்ன, நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கதை மொழி எவருடையது, தலித் இலக்கியம் என நாம் நம்பிக் கொண்டிருக்கும் பிரதிகளுக்குள் புரளும் மொழி நிஜத்தில் நம்முடையதுதானா என்ற கேள்விகளைத் தொட்டது. “கதை கிறிஸ்துவ குருத்துவம்…

Read More
நிகழ்வு 

40ம் ஆண்டில் கவிதா பதிப்பகம்

சந்திப்பு: சூரியசந்திரன் தமிழின் முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றான ‘கவிதா பப்ளிகேஷன்’ தனது 40ஆவது ஆண்டு விழாவை வியக்கத்தக்க வகையில் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆளுமைகள், தலைவர்கள் என ஏராளமானோரின் புத்தகங்கள் இப்பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்பதிப்பக நூல்கள் மத்திய, மாநில அரசுகளின் முக்கியமாமனப் பரிசுகளைப் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பதிப்பகத்தின் நிறுவனர் திரு. சேது.சொக்கலிங்கம், தமிழ்ப் பதிப்புலக முன்னோடிகள் பலரை ஈன்றளித்த தேவகோட்டையில் பிறந்தவர். இவரது தந்தை சேதுராமன், பொதுவுடைமைச் சிந்தனைகளால் கவரப்பட்டவர், ‘பாரதி தமிழ்ச் சங்க” த்தின் நிறுவனச் செயலாளர். (56 ஆண்டுகளாக இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது ) அந்த இலக்கியச் சங்க நிகழ்ச்சிக்கு ஜீவா போன்ற தோழர்கள் கலந்து கொள்வார்கள். தோழர் தா.பாண்டியனுக்கு முதல் மேடையாக அமைந்தது அந்தச் சங்கம்தான் என்ற சிறப்பிற்குரியது. தந்தை சேதுராமனின் நண்பர் ‘வணங்காமுடி’ சொக்கலிக்கம்,…

Read More
நிகழ்வு 

சிறார் இலக்கியம்: எதிர்காலம்

யெஸ்.பாலபாரதி சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் படைப்பாளிதான். என் கையில் இருந்த புத்தகப்பையை வாங்கிப் பார்த்தார். அதன் உள்ளே ஏழெட்டு சிறார் இலக்கிய புத்தகங்கள் இருந்தது. “இதையெல்லாம் விட்டுட்டு வந்து பலவருசம் ஆச்சு.. இன்னுமா இதையெல்லாம் படிச்சிகிட்டு இருக்க?” என்று கேட்டார். “வாசிப்புக்கு ஏதுப்பா எல்லை. எல்லாத்தையும் தான் வாசிக்கிறேன்” என்று சொன்னேன். “எப்படித்தான் இன்னும் இதையெல்லாம் படிக்கிறியோ?” என்று சலித்துகொண்டார். நல்ல வேளை சமீபத்தில் வெளிவந்த என்னுடைய சிறார் நாவல் பற்றி அவருக்கு ஏதும் தெரியாது. நகைச்சுவைக்காக இதனைச் சொல்லவில்லை. நிஜமும் இப்படித்தான் இருக்கிறது. நவீன இலக்கியத்தின் பால் ஆர்வம் கொண்ட உங்கள் நண்பர்களையோ, நீங்கள் மதிக்கும் எழுத்தாளரிடமோ, இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு பிடித்த பத்து, வேண்டாம். ஐந்து சிறார் இலக்கிய படைப்பாளிகளையும், அவர்களின் படைப்புக்களையும் சொல்லச் சொல்லுங்களேன். நிச்சயமாக கேள்விக்கான சரியான பதில்…

Read More
நிகழ்வு 

நான் படித்த புத்தகங்கள்…

 ரோஹிணி நாம் வாசித்தால்தான் நமது குழந்தைகளும் புத்கத்தை விரும்பிப் படிப்பார்கள் என்று சொல்லப்படுவது உண்மைதான்…என் தந்தை மிகப் பெரிய அளவில் நூல்களை வாசிப்பவராக இருந்தார். எங்களையும் வாசிக்கத் தூண்டினார். மிக இளவயதில் நான் நடிக்கத் தொடங்கி விட்டேன். முறைப்படி பள்ளிக்கூடத்திற்கு அதிகம் செல்ல முடியாமல் போய்விட்டது. எனக்குத் தமிழ் தெரியவேண்டும் என்பதற்காகத் தனியே ஓர் ஆசிரியரை நியமித்திருந்தார் என் தந்தை. அவர் ஓர் அற்புதமான ஆசிரியர். நான் திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கிய பிறகும் எனக்குத் தமிழ் உச்சரிப்பும், எழுத்தும் திருத்தமாக வருகிறதா என்று பரிசோதிக்க வந்துவிடுவார். எங்கே ழ என்ற எழுத்தைச் சொல் என்பார். ஒரு முழு வாக்கியத்தை எழுதிக் காட்டு என்பார். இப்படியாக வளர்ந்தது என் தமிழ்ப் பாடம். ஆரம்ப முதலே பாரதிதான் என் ஆதர்சம்….பாரதியைத் தொடர்ந்து படிக்கையில், திரும்பத் திரும்ப வாசிக்கையில் ஒவ்வொரு…

Read More
நிகழ்வு 

புதிய புத்தகங்களின் அணிவகுப்பில் ​13வது திருப்பூர் புத்தகத் திருவிழா!

திருப்பூரின் அடையாளங்களில் ஒன்றாக பெயர் பெற்றுவிட்ட 13வது திருப்பூர் புத்தகத் திருவிழா ஜனவரி 29 ஆம் தேதி கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் கோலாகலமாகத் தொடங்கியது. சமூக முன்னேற்றத்திற்காக வாசிப்புப் பழக்கத்தை இளைய தலைமுறையிடம் பரவலாக வலுப்படுத்தும் வகையில் பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து திருப்பூரில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகின்றன. ஆண்டுக்கு ஆண்டு இந்த புத்தகத் திருவிழா திருப்பூர் மக்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் இக்கண்காட்சியில் இடம் பெற விற்பனையாளர்களும், பதிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு முன்வருவதே இதற்குச் சான்று. திருப்பூர் வாசிக்கிறது இந்த புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே ‘திருப்பூர் வாசிக்கிறது’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. “மனிதன் மகத்தானவன்” என்ற புத்தகம் 15 ஆயிரம் பிரதிகள் திருப்பூர் வட்டாரக் கல்விநிறுவனங்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு பல்லாயிரம்…

Read More

வெள்ளம்தாண்டி உள்ளம் வெல்வோம்

ஜனவரி 15 பொங்கல் தினத்தன்று, பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற ஓவிய நிகழ்வு நடைபெற்றது. மூத்த ஓவியர் விஸ்வம் தலைமையில் ஓவியர்கள் ரோஹிணிமணி, வாசுகி, வாகை தர்மா, பொதுக்கல்விக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு துவக்கி வைக்க, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான உதயன், தேன்மொழிச் செல்வி, இளங்கோ, பூங்கோதை, டி.மோகனா, தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டு குழுமத்தின் சார்பில் நக்கீரன் சுரேஷ், நந்த்கிஷோர், சாதிக் பாட்சா, வைரவன், உமா லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஓவியம் வரைந்தனர்.

Read More

சென்னை- பொங்கல் புத்தகத் திருவிழா

பேராசிரியர் கோபால் கிருஷ்ண காந்தி மே.வங்க மாநில மேநாள் ஆளுநர், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி, வெளிநாட்டு தூதரகப் பணி உயர் அலுவலர் பேராசிரியர் கோபால் கிருஷ்ண காந்தி – (மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோரின் பேரன்) அவர்கள் ஆற்றிய துவக்க உரையின் சிறு பகுதி. ‘அறிவாற்றல் சிந்தனையை மழுங்கடிக்கும் போக்குக்கு எதிராக விழிப்புணர்வு மிகவும் அவசியம்’ என்று மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வேதனை தெரிவித்தார்.சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா ஜனவரி 13 துவங்கி 24ஆம் தேதி வரை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.திடலில் நடைபெறுகிறது. அதன் துவக்கவிழா புதனன்று (ஜன.13) நடைபெற்றது. இதில் பேசிய அவர், “தமிழ்நாடு இயற்கை வளம் மட்டுமல்லாமல் ஆற்றல் வளமும் கொண்ட மாநிலமாகும். திறந்த மனதுடன் பேசும் மரபுக்குச் சொந்தக்காரர்கள். இடதுசாரி, பெரியார் சிந்தனைகள் சமூக-அரசியல் அம்சங்களில் ஏற்படுத்திய தாக்கம்தான் இதற்குக்…

Read More
நிகழ்வு 

இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கருத்துரிமைக்கான தமிழ் எழுத்தாளர்களின் சென்னைப் பிரகடனம்

    • சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒருபோதும் இருந்திராத அளவு மதரீதியாக தேசத்தைப் பிளவுபடுத்துகிற பேச்சுக்களும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, மதம்சார்ந்த அடையாள அரசியலின்கீழ் ஒட்டுமொத்த தேசத்தையும் கொண்டுவர நடக்கும் முயற்சிகள்குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம். • பன்முகப் பண்பாடுகளின் கலவையாகத்  திகழும் இந்திய மக்களை, ஒற்றை அடையாளம் என்னும் பட்டிக்குள் தள்ளுகிற முயற்சியின் காரணமாக சிறுபான்மை மக்களை அந்நியர்களாகவும், இந்தியப்பண்பாட்டின் விரோதிகளாகவும் சித்தரிக்கும் போக்கு அபாயகரமான எல்லைக்கு வளர்ந்திருப்பதையும்; மதவாதக் கருத்துகள் சாதியரீதியான வன்முறைகளை ஊக்குவிப்பதால் தலித்துகள்மீதான தாக்குதல்கள் நாடெங்கும் அதிகரித்துவருவதையும் கவலையோடு சுட்டிக்காட்டுகிறோம். • எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி, பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோர் திட்டமிட்ட முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வுகள் நாட்டிலுள்ள சுயசிந்தனையாளர்கள் அனைவருக்குமான அச்சுறுத்தல் என்பதை கவனப்படுத்துகிறோம். •   வகுப்புவாத வன்முறைகளுக்கு எதிராகவும், கருத்துரிமைக்கு ஆதரவாகவும், மத்திய அளவிலும் மாநில…

Read More
நிகழ்வு 

தேவ.பேரின்பன்: முதலாம் ஆண்டு நினைவு தின நூல் வெளியீட்டு விழா

மார்க்சிய அறிஞர் தேவ. பேரின்பன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நூல் வெளியீட்டு விழா தருமபுரி முத்து இல்லத்தில் 2014 செப். 18ல் நடைபெற்றது. தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் தலைமைவகித்தார்.தோழர் தேவ.பேரின்பன் நினைவுமலரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் ஜி.ஆனந்தன் வெளியிட முதல் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில் பெற்றுகொண்டார். மறைந்த தோழர் தேவ. பேரின்பன் எழுதிய தமிழர் வளர்த்த தத்துவங்கள் எனும் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட நூலை மார்க்சிஸ்ட் மாதஇதழ் ஆசிரியர் என். குணசேகரன் வெளியிட முதல் பிரதியை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ச. வரதராசுலு பெற்றுகொண்டார். நினைவு உரையை கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் டி. இரவீந்திரன், மாவட்டச் செயலாளர் எம். மாரிமுத்து, சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.இளம்பரிதி, தமுஎகச….

Read More