தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாசிப்புப் பயணம் எங்கெங்கும் பரவட்டும்!
தமிழ்நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் புத்தக இயக்கங்கள் புதுவேகம் எடுத்துவருவது உவகை அளிக்கிறது. ஒருபுறம் ‘தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான ‘பபாசி’ சிறு நகரங்களை நோக்கிச் செல்ல, மறுபுறம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளிகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மிக ஆரோக்கியமான முன்னெடுப்பு இது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூரில் தற்போது பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து தொடங்கியிருக்கும் ‘சிறுவர் புத்தகக் காட்சி’ பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. புத்தகங்களைச் சிறுவர்களை நோக்கி எடுத்துச்செல்வதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் நீண்ட காலமாகவே பாரதி புத்தகாலயம் கைகோத்துச் செயல்பட்டுவருகிறது. வெறுமனே புத்தகங்களைப் பதிப்பிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், புதிய வாசகர்களை உருவாக்குவதில், பல்வேறு தளங்களிலும் புத்தகங்களைக் கொண்டுசெல்வதில் பாரதி புத்தகாலயம் எடுத்துவரும் முயற்சிகள் மிகுந்த பாராட்டுக்குரியன. பாரதி புத்தகாலயத்தின் நிர்வாகியாக நாகராஜன் பொறுப்பேற்றதிலிருந்தே நிறையப் புதுப்புது முயற்சிகள் தொடங்கின. அவற்றில் முக்கியமானது…
Read More