You are here

தாய்மொழிக் கொள்கையை வலியுறுத்துவோம்

தாய்மொழிக் கொள்கையை வலியுறுத்துவோம் தமிழகஅரசின் கல்விக்கொள்கை பற்றிய பல கேள்விகள் எழுகின்றன.மத்தியஅரசு தனது கல்விக்கொள்கையை வெளியிட்டு பல பிரச்சனைகளைக் கிளப்பியிருப்பதையும் காண்கிறோம். கல்வியைக் காவிமயமாக்கல், நாலாம் வகுப்பிலேயே தேர்ச்சி/தோல்வி மூலம் சலித்தெடுத்தல், எட்டாம் வகுப்பில் குடும்பத்தொழிலில் பயிற்சி என பல பிற்போக்கான முரட்டு அம்சங்கள் அதில் இருந்ததால் நாடுமுழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது. மத்திய அரசு சமஸ்கிருதமயமாக்கல், இந்திமொழித் திணிப்பு என பல வில்லங்கங்களைச் சத்தமில்லாமல் இன்று செய்து வருகிறது.எல்லா அம்சங்களையும் போலவே கல்வியிலும் ஜனநாயகப் படுகொலையையே அது அரங்கேற்றிவருகிறது. இந்த நெருக்கடியான சூழலிலும் தமிழகஅரசு திரு. த.உதயச்சந்திரன் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் பள்ளிக்கல்வியில் மாற்றங்களைக் கொண்டுவர பிடிவாதமாகக் களத்தில் இறங்கியது. முற்போக்கான தெளிந்த கல்விசார் சிந்தனைகளுடன் கலைத்திட்ட வடிவமைப்புக்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றன; நடைபெற்றும் வருகின்றன. பொதுவாக, பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்போது, நாம்…

Read More

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு நூலகம்

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு நூலகம் தன் குழந்தையை பெரிய மருத்துவ அறிஞர் ஆக்க வேண்டும். விஞ்ஞானி ஆக்க வேண்டும். அவர் பேரும், புகழும் பெற்று பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆர்வமிக்க பெற்றோர்கள் அவர்களுக்கு கோடி கோடியாய் செலவு செய்ய வேண்டியதே கிடையாது. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவதை அவர்களது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கினாலே போதுமானது. – அமர்த்தியாசென் குழந்தைகளுக்கு வாசிப்பு அனுபவத்தைத் தரவேண்டிய முறை அவர்களை தகவல் மனப்பாட மிஷின்களாக மாற்றிவிடுவது துரதிர்ஷ்டமானதுதான். முன்புபோல புத்தக வாசிப்பு குழந்தைகளிடம் இல்லை.. அவர்கள் விளையாடுவதும் இல்லை. சதா தொலைக்காட்சி அல்லது வீடியோ கேம்… என பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். வாசிக்கமாட்டார்கள்.. பேப்பர்கூட படிக்கமாட்டார்கள். பெரியவர்கள் சதா வாட்ஸ் அப் உலகில் அமிழ்ந்தால் பிள்ளைகள் மட்டும் வாசிப்பார்களா என்ன? இப்படி ஒரு எதிர்ப்பாட்டு… ஆனால் சத்தமில்லாமல்…

Read More

வாசிப்போடு வரவேற்போம் ஆசிரியர் தினத்தை

வாசிப்போடு வரவேற்போம் ஆசிரியர் தினத்தை இதோ இன்னோர் ஆசிரியர் தினம் வந்துவிட்டது. கல்வியில் அனைத்து சமூக ஆர்வலர்களும் முன்மொழியும் ஒரு பிரதான மாற்றம் குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பை அறிமுகம் செய்வது பற்றியது ஆகும். பாடப்புத்தகச் சுமையின் இரக்கமற்ற திணிப்பால் புத்தகம் என்றாலே ஒரு வகை அச்சமும் தயக்கமும் அவர்களிடம் குடிகொண்டு விட்டது. வாசிப்பு உலகமே தனது சாகசங்களும் அறிவுப் புதையலுமாய் அவர்களுக்காகவே காத்திருக்கிறது. புத்தகங்களை வாசிக்கும் ஒரு செலவில்லாத, ஆனால் மிகவும் பாதுகாப்பான பொழுதுபோக்கு அவர்களுக்கு அறிமுகமாவதற்கு முன்னதாகவே வீடியோ விளையாட்டுகளும் உடலைக் கொல்லும் கார்ப்பரேட் ரக தின்பண்டங்களும் அறிமுகமாகி விடும் அவலத்தை நாம் நமது கல்வி மாற்றங்கள் வழியே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். புளூவேல் வீடியோ விளையாட்டின் மூலம் குழந்தைகளை தற்கொலை செய்து கொள்ள நஞ்சை கொடுத்திருக்கிறார்கள். இன்று நகர்ப்புற பள்ளிகளில் பல குழந்தைகள்…

Read More

மாற்றம் ஒன்றே மாறாதது

மாற்றம் ஒன்றே மாறாதது “கல்வியையும்,மருத்துவ சேவையையும் எல்லா மக்களுக்கும் ஒரே தரமான,விலையற்ற உரிமையாக நிலை நாட்டுவதைத் தன் கடமையாகக் கொள்ளும் அரசே உண்மையான ஜனநாயக அரசு.” – அமர்தியாசென் (பொருளாதார அறிஞர்) தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறையில் நடந்துவரும் அதிரடி மாற்றங்கள் மக்களிடையே மாறுபட்ட கருத்துகளை ஏற்படுத்தியுள்ளன.என்றாலும் பொதுவாக பதட்டத்தில்றோர்கள்.-குறிப்பாக மத்தியதர வர்க்கம். மதிப்பெண்களைத்துரத்தும் மன அழுத்தத்தில் குழந்தைகள்.துருப்பிடித்து முனை மழுங்கிய கல்விமுறை.இந்தச்சூழலைச் சாதகமாக்கி பணக்கொள்ளையில் ஈடுபடும் தனியார் கல்வி நிறுவன முதலாளிய வர்க்கம்-என இவ்வாறு முடியாமற் தொடரும் அவலத்தின் பெயர்தான் தமிழகத்தின் கல்வி.நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அரசாங்கத்தின் இலவசக்கல்வி இருக்கிறது.ஆனால் அதனை வெகுமக்களுக்குக் கொண்டு சேர்க்காமலேயே கல்வி உரிமைச்சட்டம் பல்பிடுங்கப்பட்டு விட்டது. தியகல்விக்கொள்கை என்கிற பெயரில் கார்ப்பரேட் – காவிக்கூட்டணிக் கல்வியில் குலக்கல்வி முதல் பகவத்கீதை பஜனைவரை மோடியின் மோசடி மறுபுறம். இதற்கு நடுவில் ரேங்க் அடிப்படையில் பொதுத்தேர்வு…

Read More

மே தினத்தில் சூளுரைப்போம்!

நாம் போராட்டக் களத்தில் இறங்குவதற்கு இத்தனை வலுவான காரணங்கள் முன் எப்போதும் இருந்தது இல்லை. – சே குவாரா முதலாளித்துவ சமூகத்தின் மதம் எப்படி ஒடுக்குமுறைக்கான சாதனமாய்- ஆயுதமாய் உள்ளது என்பதை இதைவிடக் கண்கூடாக நிரூபிக்க முடியாது.சனாதனமும் நுகர்வு மயமும் மூலதன முதலைகளும் ஒன்றிணைந்த பிரமாண்ட சதிக்கும்பல் இன்று நவீன யுக்திகளுடன் பெரும் சுரண்டலில் நமது நாட்டை வீழ்த்தி இருப்பது நம் கண்முன் இருக்கும் சவாலாகும்.ராமருக்கு கோயில், பசுக்களுக்கு ஒரு பட்ஜெட், மத அடிப்படைவாத கலாச்சாரக் காவல்படை,ஆர்.எஸ்.எஸ். நடத்தும் நம்ம உள்ளூர்ப் பேரணி என்பதெல்லாம் இதுவரை இந்தியா சமீப காலத்தில் கண்டிராத பாசிசப் பாய்ச்சல்.சமூக வலைத்தளங்கள் முதல் நமது குழந்தைகளின் வகுப்பறை வரை இந்தி மொழியும், அதன் இலவச இணைப்பாக சமஸ்கிருத வேதக்கல்வியும் யோகா வகுப்பும் பெரும் (பிரச்சார)புயலாகச் சுழன்று சுழன்று வீசுகின்றன.இஸ்லாமிய மத எதிர்ப்பு எனும்…

Read More

வாசிப்புப் புரட்சியே வருக……..!

வாசிப்புப் புரட்சியே வருக……..! “மனிதகுலம் நீடித்திருக்கவும் மேலும் உயரவும் ஒரு புதுவகையான சிந்தனை தேவை.இளைஞர்களிடம் செல்லுங்கள்.அவர்கள் வாசிக்கட்டும்….”. ­- ஐன்ஸ்டீன் (லியோ ஹீபர்மேனுக்கு எழுதிய கடிதம்.) சமூக விடுதலை எனும் பிரமாண்ட தொடர்வேட்கையின் தூண்கள் என்று புத்தகங்கள் வர்ணிக்கப்படுகின்றன.காலம் காலமாக மனித இனம் சேமித்த புதையலான நூல்களைத் தேடி வாசித்தலே எந்த சமூக எழுச்சிக்கும் தனிச்சிறப்பான குணாம்சங்களை வழங்க முடியும் என்பதற்கு வரலாற்றில் சாட்சிகள் பல. மாவீரன் தோழர் சேகுவாரா புரட்சியின் ‘தனிச்சிறப்பு’ குறித்துப் பேசும்போது மக்களைத் தயார்படுத்தும் அரசியல் கொந்தளிப்புகளை உருவாக்கும் சக்தி சரியான ‘வாசிப்பிற்கே’ உண்டு என கருத்துரைத்தார். வாசிப்பின் முழுச்சுதந்திரத்தை உணர்ந்து தங்களை நூலகமேசைகளின் பகுதியாகவே நினைத்த, தேடலில் சிறந்த சிந்தனைவேந்தர்கள் பெரிய வழிகாட்டிகளாக ஆசான்களாக மாறி சமூகத்தையே வழிநடத்தினார்கள். வால்டேர், ரூசோ விதைத்த நூல்களே பிரஞ்சுப் புரட்சியைச் சாதித்தன. மார்க்ஸும்,ஏங்கல்ஸும் புத்தகங்களின்…

Read More

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம்…

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம்… உலகின் அனைத்துத் தங்க சுரங்கங்களிலும் இருந்து வெட்டி மொத்தமாக எடுத்த புதையலை விட அதிக செல்வம் புத்தகங்களுக்குள் புதைந்து கிடக்கிறது. – வால்ட் டிஸ்னி மனித வரலாற்றின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம்தான். ‘ புத்தகமே இல்லாத குழந்தைதான் உலகில் உண்மையான அனாதை குழந்தை என்பார் சிஸெரோ. இன்றைய சமூகத்தின் பல்வேறு அவலங்களுக்கான ஒற்றைத் தீர்வு புத்தக வாசிப்பை பரவலாக்குவதுதான் என்பது ஐ.நா. சபையின் சமீபத்திய அறிக்கையின் சாராம்சமாகும். அதிலும் குறிப்பாக நம் இளைய தலைமுறை வாசிப்பதை நாம் உறுதிசெய்யும் ஒரே செயல் மட்டுமே. நோபல் பரிசு உட்பட பெறும் குழந்தைகளாக, படைப்பாக்க உறுதி மிக்கவர்களாக அவர்களை மாற்ற முடியும். மனதை கட்டுப்படுத்துதல், தீய பழக்கங்களுக்கு ஆட்படாதிருத்தல், இலக்கை, லட்சியங்களை உருவாக்குதல், அதற்காக முழு ஈடுபாட்டுடன் உழைத்தல் எனும் வட்டத்தில் வாசிப்பு…

Read More

‘புதிய கல்விக் கொள்கை’ – எதிர்ப்பு ஆசிரியர் தினம்!

காலங்காலமாக ஆசிரியர்கள் சமூகத்தின் மாற்றங்களை கிரியா ஊக்கியாய் இருந்து சாதித்து வருகிறார்கள். அவர்களைக் கொண்டாடும் ஆசிரியர் தினத்தை குரு உஸ்தவ் ஆக்கி, அதில் காவி பூசிய அரசியல் மிகவும் ஆபத்தானது. முப்பதே சதவிகித ஓட்டுகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த இந்துத்வாவாதிகள் இன்று மற்றொரு ஆயுதத்தை மக்களுக்கு எதிராக கையிலெடுத்து இருக்கிறார்கள். ‘புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் கார்பரேட் தனியார் மய கொள்ளையர்களோடு கைகோர்த்து கல்வியை இந்துமத குருகுலமயமாக்கிட பெருஞ்சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாட்டிறைச்சி அரசியலும், பல்கலைக் கழகங்களை சாமியார் மயமாக்கும் முயற்சியும் படுதோல்வியில் முடிந்ததால், அடுத்து கல்வியைக் கையிலெடுத்திருக்கும் இந்த அரசு, தலித்துகள், உழைக்கும் அடித்தள மக்கள் மத்தியில் கடும் சுரண்டலை ஏறக்குறைய குலக்கல்வி முறையை முன்மொழிந்து நூற்றாண்டுகாலப் போராட்டங்களை நீர்த்துப் போக வைக்கும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. தாய்மொழிக் கல்வி, உலகளாவிய அறிவியல் கல்வி, என…

Read More

மக்கள் வாசிப்பு – புதிய நம்பிக்கை

நமது சமூகத்தின் நெருக்கடிகள் புரையோடி ஆழமாய் பதிந்து மக்கள் கொந்தளிப்புகளாய் வெடிக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை எப்படியாவது நெரித்து ஜனநாயகப் படுகொலைகளைத் தொடர்ந்திட ஆளும் இந்துத்துவ சங்க பரிவாரங்கள் ஆட்சி அதிகாரத்தின் துணையோடு நாட்டையே பிளவுபடுத்தி ரத்தம் குடிக்க துடிக்கின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் முதல் பூனே திரைபடக் கல்லூரிவரை எங்கெங்கும் மாணவர் போராட்டங்கள் மற்றும் புகழ்பெற்ற மாபெரும் அறிஞர்களின் எதிர்ப்புகளையும் மீறி, தகுதியற்ற இந்து வெறியர்கள் பெரிய பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள். தமிழகத்தில் ரயில் நிலையங்களில் பட்டப் பகலில் கூட பெண்கள் பத்திரமாக வேலைக்குப் போகும் பாதுகாப்பு தர வக்கற்ற காவல்துறை, சுவாதி கொலையை அரசியல் ஆக்கி சாதிக்கான நீதியாய் பரிகசிக்க வைத்திருக்கிறது. எந்த நெருக்கடி வந்தாலும் மக்களைப் பிளவுபடுத்தும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சிக்கு இதுவே உதாரணம். சாராய விற்பனை, தேர்தலுக்குப் பிறகு மூன்று…

Read More

புத்தகக் கண்காட்சியை பள்ளி – கல்வியின் அங்கமாக்குவோம்

வாசிப்பே அறிவின் ஒற்றை வாசல்…  புத்தகமே திறவுகோல். – கொரிய பழமொழி பள்ளிக்கூடங்களைத் திறந்து ஒரு மாதமாகிறது. தேர்ச்சி சதவிகித சர்ச்சைகளும் சப்தங்களும் இன்னமும் ஓயவில்லை. நமது கல்வியைப் பிடித்தாட்டும் பிசாசாக தேர்வுகள் இன்னமும் தொடர்கின்றன. எப்படியாவது காவியை கல்வியில் கலந்துவிட பலவகையில் சதித் திட்டங்களுடன் மோடிபரிவாரம் களத்தில் குதித்திருக்கிறது. ஏதாவது ஒரு வழியில் லேசான சந்து கிடைத்தால்கூட போதும் அவர்களுக்கு! ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹேட் கேவரின் நினைவுதினம் ஜூன் 21. அதை சர்வதேச யோகா தினமாக்கியது சமீபத்திய சாட்சி. பள்ளிக்கூடங்களுக்குள் எப்படி நுழைய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். மனதை ஒருநிலைப்படுத்துவது, யோகா என்பதில் சூட்சுமமான அரசியலின் கோர துவேஷம் அதன் நூற்றாண்டுகால இந்துத்துவா நெடியில் ஒளிந்திருக்கிறது என்றால் இல்லை விஞ்ஞான பூர்வமானது. அது இது.. என்று நவீன மூலாம் பூசிட இன்று எல்லாரும் தயார்….

Read More