You are here
கட்டுரை 

நதிகள்

மழை பெய்யும்போது தெருவில் நீர் வழிந்தோடுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி நீர் ஓடுவதைப் பார்த்தே, நதி எப்படி உருவாகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ளலாம். மழை நீர் ஒன்று சேர்ந்து சிறுசிறு ஓடைகளாகிறது. இந்த ஓடைகள் மேலும் சில ஓடைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய நீரோட்டமாகிறது. இதைப்போலத்தான், மலைகளிலும் குன்றுகளிலும் பெய்யும் மழை நீர், பல சிறு ஓடைகளாக ஓடி, பிறகு ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெரிய நதியாக உருவாகிறது. நதிகள் பெரும்பாலும் மலைகளில்தான் உற்பத்தியாகின்றன. சில சமயம் நீர் ஊற்றுகளும் ஆறாக ஓடுவது உண்டு. இமயமலைபோன்ற பகுதிகளில் சூரிய வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகி, அந்த நீர் நதியாகப் பாய்கிறது. ஆகவே, பனிக்கட்டிகளும் நதிகளை உருவாக்குகின்றன. பெரிய நதிகளுடன் வந்து கலக்கும் சிறு ஆறுகளுக்கு ‘உபநதிகள்’ (Tributary) என்று பெயர். பெரிய நதிகளிலிருந்து சில ஆறுகள் கிளையாகப் பிரிந்து செல்வதும்…

Read More

புத்தகப் பயணம்

தங்கவேலு   புத்தகப் பயணம் கோவை மாவட்டத்தில் தொடங்கி கரூரில் மிகவும் உற்சாகத்துடன் முடிவு பெற்றது. கோவையில் பாண்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பேரா. மோகனா மாநில தலைவர் (TNSF) தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தொடக்க விழாவில் பாதுஷா (மா.செயலாளர்), கோவை மாவட்ட நிர்வாகிகள் ராஜாமணி, V.G பாலகிருஷ்ணன் (செயலாளர்), மெகமோனிஷா (பொருளாளர்), கண்ணபிரான், மணி, சு. சரவணன், விசுவநாதன், தாமிரபரணி கலைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மதியழகன் புத்தகம் பேசுதே என்கின்ற பாடலோடு உற்சாகமாக குழந்தைகளுடன் குழந்தைகளை இணைத்து புத்தக வாசிப்பு சம்பந்தமான நாடகம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காமராஜ் பள்ளி, சங்கமம் பள்ளி, சாய் வித்யா விகாஸ் கோஜஸ், Boy angels L.E.F. பள்ளியில் கோவை மாவட்ட புத்தகப் பயணம் நிறைவு பெற்றது. (1-11-17 – 3-11-17) திருப்பூர் முருகன்…

Read More
கட்டுரை 

நான் யார்? பழைய கேள்வி புதிய விடை….

கவிஞர் புவியரசு மாணிக்கவாசகர்தான் முதலில் கேட்டவர், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு. அவருக்கு எளிதான விடை கிடைத்துவிட்டது. அதை அருளியவர், திருப்பெருந்துறையில், கல்லால மரத்தின்கீழ் எழுந்தருளியிருந்த குருவடிவான தட்சணா மூர்த்தி; வானோர் பிரான். ஆனால், ரீச்சர் டாக்கின்ஸ்_க்குக் கிடைத்த விடை முற்றிலும் வேறானது. முரணானது. டாக்கின்சுக்கும் ஒரு குரு உண்டு. அவர் பரிணாமத்தின் தந்தை சார்லஸ் டார்வின். டாக்கின்ஸ் என்ன சொல்கிறார்? ‘‘நீ அற்பம்; புழு!’’ என்கிறார். இதை அவர் அறிவியல் ரீதியாக நிரூபிக்கவும் செய்கிறார் நம்மால் மறுக்க முடியாதபடி. இதுவரை இவரது கண்டுபிடிப்புக்கு எவராலும் மறுப்புச் சொல்ல முடியவில்லை! ரிச்சர்ட் டாக்கின்சும் ஓர் அற்பப் புழுதான். ஆனால் அற்பத்திலிருந்து தோன்றிய அற்புதம். நாமெல்லாம் கூட அற்புதங்கள்தான். அற்பப் புழுவிலிருந்து தோன்றிய மாபெரும் அற்புதங்கள். ‘‘மனிதன் – ஆ! என்ன அற்புதமான சொல்!’’ என்று சேக்ஸ்பியரும் சொன்னார்;…

Read More
கட்டுரை 

நவீன யோகா- அறிவியல் சார்ந்ததா? – சஹஸ்

தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளிலும் யோகா நடைமுறைப்படுத்தப்படும் என சமீபத்தில் அறிவித்துள்ளது. யோகா செய்வது உடலுக்கும் மனதுக்கும் நலம் பயக்கக் கூடியது என்ற பொதுக்கருத்தும் வலுப்பெற்றுள்ளது.யோகாவை ஒரு மதம் சார்ந்த நடவடிக்கையாகப் பார்க்க வேண்டியதில்லை. அது இந்தியத் துணைக் கண்டத்தின் பாரம்பரியம் எனவும், சிந்து சமவெளியில் கிடைத்த ஓர் உ ருவம் இதை உறுதி செய்வதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் சுற்றிலும் விலங்குகளால் சூழப்பட்டு கிட்டத்தட்ட கால்கள் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அந்த மனித உருவத்தை ஒரு யோகி, சிவன், பாசுபதி அதாவது விலங்குகளால் சூழப்பட்ட கடவுள் என்றெல்லாம் அழைக்கப்படுவதற்கு எவ்வித ஆதாரங்களும் போதுமானதாக பின்னால் தோன்றிய இந்து மதச் சடங்குகள் அல்லது வேதச் சடங்குகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. உண்மையில் யோகா என்ற சொல் குதிரையில் பூட்டப்படுவதைக் குறிக்கும் வடமொழிச் சொல். குதிரை சிந்து சமவெளி நாகரிகத்திற்குப் பிந்தைய ஒரு…

Read More
கட்டுரை 

ராக்கெட்டின் தந்தை – செல்வி

ஒரு பனிக்கால இரவு. மிகவும் குளிராக இருந்தது. அந்தக் குளிரிலும் ஒருவன் மாஸ்கோ நகரத் தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தான். அவனுக்கு வயது பதினாறு. அவனது காதுகள் கேட்கும் திறனை இழந்தவை. அடிக்கடி அவன் ஆகாயத்து நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கம்பளி ஆடைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை. எனவே, அவன் உடல் குளிரால் நடுங்கியது. பசியாகவும் இருந்தது. ஆனால், அவன் எதையும் பொருட்படுத்தவில்லை. அவன் எதைப் பற்றியோ தீவரமாக சிந்தித்துக்கொண்டிருந்தான். திடீரென்று அவன் மனதில் ஒரு கருத்து உதித்தது. கயிற்றில் கட்டி சுழற்றி எறியப்பட்ட கல், கயிற்றிலிருந்து விடுபட்டு தூரத்தில் சென்று விழுவதை அவன் பல முறை பார்த்திருக்கிறான். ‘அப்படியென்றால், பூமியுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும் என்னை, விண்வெளியில் எறிய பூமியால் முடியுமா? அப்படியென்றால் மனிதன் நட்சத்திரங்களை அடைந்துவிடலாமே!’ இந்த சிந்தனையால் அவன் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டான். அந்தச் சிறுவனின் பெயர், கான்ஸ்டான்டின் சையோல்கோவ்ஸ்கி…

Read More
கட்டுரை 

பனிக்கட்டி மழை – ஜார்ஜ் அலெக்ஸ்

பனிக்கட்டி மழை பனிக்கட்டி மழை உருவாவதைப் பற்றி பெரும்பாலான விஞ்ஞானிகளின் கருத்து என்ன? பூமிப் பரப்பிலிருந்து மேலே உயர்ந்து செல்லும் வெப்ப நீராவி மிகச் சீக்கிரம் குளிர்வடையும்போதுதான் பனிக்கட்டி மழை ஏற்படுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். சூடான நீராவி பூமியிலிருந்து ஏறத்தாழ 1000 – 2000 மீட்டர் உயரத்தை அடையும்போது அது, மேலிருந்து கீழே வந்துகொண்டிருக்கும் குளிர்ந்த காற்றுடன் கலக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நீராவி சட்டென்று குளிர்ந்து மிகச் சிறிய பனிக்கட்டித் துண்டுகளாக மாற்றமடைகிறது. இந்தச் செயல்பாடு திரும்பத் திரும்ப நிகழும்போது, பனிக்கட்டித் துண்டுகளின் பருமனும் எடையும் அதிகரிக்கிறது, கீழ் நோக்கிப் பொழிகிறது. நம் நாட்டில் அரிதாக எப்போதாவதுதான் பனிக்கட்டி மழை பொழிகிறது. ஆனால் குளிர் நாடுகளில் பனிக்கட்டி மழை என்பது சாதாரணம். பனிக்கட்டி மழையின் காரணமாக சில ஐரோப்பிய நாடுகளில் விளைபயிர்கள் பெருமளவில் நாசமடைவதுண்டு. திராட்சைத்…

Read More
கட்டுரை 

ஐன்ஸ்டைன் சொல்

சிந்தனையால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. சிந்திக்கச் சிந்திக்க எண்ணங்கள் சிறப்படையும். சிந்திப்பது மனிதனின் தனி உரிமை. சிந்திக்கத் தெரிந்தவனே மனிதன். அறிவாளி. நமது அறிவை மற்றவர்களின் அறிவைக் கொண்டு மெருகேற்றிக்கொள்வது நல்லது. படித்தவர்கள் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் நல்லவர்கள் தேவைப்படுகிறார்கள். நல்ல மனம் அற்ற அறிவாளிகளால் தொல்லைகள்தான் விளையும். மற்றவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எனக்கு முக்கியம் இல்லை. இதற்கும், மற்றவர்களுக்கும் எனக்கும் இடையிலான அன்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மனிதனால் உயிருள்ள ஒரு புழுவைக்கூட செயற்கையாக உருவாக்க முடியாது. ஆனால், கடவுள்களை உருவாக்கிக்கொண்டே இருப்பான். தனிமையான சூழ்நிலையில் நல்ல எண்ணங்கள் தோன்றக்கூடும். நல்ல எண்ணங்களின் விளைவாக பல நல்ல செயல்கள் மலர வாய்ப்பு இருக்கிறது. நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் மற்றவற்றிலிருந்து வேறுபட்டது. இதுபோன்ற வேறுபாடுகள்தான் இந்த உலகத்தின் பொதுவான பண்பு. விடா முயற்சியும் தெளிவான…

Read More

வௌவால் தீவு – கிரிஸ்டோபர்

ஒரு சிறிய தீவு. அந்தி நேரம். எங்கும் இருட்டு பரவத் தொடங்குகிறது. திடீரென்று அந்தத் தீவில் எங்கும் சிறகடிக்கும் ஓசை கேட்கிறது. அங்கே ஆயிரக்கணக்கான வௌவால்கள் சிறகடித்துப் பறக்கின்றன. விரைவிலேயே அந்தத் தீவு முழுதும் வௌவால்கள்… வௌவால்கள்… இவ்வளவு வௌவால்கள் எங்கே இருக்கின்றன? மத்திய அமெரிக்காவின் பனாமாவில் உள்ள ‘பாரோ கொலராடோ’ (Barro Colorado Island) தீவில். ஒரு சிறிய தீவான இது, முற்காலத்தில் ஒரு பெரிய மலையாக இருந்தது. பனாமா கால்வாய் உருவாக்குவதற்காக, மலையின் அடிவாரத்தில் ‘காட்டன்’ (Gatun Lake) எனும் செயற்கை ஏரியை உருவாக்கினார்கள். ஏரியில் நீர் நிறைந்தவுடன் மலையைச் சுற்றிலும் தண்ணீர் உயர்ந்துவிட்டது. இப்படி, பாரோ மலை ஒரு தீவாக மாறியது. இந்தத் தீவில்தான் பல்லாயிரக்கணக்கான வௌவால்கள் வசிக்கின்றன. ஏறத்தாழ 74 வகையான வௌவால்கள் இங்கே உள்ளன. அதாவது, அமெரிக்காவில் உள்ள மொத்த…

Read More
கட்டுரை 

ஹென்றி

ஹசன் மாலுமியார் 1859 – ஆம் ஆண்டு, ஜூன் 24 – ஆம் தேதி. இத்தாலியில் உள்ள ‘சோல்ஃபெரினோ’ (Solferino) எனும் இடத்துக்கு ஒருவர் வந்தார். அவர் பெயர் ‘ஹென்றி டுனான்ட்’ (Henry Dunant). முப்பது வயது. கோடீஸ்வரத் தொழிலதிபரான அவர் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் பிறந்தவர். அவரது பெரிய தொழில் நிறுவனம் வடக்கு ஆப்பிரிக்கா, சிசிலி, ஹாலந்து முதலியவற்றில் பரவியிருந்தது. அன்று சோல்ஃபெரினோவில் கடும் போர் நடந்துகொண்டிருந்தது. பிரான்சின் சக்கரவர்த்தி மூன்றாம் நெப்போலியன் போருக்குத் தலைமை வகித்துக்கொண்டிருந்தார். சக்கரவர்த்தியைச் சந்தித்து தொழில் விஷயமாகச் சிலவற்றைப் பேசவேண்டும் என்றுதான் ஹென்றி அங்கே வந்திருந்தார். ஆனால் அங்கே வந்தபோது ஹென்றி, நெப்போலியனைப் பார்க்கவேண்டிய வேலையையே மறந்துவிட்டார். போரில் இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடக்கும் தெரு வழியே ஹென்றி துயரத்துடன் நடந்தார். காயமடைந்த வீரர்களின் அலறல் எங்கும் கேட்டுக்கொண்டிருந்தது. உணவுக்காகக் குழந்தைகள்…

Read More

கத்தரிக்காயை வரைந்துவிட்டுக் காணாமல் போனவர்கள்

வே. செந்தில் செல்வன் உரையாடல் என்பது மகிழ்வு தரக்கூடியது. பகிர்ந்துகொள்ளும் எண்ணங்களை ஏற்றுக்கொள்பவர் ஒருவர் இருந்தால் அது கூடுதல் மகிழ்வை ஏற்படுத்தும். எண்ணங்கள் ஏற்கப்படவில்லையெனில் மிகுந்த வருத்தமே எஞ்சிநிற்கும். குகை மனிதனின் சுவர் ஓவியம் தொடங்கி உரையாடல் இன்று முகநூல், மின்னஞ்சல் எனப் பல்வேறு வடிவங்களில் செயல்படுகிறது. ஒற்றைப் பரிமாணம் உள்ள பேச்சுவகை தாண்டி கலைகளின்வழியே உரையாடல் நடைபெறும்பொழுது பெருமகிழ்வையும் பன்முகப் பரிமாணங்களையும் ஏற்படுத்துகிறது. அர்த்தம் தெரியாத, என்னவென்றே அறியாத குழந்தைப் பருவத்தில் குழந்தைகள் கொள்ளும் உரையாடல் மிகவும் கவனிக்கப்படவேண்டிய, இரசிக்கப்படவேண்டிய ஒன்று. வெள்ளைத்தாள் போன்ற மனதில் அவர்கள் உருவாக்கிய உருவங்களை அவர்கள் காகிதங்களில் வரையும்போது நமது பண்பட்ட மனங்களால் அவற்றை உள்வாங்கிக்கொள்ள இயலாது. அவற்றில் இருக்கும் குறைகளே நமக்குத் தெரியும். ஆனால் குழந்தை எதைக் குறிப்பிட விரும்புகிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தவறும்போது குழந்தைக்கும் நமக்குமான உரையாடல்…

Read More