You are here
கட்டுரை 

படைப்பாளியின் ஞானமும், பல்துறை அறிவும் படைப்புகளில் வர வேண்டும்

சா. தேவதாஸின் மொழிபெயர்ப்பு நூல்களை முன்வைத்து…. கமலாலயன் விருதுநகர் மாவட்டத்துச் சிற்றூரான நடையனேரியிற் பிறந்தவர் சா.தேவதாஸ். ராஜபாளையத்திலிருந்து 50 கி.லோமீட்டர் தூரத்துக்குள் அமைந்திருக்கும் ஊர் அது. அங்கு உயர்நிலைப்பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். விருதுநகரில் கல்லூரிப் படிப்பு. மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆர்வமில்லாமலே கூட்டுறவுத்துறையில் பயிற்சி பெற்று துணைப் பதிவாளர் பொறுப்பு வகித்தவர். இலக்கிய ஆர்வமும், வாசிப்புப் பழக்கமுமே இவரை மொழி பெயர்ப்புகளில் ஈடுபடச் செய்தது. முதன் முதலில் சா.தேவதாசைச் சந்தித்த நாள் மனதில் அழியாத சித்திரமாய்ப் பதிந்து கிடக்கிறது. வேலூரில் தொழிற்சாலையொன்றில் டூல் ஃபிட்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். இலக்கியமே ஆர்வம். தொழிற்சாலையில் ‘உழன்று’ கொண்டிருந்தபோது ஆசுவாசமளித்தவை புத்தகங்களே. எழுதுவோரைச் சந்தித்துப் பேசுதல் இளைப்பாற உதவியது. சா.தேவதாசின் வாசிப்பு ஆழம் குறித்து என்னிடம் முதலில் சொல்லி அறிமுகப்படுத்தியவர் கோணங்கி. தேவதாசைச் சந்திக்க…

Read More
கட்டுரை 

முதல் வட்டார வழக்குச் சொல்லகராதி

சே. திருநாவுக்கரசு முன்னுரை வழக்காறுகள் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு என இருவகைப்படும். இளம்பூரணர் “வழக்காறு இருவகைப்படும்; இலக்கண வழக்கும், இலக்கணத்தோடு பொருந்தியன மரூஉவழக்கும் (வாழ்வியல் சொற் களஞ்சியம், தொகுதி 14, ப.353) என்கிறார். கல்லாடர் “இலக்கணத்தோடு பொருந்தின மரூஉ வழக்குமென இருவகைப்படும் (கல்லாடர், தொல்.சொல்.17) என்கிறார். எனவே இலக்கணமில்லாததைப் பேச்சு வழக்கு என்றும், இலக்கணமுடையதை எழுத்து வழக்கு என்றும் பாகுபாடு செய்யலாம். மொழி காலத்திற்கேற்ப மாறுவதோடு நில்லாமல் இடத்திற்கேற்பவும் (REGIONAL DIALECT) சமுதாயத்திற்கேற்பவும் (COMMUNAL DIALECT) மனிதனின் வாழ்வியல் போக்குகளுக்கு ஏற்பவும் மாறுபடுகின்றது. இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் பல்வேறு வடிவங்களை வட்டார வழக்குகள் எனலாம். வட்டார வழக்காறுகளின் களமான “வட்டாரம் என்பது ஒரு பெரும் நிலப்பரப்புக்குள் அடங்கிய சிறு பகுதியாகும். ஒத்த, விரிந்த ஒரு பெரிய நாட்டில் எல்லா பகுதிகளுமே பரந்த தன்மையானதாய் இருப்பதில்லை…

Read More

மூட்டைப்பூச்சி பேசுகிறேன்…

கதிரவன் வணக்கம் நண்பர்களே… என் பெயர்தான் மூட்டைப்பூச்சி. என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்றாலும் எங்கள் மூட்டைப்பூச்சி இனத்தைப் பற்றி உங்களிடம் கொஞ்சம் சொல்ல ஆசைப்படுகிறேன். நாங்கள் பல வகைப்பட்டவர்கள். சிறகுகள் உள்ள மூட்டைப்பூச்சிகளும் இருக்கின்றன. அவற்றின் முன்புறத்திலுள்ள இரண்டு சிறகுகளும் உறுதியுடன் இருக்கும். செடிகளின் தண்டையோ பிராணிகளின் தோலையோ துளைக்குமளவு தலையின் முன் பகுதி கொடுக்கு போன்றிருக்கும். வாய்ப் பகுதி, செடித் தண்டுகளில் உள்ள நீரையோ பிராணிகளின் ரத்தத்தையோ குடிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கும். நாங்கள் பெரும்பாலும் தரையில் வாழ்பவர்கள்தான். தண்ணீரில் வாழும் என்னைப்போன்ற மூட்டைப்பூச்சிகளை ஆங்கிலத்தில் Bed bugs என்று சொல்வார்கள். அதாவது, வீட்டில் படுக்கைகளில் காணப்படும் மூட்டைப்பூச்சிகள். எங்களின் அறிவியல் பெயர் ‘Cimex’ என்பதாகும். படுக்கைகளில் வாழ்கின்ற எங்களைப்போன்ற மூட்டைப்பூச்சிகளெல்லாம், மற்ற பிராணிகளுடன் ஒப்பிடும்போது உருவத்தில் மிகவும் சிறியவை. எங்கள் உடல்…

Read More

எதிரொலி

மஞ்சுளா சித்திரங்கள்: கி. சொக்கலிங்கம் சிறுமி மீனா தன் பெற்றோருடன் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்தாள். அவள் வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பழத் தோட்டம் இருந்தது. அங்கே விழுந்து கிடக்கும் பழங்களைப் பொறுக்குவதற்காக மீனா தினமும் அங்கே செல்வது வழக்கம். அன்றும் மீனா, பழங்கள் பொறுக்குவதற்காக ஒரு கூடையுடன் தோட்டத்துக்குப் புறப்பட்டாள். அவள் அம்மா, “சீக்கிரம் வந்துவிடு, மீனா” என்று சொல்லி அனுப்பினார்கள். தோட்டத்துக்கு வரும் வழியில் ஒரு பெரிய ஆறு இருந்தது. ஆற்றோரம் இருந்த மரத்தின் கிளையைப் பிடித்து தொங்கி விளையாடினாள் மீனா. அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், பிடி வழுக்கி ‘தொப்’ என்று தண்ணீரில் விழுந்துவிட்டாள். அப்போது அந்தப் பக்கம் வந்தான் பாபு. அவன் மீனாவின் நண்பன்தான். அவளுடன்தான் மூன்றாம் வகுப்பில் படிக்கிறான். தான் கீழே விழுந்ததை அவன் பார்த்துவிட்டானே…

Read More
கட்டுரை 

உழைப்பாளர் தினம் ஏன் கொண்டாடுகிறோம்? அமிதா

மே 1-ம் தேதி உழைப்பாளர் நாளாகக் கொண்டாடுகிறோம். அது வெறும் விடுமுறை நாள் மட்டுமா? ஒவ்வொரு கொண்டாட்டத்துக்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது. இன்றைக்கு நம் அப்பா, அம்மா உள்ளிட்ட அனைவரும் எட்டு மணி நேர வேலைக்குப் போகிறார்கள். நமக்கும்கூட பள்ளி வகுப்புகள் அதிகபட்சமாக எட்டு மணி நேரமே நடக்கின்றன. இந்த எட்டு மணி நேர வேலை முறையை நடைமுறைப்படுத்த பலர் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் போராடியிருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களை நினைவுகூரும் விதமாகவே மே 1-ம் தேதி உழைப்பாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கட்டுப்பாடில்லா வேலை 19-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள், பணியிடங்களில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம்தான் வேலை பார்க்க வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. ஒரு நிறுவனம் அல்லது முதலாளி எவ்வளவு வேலை வாங்க நினைக்கிறோரோ, அவ்வளவு மணி நேரம் தொழிலாளிகள் உழைக்க வேண்டியிருந்தது….

Read More
கட்டுரை 

ஆடும் புலியும் நண்பர்கள்

பொன்னி அமுரும் திமுரும் இப்போது நண்பர்கள். அதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா அமுர் (Amur) என்பது ஒரு சைபீரியப் புலி. திமுர் (Timur) என்பது ஆடு. ரஷ்யாவில் விளாடிவஸ்டோக் (Vladivostok) நகரத்துக்குப் பக்கத்தில் உள்ள விலங்குக் காட்சிச் சாலையில்தான் இந்த சம்பவம் நடந்தது. அங்கே அமுருக்கு வாரத்துக்கு இரண்டு முறை உயிருள்ள ஆடுகளை உணவாகக் கொடுப்பது வழக்கம். அப்படித்தான் ஒரு முறை அமுருக்கு திமுரைக் கொடுத்தார்கள். ஆனால், புலிக்கு முன்னால் சென்ற ஆடு பயப்படவில்லை. அது புலியின் முகத்தில் தன் கொம்புகளால் உரசியது. புலிக்கும் ஆட்டை மிகவும் பிடித்துவிட்டது. பிறகு இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து நடந்து திரிந்தன. இவற்றின் நட்பைப் பார்ப்பதற்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்தார்கள்.

Read More
கட்டுரை 

வலசை போகும் பறவைகள் டி.எஸ். ராஜஸ்ரீ

ஒரு பிரதேசத்தின் பருவ நிலை மாற்றமடைகிறது. இதனால் அங்கே சூழ்நிலையும் மாற்றமடைகிறது. இந்த சூழ்நிலை மாற்றம், தாங்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லாதபோது அங்குள்ள பறவைகள் தங்களுக்குத் தகுந்த இடத்தை நோக்கிப் பறந்துபோகின்றன. இதைத்தான், பறவைகள் ‘வலசை’ (Migration) போவது என்பார்கள். துருவப் பிரதேசங்களில் கடுங்குளிர் நிலவும்போது வெப்பமான இடங்களைத் தேடி பறவைகள் பயணிக்கின்றன. கடுங்குளிரும் அதனுடன் ஏற்படும் உணவுப் பஞ்சமும்தான் இந்தப் பயணத்துக்குக் காரணம். தாங்கள் இருக்கும் இடத்தில் இல்லாத தங்களுக்குப் பிடித்தமான உணவு வேறு இடத்தில் இருக்கும்போதும் பறவைகள் அந்த இடத்தை நோக்கிப் பயணிக்கக்கூடும். பகல் பொழுதின் நீளத்தில் ஏற்படும் மாற்றமும் பறவைகளின் இனப்பெருக்க காலமும் வலசை போவதற்கான மற்ற காரணங்களாக நம்பப்படுகின்றன. ஒரு பிரதேசத்திற்குள் ஆரம்பித்து அந்தப் பிரதேசத்துக்குள் முடிந்துவிடும் வலசையும் உண்டு. அதே நேரத்தில் பறவைகள், ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கும் பயணிக்கின்றன….

Read More
கட்டுரை 

பெட்ரோலியம்

தகவல் துளிகள் உலகத்தில் பெட்ரோலியம் உற்பத்தியில் ‘சவுதி அரேபியா’தான் (Saudi Arabia) முதலிடம் வகிக்கிறது. லத்தீன் மொழியில் உள்ள ‘பெட்ரா’ எனும் வார்த்தையிலிருந்துதான் ‘பெட்ரோலியம்’ எனும் பெயர் வந்தது. ‘பெட்ரா’ எனும் வார்த்தைக்கு ‘பாறை’ என்று பொருள். பெட்ரோலியம் திட உருவில் இருக்கும் நிலையில் அதற்கு ‘அஸ்பால்ட்’ (Asphalt) என்று பெயர். அரை திட நிலையில் பெட்ரோலியத்துக்கு ‘பிட்டுமின்’ (Bitumen) என்று பெயர். உலகத்திலேயே மிகப் பெரிய எண்ணெய்ச் சுரங்கம் ‘கல்ஃப் ஆஃப் மெக்சிகோ’ (Gulf of mexico) வில் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் இடம் சவுதி அரேபியாவில் உள்ள ‘காவர் பீல்டு’ (Ghawar Field) எனும் பிரதேசமாகும். இங்கிருந்து ஒரு நாளுக்கு ஐம்பது லட்சம் பீப்பாய் (Barrel) எண்ணெய் எடுக்கிறார்கள். உலகில் ஒரு நாளுக்கு 13.5 கோடி பாரல் பெட்ரோலியம் எடுக்கப்படுகிறது….

Read More
கட்டுரை 

கதை கேட்டு உறங்கும் வண்ணாத்திப் பூச்சிகள்

மணிமாறன் மொழிகள் யாவற்றிற்கும் மூத்தவை கதைகள். மொழியற்ற நிலத்தில் எண்ணங்களைப் பாவனையாக்கிப் பகிர்ந்த ஆதிக்கதைசொல்லிகள் குழந்தைகளாகத்தான் இருக்கவேண்டும். பரமார்த்த குரு கதைகளுக்குள் இருந்தும், விக்ரமாதித்யனின் பதுமைகளுக்குள்ளிருந்தும் உருவானவையே தமிழ்ச் சிறுகதைகள். தனக்குள் தன்னையே மாற்றி மாற்றி வேறு ஒன்றாக்கித் தொடரும் தமிழ்ச் சிறுகதைகளுக்குள் குழந்தைகள் ஓடித்திரியும் பெரும்நிலம் ஒன்று விஸ்தாரமாக விரிந்து விரிந்து படர்கிறது. புதுமைப்பித்தனின் கதைகளுக்குள் தத்துவ தர்க்கங்களை நிகழ்த்திட எப்போதும் அவர் குழந்தைகளைத்தான் பெரிதும் நம்புகிறார். ஏன் என்பதையும் கூட அவரே தன்னுடைய ‘சாமியாரும் குழந்தையும் சீடையும்’ கதையில் சொல்கிறார். சாமியாரின் வலது பக்கத்தில் ஒரு சின்னக்குழந்தை, நான்கு வயதுக் குழந்தை. பாவாடை முந்தானையில் சீடை மூட்டை கட்டிக்கொண்டு படித்துறையில் உட்கார்ந்துக் கொண்டு காலைத் தண்ணீரில் விட்டு ஆட்டிக் கொண்டிருந்தது. சின்னக் கால்காப்புகள் தண்ணீரிலிருந்து வெளிவரும் பொழுது ஓய்ந்து போன சூரிய கிரணம் அதன்…

Read More
கட்டுரை 

உலக மக்களின் வரலாறு

பேரா கா. அ. மணிக்குமார் “உன் வயதில் நான் விரும்பியதைப்போல் நீயும் வரலாற்றை விரும்புவாய் என நினைக்கிறேன். ஏனெனில் அது மனிதர்களைப் பற்றியது. எந்த அளவிற்கு மனிதர்கள் ஒன்றிணைந்து பணி செய்கிறார்களோ, போராடுகிறார்களோ, வாழ்வை மேம்படுத்த முயற்சிக்கிறார்களோ, அந்த அளவுக்கு கூடிவரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் பற்றியது வரலாறு, அவையெல்லாம் உன்னை மற்ற எதையும்விட மிகவும் அதிகமாக மகிழ்விக்கத் தவறாது” அந்தோனியோ கிராம்சி தன் இளம் வயது மகன் டெலியோவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் காணப்படும் வரிகள் இவை. வரலாறு இவ்வாறு புரட்சியாளர்களுக்கு ஓர் உயிரோட்டமளிக்கும் பாடமாக இருக்கும்போது, அது ஆளும் வர்க்கத்திற்கு அபாயமாகத் தெரிகிறது. வரலாறு ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்துகிறது. நெஞ்சில் நெருப்பை வார்க்கிறது. எனவேதான் தங்களுக்கு சாதகமாக ஆளும் வர்க்கத்தினர் வரலாற்றைத் திரித்து எழுத முயல்கின்றனர். தவறான வரலாறு (False History) இந்தியாவில் மக்களது ஒற்றுமைக்கும்…

Read More