You are here

புத்தகக் கண்காட்சியை பள்ளி – கல்வியின் அங்கமாக்குவோம்

வாசிப்பே அறிவின் ஒற்றை வாசல்…  புத்தகமே திறவுகோல். – கொரிய பழமொழி பள்ளிக்கூடங்களைத் திறந்து ஒரு மாதமாகிறது. தேர்ச்சி சதவிகித சர்ச்சைகளும் சப்தங்களும் இன்னமும் ஓயவில்லை. நமது கல்வியைப் பிடித்தாட்டும் பிசாசாக தேர்வுகள் இன்னமும் தொடர்கின்றன. எப்படியாவது காவியை கல்வியில் கலந்துவிட பலவகையில் சதித் திட்டங்களுடன் மோடிபரிவாரம் களத்தில் குதித்திருக்கிறது. ஏதாவது ஒரு வழியில் லேசான சந்து கிடைத்தால்கூட போதும் அவர்களுக்கு! ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹேட் கேவரின் நினைவுதினம் ஜூன் 21. அதை சர்வதேச யோகா தினமாக்கியது சமீபத்திய சாட்சி. பள்ளிக்கூடங்களுக்குள் எப்படி நுழைய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். மனதை ஒருநிலைப்படுத்துவது, யோகா என்பதில் சூட்சுமமான அரசியலின் கோர துவேஷம் அதன் நூற்றாண்டுகால இந்துத்துவா நெடியில் ஒளிந்திருக்கிறது என்றால் இல்லை விஞ்ஞான பூர்வமானது. அது இது.. என்று நவீன மூலாம் பூசிட இன்று எல்லாரும் தயார்….

Read More

வாருங்கள் சென்னை நோக்கி

வாருங்கள் சென்னை நோக்கி கல்லூரிப்படிப்பு வரை முடிக்கும் நம் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களில் ஒரு நூறு பேர்கள் கூட வாசிப்பு எனும் அவசியமான பழக்கத்திற்குள் நுழைவது இல்லை என்பது கசப்பான உண்மை ஆகும். புத்தக வாசிப்பை தனது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொண்டவர்கள் இடையே சாமியாரிடம் ஏமாறுவது, ஆணவக் கொலைக்கு துணைப்போவது உட்பட பல சமூக விரோத பகுத்தறிவுக்கு எதிரான மனித நேயமற்ற செயல்பாடுகள் மிக குறைவு. பண்பட்ட சமூகவியலாளர்களாக உயர்ந்து நிற்கும் யாரையாவது நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றால் கேட்டுப்பாருங்கள். அவரிடம் பிரதானமாக புத்தக வாசிப்பும் ஒரு அன்றாட பழக்கமாக இருக்கும். தற்போதைய நிலவரம் வரை எந்தெந்த நூல்கள் வெளிவந்துள்ளன என்பதை அவரால் சொல்ல முடியும். ஒரு சமூகத்தின் ஆன்மா அங்கு வெளியாகும் வாசிக்கப்படும் புத்தகங்களில்தான் உள்ளது. தமது குழந்தைகளுக்கு விதவிதமான மின் அணு சாதனங்களை…

Read More

களத்தில் தோற்கடிப்போம்

களத்தில் தோற்கடிப்போம் ‘மக்கள் நலத்தை மறந்து முதலாளிய நலனை நோக்கமாகக் கொண்டது அரசு எனும் அமைப்பு. அப்படியான அரசு இறுதியில் தானே வாடி உதிர்ந்து போகும்‘ – கார்ல் மார்க்ஸ் ஒரே வருடத்தின் கணக்கெடுப்பு நம்மை அதிரவைக்கிறது. விவசாயிகளின் தற்கொலை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் வந்த விபத்தில் மாணவர் எண்ணிக்கை, பல்வேறு பாலியல் வன்முறைக்கு பலியான மாதர்களின் எண்ணிக்கை, கொலை கொள்ளை வழிப்பறி குற்றங்களின் மொத்த எண்ணிக்கை, குடல் மற்றும் மார்பு நோய்கள் புற்றுநோய் இவற்றால் வந்த மரணம் – இந்தப் பட்டியல்கள் யாவற்றிலும் தமிழகத்திற்கு முதலிடம். கடந்த சில பத்தாண்டுகளாகவே நமது நிலை இது தான். இன்று புதிதாக மாப்பிள்ளை பார்த்து அவரைப் பற்றி விசாரித்து திருமணம் முடிக்கும்போது எப்பவாவது பார்ட்டினா குடிப்பாரு…. மற்றபடி கெட்ட பழக்கம் கிடையாது என சொல்வது சர்வ சகஜமாகிவிட்டது. தமிழ்ச்…

Read More

புத்தகதினப் புயலாய் எழுவோம்

சமுதாயம் ஒரு பிரம்மாண்ட பள்ளிக்கூடமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். கற்றல், வாசிப்பு இவற்றை மக்கள் திரள் தனது சொந்த உடைமை ஆக்கிக் கொள்ள நாம் பணி செய்ய வேண்டும்… புத்தகங்களை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதே மக்களுக்குக் கற்பிப்பதில் மறைமுகமான வடிவம். நேரடி வடிவத்தைப்போலவே இதுவும் வலிமைமிக்க ஒன்றுதான். (சே-குவேரா) உலகில் இன்று பலவகை தினங்கள் கொண்டாடப்படுகின்றன. எல்லாவற்றிலும் சர்வதேச நாசகர சந்தை தனது ரத்தம் உறிஞ்சும் கபட நாடகத்தை அரங்கேற்றி விடுகிறது. யாவற்றையும் கடந்து உலக புத்தகதினம் வெல்லவேண்டி இருக்கிறது. வர்த்தக உலகம் இதைக் கண்டு கொள்ளாதது ஏன்? ஏனெனில் வாசிப்பு என்பது, வெறும் நுகர்வுலாப செயல்பாடு மட்டுமே அல்ல. அது கிளர்ச்சியைத் தூண்டக்கூடியது. எழுச்சியை விதைக்கவல்லது. கீழ்மை நோக்கிப் பொங்கிட மனதைத் தயார்ப்படுத்தும் இயல்பு மிக்கது. வால்டேர் மற்றும் ரூசோவின் புத்தகங்கள் பிரெஞ்சுப் புரட்சிக்கான கனவை…

Read More

பெண்… பெண்… பெண்..

“பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு, பொது போர்ப் பாசறை எனில் அது மிக அவசியமான நம் சாதனமாய் இருக்கும்” ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ் ((எனக்கு கோபம் ஏற்படுகிறது) – 1895 ஏப்ரல் 3, கடிதம்) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை தேசத்துரோகிகளாக சித்தரிப்பதன் பின்னணியில் உள்ள சதி மெல்லப் புலனாகும் இன்றைய சூழலில் வேறு எதைச் சொன்னாலும் தனக்கு எதிர்ப்பு உறுதி என அறிந்த பின் அந்த அறிவார்ந்த வளாகத்திலிருந்து ‘காண்டம்’ கிடைத்தது என்பது வரை அவதூறுகளை கூச்சமின்றி ஆளும் காவிபாசிசர்கள் வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். ஒருபுறம் ரோஹித் சுயகொலை மூலம் இந்த ஆளும் சக்தியான தலித் எதிர்ப்பு வெறியும், மறுபுறம் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் ஆபாச அநாகரீகத்தின் கோர நிழலும் நமக்கு எதிரியை அடையாளம் காட்டுகிறது. தேசஅளவில் இன்று மாணவர் அமைப்புகள் கிளர்ந்தெழும்…

Read More

காவி ‘அறிவியல்’ கயமை களைவோம்

மதத் திருவிழாக்களும் பண்டிகைகளும் முதலாளித்துவத்தின் வேட்டை நாய்கள் – காரல் மார்க்ஸ் நவீன அறிவியல் இன்று உலகையே மாற்றி உள்ளது. எத்தனையோ மூட-நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல், மனிதனை என்றென்றும் புவியின் ஆளுமை சக்தியாய் வளர்ச்சி காண வைத்தது. ஆயினும் இன்று மனிதன் எதிர்கொள்ளும் சோதனைகள் பல. புவிவெப்பமடைதல்; தாவர, விலங்கு பல்லுயிரி அழிவு; வேகமாய் அழியும் வெப்ப மண்டலக் காடுகள்; கைவிடப்படும் கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு; சரியான பாதுகாப்பு முறைகள் இல்லாத அணு உலைகள், அணுக்கழிவு பேராபத்துகள்; அச்சமூட்டும் நோய்ப் பரவல்; மூச்சு முட்டவைக்கும் நோய்த்தடுப்பு செலவினங்கள்; மாற்று வழி அறியாத எரிபொருள் புகைமூட்டம்; நில-மனிதஆக்கிரமிப்பு; நீர் நிலைகளை இரக்கமற்று சுரண்டுவது; பிளாஸ்டிக் கழிவுகளின் மண் உயிரி நஞ்சாக்கம்; மறுசுழற்சிக்கு அப்பாற்பட்ட உபயோக சந்தைப்பொருள் நெருக்கத்தால் குவிந்த குப்பை மலைகளால் மரணிக்கும் காற்று…. இப்படி அடுக்கிக்…

Read More

காவி ‘அறிவியல்’ கயமை களைவோம்

தலையங்கம் மதத் திருவிழாக்களும் பண்டிகைகளும் முதலாளித்துவத்தின் வேட்டை நாய்கள் – காரல் மார்க்ஸ் நவீன அறிவியல் இன்று உலகையே மாற்றி உள்ளது. எத்தனையோ மூட-நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல், மனிதனை என்றென்றும் புவியின் ஆளுமை சக்தியாய் வளர்ச்சி காண வைத்தது. ஆயினும் இன்று மனிதன் எதிர்கொள்ளும் சோதனைகள் பல. புவிவெப்பமடைதல்; தாவர, விலங்கு பல்லுயிரி அழிவு; வேகமாய் அழியும் வெப்ப மண்டலக் காடுகள்; கைவிடப்படும் கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு; சரியான பாதுகாப்பு முறைகள் இல்லாத அணு உலைகள், அணுக்கழிவு பேராபத்துகள்; அச்சமூட்டும் நோய்ப் பரவல்; மூச்சு முட்டவைக்கும் நோய்த்தடுப்பு செலவினங்கள்; மாற்று வழி அறியாத எரிபொருள் புகைமூட்டம்; நில-மனிதஆக்கிரமிப்பு; நீர் நிலைகளை இரக்கமற்று சுரண்டுவது; பிளாஸ்டிக் கழிவுகளின் மண் உயிரி நஞ்சாக்கம்; மறுசுழற்சிக்கு அப்பாற்பட்ட உபயோக சந்தைப்பொருள் நெருக்கத்தால் குவிந்த குப்பை மலைகளால் மரணிக்கும் காற்று…. இப்படி…

Read More

நூலகங்களை மீட்போம்: படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான்… அய்யோ என்று போவான்…

தலையங்கம் பெருமழை நமக்குக் கற்றுத்தந்த பாடங்கள் பல. மக்களுக்காக மக்களே என்பன போன்ற பேருண்மைகளை நமக்கு பேரிடர்மட்டுமே விவரிக்கமுடியும். சேகுவாரா சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. ‘ஆபத்தின்போது நண்பனை அறியலாம். பேராபத்தின்போது அரசை அறியலாம்’ மழை மேலும் சில மணி நேரங்கள் நீடித்திருந்தால் நம் மாநில தலைநகரம் முற்றிலும் அழிந்திருக்கும். வழக்கம் போல நீலிக்கண்ணீர் வடிக்கவும்… நிவாரணத்தை தர போஸ்கொடுப்பதும்… ஸ்டிக்கர் அரசியல், வெறுப்புத் தொலைக்காட்சிகள்… புதையுண்ட நகர்கள் முற்றிலும் அழிந்த குப்பங்கள்… இவற்றைத் தாண்டி இன்று மீட்கப்பட வேண்டியது மொத்தம் 1117 சிறு மற்றும் பெரு நூலகங்கள் ஆகும். அதிலும் 27 பொது நூலகங்கள் முற்றிலும் சிதைந்ததில் சுமார் 6 லட்சம் புத்தங்கங்களில் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட மிக முக்கிய ஆய்வு நூல்களும் அடக்கம். சென்னை, திருவள்ளூர், மற்றும் கடலுர் மாவட்டங்களில் தரைத்தள நூலங்கங்களில் பகுதியளவு நூல்கள்…

Read More

ஊடகங்கள் புத்தங்களை புரட்ட வேண்டும்

என் தலைமுறை அழுகின்றது இது யாருடைய தவறு? ஒடுக்கப்பட்டது எங்கள் எழுத்து.. சிந்தனை.. வாழ்க்கை.. இது யாருடைய தவறு.. பல்கிப் பெருகியது சீரழிவு – ஆர்காதி குத்தீலவ் (1940 – 85) (ரஷ்ய கவிஞர்)  காந்தி ஜெயந்தி முதல் அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரை விடுமுறை சிறப்பு நிகழ்ச்சிகள் எனும் பெயரில் ஊடகம் மேற்கொள்ளும் கலாச்சார சீரழிவு பற்றிய வெறுப்புணர்வு இல்லாமலில்லை. கேட்டால் விளம்பரதாரர்கள் வழங்குகிறார்கள்; வெகு மக்கள் ரசிக்கிறார்கள், என வெட்கம் இல்லாமல் பதில் வருகிறது. தமிழகம் முழுவதும் புத்தக வாசிப்பு பரவி வருகிறது. பெரு நகரங்கள் வளர் – நகர்ப்புறங்கள் மாவட்டத் தலை நகரங்கள் என புத்தகத்  திருவிழாக்கள் இன்று நடக்காத மாதமில்லை.. நடக்காத ஊருமில்லை. எனினும் இவைகுறித்து குறிப்பாக தொலைக்காட்சிச் சானல்கள் எதையுமே கண்டு கொள்வது கிடையாது.  நூல் நயம் பாராட்டல்,…

Read More

குழந்தைகளைக் கொண்டாடுவோம்…

பசியாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் பெருமளவில் பின்தங்கிய ஒன்றாகவே இந்தியக் குழந்தை உள்ளது… அதன் உலகம் வெறுமைமிக்கது.               – அமர்தியா சென் இதோ அடுத்த குழந்தைகள் தினம் வந்துவிட்டது. நேரு என்னவெல்லாம் செய்தார்… என்னவெல்லாம் சொன்னார்… என்பதிலிருந்து குழந்தைகள் கார்ட்டூன்… பள்ளி நிகழ்ச்சி, ஏன் எஃப்.எம் வானொலி கருத்து கேட்பது… குழந்தை வளர்ப்பு பற்றி நிபுணர்களின் டி.வி. நேரடி கேள்வி பதில்… அது இது என களமிறங்கப் பலரும் தயார்… ஸ்பான்சர் (அல்லது பவர்டு  பை) செய்ய சாக்லெட், ஐஸ்கிரீம், குளிர்பானம் முதல் பீஸா வரை தயாரிக்கும் கார்ப்பரேட் கம்பெனி எல்லாம் தயார்தான். ஆனால் இதெல்லாம் எந்தக் குழந்தைகளுக்காக? சராசரி பள்ளி நாளில் வேலைக்கு அனுப்பப்படும் குழந்தைகள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம்… அதிலும் 100 பேர் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தால் 43 பேர் எட்டாம் வகுப்பு வராமலேயே இடையில்…

Read More