You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

மொழிதான் ஒரு சமூகத்தின் ஆழ்மனம்

கேள்விகள்: கு.தமிழ்ப்பாண்டி போகன் சங்கர் கோமதி சங்கர் எனும் இயற்பெயருடைய போகன் சங்கர் 1972ம் ஆண்டு பிறந்தவர். 2000ம் ஆண்டு முதல் எழுதத்தொடங்கிய இவருக்கு கவிதைக்காக ராஜமார்த்தாண்டன் விருது மற்றும் சுஜாதாவிருதும் கிடைத்துள்ளன. எரிவதும் அணைவதும் ஒன்றே, தடித்த கண்ணாடி போட்ட பூனை, நெடுஞ்சாலையில் மேயும் புல் ஆகிய கவிதைத்தொகுப்பும் கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் என்கிற சிறுகதைத்தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன. இவர் தற்போது நாகர்கோவிலில் வசித்து வருகிறார். கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நீங்கள் சிறுகதை எழுத எந்த சூழல் அமைந்தது?. கவிதை மொழியிலிருந்து உரைநடைக்கு வரும்போது உங்களது கவிதைக்கான மொழியிலிருந்து விலகுவதை உணர்கீறீர்களா?. நான் கவிதை, கதை என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவில்லை. எல்லாம் நான்தான்.எனக்கு புனைவுக்குச் செல்ல வேண்டுமென்கிற விழைவு முன்பே உண்டு. பெரும்பாலும் என் கவிதை மொழியும் கதை மொழியும் வேறு. ஏனெனில் இரண்டும் வேறு வேறு…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

அப்பாவின் பாஸ்வேர்ட்

கேள்விகள்: விநாயகமுருகன் ஆத்மார்த்தி 1977ம் ஆண்டு மதுரையில் பிறந்த ரவி, ஆத்மார்த்தி என்கிற பெயரில் 2009ம் ஆண்டு முதல் எழுதத்தொடங்கினார். 2011ம் ஆண்டில் தனிமையின் நீட்சியில் ஒரு நகரம் என்கிற கவிதைத்தொகுப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து மனக்குகை சித்திரம், அதனினும் இனிது, பூர்வ நிலப்பறவை ஆகிய கட்டுரைத்தொகுப்புகளும் சேராக்காதலை சேர வந்தவன், ஆடாத நடனம், அப்பாவின் பாஸ்வேர்டு ஆகிய சிறுகதைத்தொகுப்புகளும் 108 காதல் கவிதைகள், நட்பாட்டம், கனவின் உபநடிகன், விளையாடற்காலம் ஆகிய கவிதைத்தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. தொடர்ந்து பத்திரிகையில் எழுதி வரும் இவர், சினிமாவுக்கான திரைக்கதை, வசனம் எழுதுதல் என முயற்சித்து வருகிறார். உங்கள் சிறுகதைகளின் மொழிநடையில் பெரும்பாலும் சுஜாதாவின் பாணி இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இது எதேச்சையாகஅமைந்துவிட்டதா? அல்லது சுஜாதாவின் தாக்கம் உங்களுக்குள் இருக்கிறதா? ஏழு வயதிலிருந்தே புத்தக வாசிப்பைச் செய்து வருகிறேன். என்னை மிகவும் வசீகரித்த எழுத்தாளர்களில் சுஜாதா…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

பெண்ணியம்: பெண்ணின் கம்பீரம்

கேள்விகள் : எஸ்.செந்தில்குமார் கனிமொழி.ஜி உமாதேவி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் அத்திப்பாக்கம் கிராமத்தில் பிறந்தவர். “பண்டைய இலக்கியங்களில் அறநெறிகளும் குண்டலகேசியும்” என்கிற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்று உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் பாடல் எழுதியிருக்கிறார். ‘திசைகளைப் பருகுகிறவள்’, ‘தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது’ ஆகிய இரு கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். தமிழ் இலக்கிய மரபில் பௌத்த தத்துவப் பிரதிகளான மணிமேகலை, குண்டலகேசி ஆகியவற்றிக்குப் பிறகு அதன் நீட்சியாக புனைவும் புனைவற்ற சிந்தனை மரபும் குறிப்பிடும்படியாக உருவாகவில்லை. அதற்கான இலக்கிய காரணத்திலிருந்து இக்கவிதைத் தொகுப்பு குறித்து பேசத் தொடங்கலாமா? இத்தகைய புரிதல் உருவானதற்கு மகிழ்ச்சி. தமிழக இலக்கிய செயல்பாடுகளில் தமிழ் இலக்கியவாதிகளால் கம்பராமாயணத்திற்குக் கொடுக்கப்பட்ட இடம் மணிமேகலைக்குக் கொடுக்கப்படவில்லை என்பது இளங்கலை முதலே எனக்கிருந்த கோபமும் ஏக்கமும். தமிழர்களின் வாழ்வியல் மதிப்பீடுகளுக்கான இலக்கிய ஆதாரம்…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

பெளத்த பிரக்ஞை

கேள்விகள் : எஸ்.செந்தில்குமார் கு. உமாதேவி உமாதேவி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் அத்திப்பாக்கம் கிராமத்தில் பிறந்தவர். “பண்டைய இலக்கியங்களில் அறநெறிகளும் குண்டலகேசியும்” என்கிற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்று உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் பாடல் எழுதியிருக்கிறார். ‘திசைகளைப் பருகுகிறவள்’, ‘தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது’ ஆகிய இரு கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். தமிழ் இலக்கிய மரபில் பௌத்த தத்துவப் பிரதிகளான மணிமேகலை, குண்டலகேசி ஆகியவற்றிக்குப் பிறகு அதன் நீட்சியாக புனைவும் புனைவற்ற சிந்தனை மரபும் குறிப்பிடும்படியாக உருவாகவில்லை. அதற்கான இலக்கிய காரணத்திலிருந்து இக்கவிதைத் தொகுப்பு குறித்து பேசத் தொடங்கலாமா? இத்தகைய புரிதல் உருவானதற்கு மகிழ்ச்சி. தமிழக இலக்கிய செயல்பாடுகளில் தமிழ் இலக்கியவாதிகளால் கம்பராமாயணத்திற்குக் கொடுக்கப்பட்ட இடம் மணிமேகலைக்குக் கொடுக்கப்படவில்லை என்பது இளங்கலை முதலே எனக்கிருந்த கோபமும் ஏக்கமும். தமிழர்களின் வாழ்வியல் மதிப்பீடுகளுக்கான இலக்கிய…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

ஒழுங்கு என்பதே வன்முறையை பொதிந்து வைத்திருக்கும் கருத்தியல்

ஜி. கார்ல் மார்க்ஸ் கேள்விகள்: மதுசுதன் ஒரு புத்தகம் 10 கேள்விகள் கும்பகோணம் உமாமகேஸ்வரபுரத்தில் வசிக்கும் இவர், இதுவரை இரு நூல்கள் வெளியிட்டிருக்கிறார். வருவதற்கு முன்பிருந்த வெயில் என்கிற சிறுகதையும், சாத்தனை முத்தமிடும் கடவுள் என்கிற கட்டுரைத் தொகுப்பும். மனிதனின் வக்கிரத்திற்குள்ளும் ஓர் வாஞ்சை இழையோடும் என்பதாக சொல்லி இருக்கிறீர்களே அது சாத்தியமா? சமகால் நிகழ்வுகள் அப்படியானதாய் இல்லையே. மனிதப் பண்பில் ‘வக்கிரம்’ என்பதற்கு தெளிவான வரையறை ஒன்றும் கிடையாது. வாஞ்சைக்கும் கூட அது ஓரளவுக்கு பொருந்தக் கூடியதுதான். இலக்கியத்தின் வேலை எதையும் வரையறுத்து நேரெதிராக நிறுத்துவது இல்லை. நாம் வக்கிரம் என்று கருதும் ஒன்றைச் செய்பவன் ஏன் வாஞ்சையாகவும் இருக்க முடியாது. இதை நீங்கள் மாற்றிப்போட்டும் யோசிக்கலாம். அதற்கும் சாத்தியம் உண்டுதான். இளமையின் தவிப்புகளில் காதலுக்கும் வேலைக்குமே அல்லாடுகிற போது இயல்பூக்கமாய் காமம் உருக்கொள்வதும் அதன்…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

நவீன உலகத்தில் புழங்கும் கிராம மனிதன்

கேள்விகள் : எஸ்.செந்தில் குமார் சரவணன் சந்திரன் ஐந்து முதலைகளின் கதை, ரோலக்ஸ்வாட்ச் ஆகிய இருநாவல்கள் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. கோவில்பட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். பத்திரிகையிலும் ஊடகத்திலும் பணி புரிகிறார். நேரிடையாக நாவல் எழுத வரும் நாவலாசிரியரிடம் காணக் கூடிய பொதுவான பிரச்சினை கதை சொல்லச் சிரமப்படுவது. ஆனால் நீங்கள் சரளமான மொழியில் கதையை நகர்த்துகிறீர்கள். இது எப்படிச் சாத்தியமானது? முதல்விஷயம் இதற்குக் காரணம் பரவலான வாசிப்புதான். அடிப்படையில் தமிழ் இலக்கியத்தைப் பாடமாக எடுத்துப் பயின்றவன் என்பதால் சங்க இலக்கியம் துவங்கி தற்கால இலக்கியம் வரைமுழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்குப் படித்திருக்கிறேன் என்பது அடிப்படையான காரணம். இரண்டாவது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாக மக்களின் வதைகளை நேரிடையாக அவர்கள் வாய்வழியாகவே கேட்கும் வாய்ப்பைப் பெற்றதும் அதற்குக் காரணம். மனிதர்கள் சார்ந்த வாழ்வியல் கதைகளோடு மட்டுமே…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

உண்மைகளை போல புனைவுகளால் நம்மை அச்சுறுத்திவிட முடியாது

கரன் கார்க்கி கேள்விகள்: பேரா. ரவிக்குமார் சென்னையை பிறப்பிடமாக கொண்டவர். 2000ம் வருடத்தில் எழுதிய முதல் புதினமான ‘அறுபடும் விலங்கு’ 2009ல் வெளியானது. அதே ஆண்டில் ‘கறுப்பு விதைகள்’ என்கிற இரண்டாவது புதினமும் வெளியானது. 2001ல் “கறுப்பர் நகரம்’புதினம் பாரதி புத்தகாலாயத்தில் வெளியானது. திரைப்படங்களில் உரையாடல் எழுதுபவராகவும், உதவி இயக்குனராகவும் பணிபுரிகிறார். வரும் காலங்களில் சிறந்த சினிமாவொன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அறுபடும் நாவல் தொடங்கி வருகிறார்கள் வரையிலான உங்கள் இலக்கிய அனுபவங்களை பகிர முடியுமா? ஓ.. தாராளமாக பத்தாம் வகுப்பு முடியும் முன்பே சில கவிதைகள் எழுதியிருந்ததுடன், கோடை விடுமுறையில் விட்டல் என்கிற தலைப்பிட்டு துப்பறியும் நாவலொன்றை எழுத தொடங்கியிருந்தேன். நான் எழுதிய கவிதைகளும், சிறுகதைகளும் வார இதழ்களால் நிராகரிக்கப்பட்டு திரும்பியபடியே இருந்தன. நானோ எழுத்தாளனாகும் கனவின் உச்சத்துக்குப் போய்க் கொண்டிருந்தேன். நிறைய வாசிப்பு, தோன்றுவதை…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

‘பால்வெளி’யில் ஓர் ‘ஆகாயச் சுரங்கம்

ஒரு புத்தகம் 10 கேள்விகள் சி. ராமலிங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர்களுள் ஒருவர். தமிழ்நாட்டில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் நழுவு படக் காட்சி உரைகள் (Slide Show Lectures) நிகழ்த்துவதில் 1989ஆம் ஆண்டிலிருந்து ஈடுபட்டிருப்பவர். துளிர் இதழில் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருபவர். குழந்தைகள் அறிவியல் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருபவர். குழந்தைகள் அறிவியல் மாநாடு (Children’s Science Congress)களை மத்திய அரசின் உதவியுடன் அறிவியல் கூட்டமைப்புகளின் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகின்றது. இதனுடைய மாநில ஒருங்கிணைப்பாளராகவும் தேசிய அளவிலான ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்தவர். இவருடைய இரண்டு நூல்கள் 19.03.2016 அன்று மேன்மை பதிப்பக வெளியீடுகளாக வந்துள்ளன. பால்வெளி, ஆகாயச்சுரங்கம் இந்த இரண்டில் பால்வெளி கவிதைகளின் வழி பிரபஞ்சத்தின் புதிர்களைப் பேசும் நூல். அறிவியல் உண்மைகளை…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

சமகாலத்தின் தகிக்கும் எதார்த்தம்…

சம்சுதீன் ஹீரா கேள்விகள்: ச.மதுசூதன் சம்சுதீன் (36) என்பது அவருடைய இயற்பெயர் , ஹீரா என்பது அவரது செல்லப்பெயர். (ஹீரா என்றால் உருது மொழியில் வைரம் என்று பொருள்). படைப்புகளுக்காக இரண்டு பெயர்களையும் சேர்த்து சம்சுதீன் ஹீரா. சொந்த ஊர் திருப்பூர். திருப்பூர் க.சு.செ அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு (கணிதம் அறிவியல்) தேர்ச்சி பெற்று பள்ளியில் நான்காவது மதிப்பெண் பெற்றிருந்தும் மேற்கொண்டு படிக்க அப்போதைய குடும்பச் சூழல் அவ்வாய்ப்பை அவருக்கு வழங்கவில்லை. கதவு கிரில், டையிங், பிரிண்டிங் இயந்திர பாகங்கள் தயாரிக்கும் பட்டறைக்கு வேலைக்குச் சென்றதால், அப்போது பிடித்த சுத்தியல் தான் இப்போது அவரை இடதுசாரியாக இயக்கிக் கொண்டிருக்கிறது. தற்சமயம் ‘ஹீரா எஞ்சினியரிங்’ என்கிற பெயரில் எட்டாண்டுகளாக ஒர்க் ஷாப்  வைத்து நடத்திக்கொண்டு வருகிறார் என்பதோடு, கடந்த பத்தாண்டுகளாக அவர் வசிக்கக்கூடிய பகுதியில் இருக்கும் …

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

”இயற்கையைப் பொதுவுடமையாகக் காணும் மார்க்ஸின் சிந்தனையை நிலை நிறுத்த வேண்டும்”

– நக்கீரன்    கேள்விகள்: ப.கு. ராஜன் “அரசியல் சாராத கவிதைகளிலும் அரசியல் உண்டு” என்ற விஸ்லாவா ஸிம்போர்ஸ்க்காவின் முகப்பு வரியோடு வந்த ‘என் பெயர் ஜிப்சி’ எனும் கவிதைத் தொகுப்பு மூலம் கவனிப்பும் பாராட்டுகளும் பெற்ற கவிஞராக அறிய வந்தவர் நக்கீரன். ‘பென்சிலை சீவ சீவ சுருள் சுருளாய் பூக்கிறது ஒரு பூ பென்சிலை சீவ சீவ சுருள் சுருளாய் விரிகிறது ஓர் சிறகு’ என்று எளிமையும் தனித்துவமும் கொண்ட அழகியலோடு கவிதைகள் எழுதிவந்த நக்கீரன் எழுதிய அடுத்த நூலோ ‘மழைக்காடுகளின் மரணம்’ எனும் சூழலியல் நூல். நக்கீரன் அடுத்து எழுதியது தமிழில் முன்னுதாரணம் இல்லாத ‘காடோடி’ எனும் நாவல்(அடையாளம் பதிப்பகம் பக்.340 ரூ.270). நாவல் என்பதன் சாதாரணமான எதிர்பார்ப்பிற்கு மாறான விவரணங்களோடும் விளக்கங்களோடும் ஆனால் ஒரு புனைவிற்கு மட்டுமே உரித்தான உணர்வுமயமான இழைகள் நெகிழ்ந்தோடும்…

Read More