You are here
Uncategorized 

ஜார்ஜ் அலெக்ஸ்

வட்டப் பாலம் (laguna garzon bridge) தெற்கு அமெரிக்க நாடான உருகுவே (Uruguay) யில், கார்ஸான் (Garzon) எனும் கடலோர கிராமம் இருக்கிறது. இங்குள்ள காயலின் (Back water) மேலேதான் இந்த வட்ட வடிவப் பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அரை வட்டமாக இருக்கும் இரண்டு பாதைகளும் ஒருவழிச் சாலைகள்தான். உருகுவேயைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ரஃபேல் வினோளி (Rafael Vinoly) இதை வடிவமைத்திருக்கிறார். இந்தப் பாலம் ரோச்சா (Rocha), மால்டோனடோ (Maldonado) ஆகிய நகரங்களை இணைக்கிறது. உருளை வடிவமுள்ள தூண்கள் இந்தப் பாலத்தைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாகக் கடந்து செல்கின்றன. நடந்து செல்வதற்கும் பாலத்தில் தனி வழி இருக்கிறது. இந்தப் பாலத்தைப் பற்றி ரஃபேல் வினோளி இப்படிச் சொல்கிறார்: “வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்காகத்தான், பாலங்களின் வழக்கமான வடிவத்தை மாற்றி இப்படிக் கட்டினோம். இயற்கை அழகை…

Read More
கட்டுரை 

அறிவியல் அறிஞர் எட்வர்ட் ஜென்னர்

(Edward Jennar) இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. இங்கிலாந்தில் பெர்க்லி (Berkeley) என்று ஒரு நகரம் இருக்கிறது. அங்கு ஒரு பள்ளி விடுதியில் சில நாட்களாக மிகவும் துர்நாற்றம் வீசியது. இந்த நாற்றம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிப்பதற்காக விடுதிப் பாதுகாவலர் (Warden) தன் உதவியாளர்களுடன் சென்று ஒவ்வோர் அறையாகப் பரிசோதனை நடத்தினார். பல அறைகளை நன்றாகச் சோதனையிட்ட பின்பும் அவரால் நாற்றத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் அவர்கள் எட்வர்ட் எனும் மாணவனின் அறைக்குச் சென்றனர். “ஓ! இந்த அறையிலிருந்துதான் கெட்ட நாற்றம் வீசுகிறது!” என்று சொல்லிக்கொண்டே பாதுகாவலர், அங்கிருந்த கட்டிலிலிருந்து படுக்கையை விலக்கினார். அப்போது அவர் அந்த படுக்கைக்குக் கீழே கண்டது என்ன? பலவிதமான முட்டைகள், வைக்கோல், இறந்த தவளை, எலும்புத் துண்டுகள்… இப்படிப் பல பொருட்கள் அங்கே இருந்தன. அவற்றில் பல…

Read More

அறிஞர்களின் பொன்மொழிகள்

மனித மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களே இந்த உலகின் மிகச் சிறந்த வைரங்கள். – பீட்டர் மார்சன் நண்பனோடு அளவோடு நட்புகொள், நாளை அவனே உனக்கு விரோதியாகலாம். எதிரியிடம் அளவாகப் பகைமைகொள், ஏனெனில் நாளை அவன் உனக்கு நண்பனாகக்கூடும். – நபிகள் நாயகம் நான் வாழ்வதற்காக என் பெற்றோர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். ஆனால், நான் முறையாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கே பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். – மாவீரன் அலெக்ஸாண்டர் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு செய்தால் எந்த வேலையும் கஷ்டமாக இருக்காது. – ஹென்றி போர்ட் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஓடிச் செல்வதில் பயனில்லை. முன்கூட்டியே புறப்பட்டிருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். – பான்டெய்ன் தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக்கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்கள். – மாமேதை லெனின் ஒவ்வொரு நல்ல செயலும், நல்ல எண்ணமும் முகத்துக்கு…

Read More

குழந்தையின் சிரிப்பு கவித்தம்பி

கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தார் நகரப் பேருந்தின் உள்ளேயொரு தாத்தா. பச்சிளம் குழந்தையை மடியிலிருத்தி பெண்மணியொருத்தி பக்கத்திலிருந்தாள். கோடை வெயிலின் வெப்பத்திலே குலுங்கிப் பாய்ந்த பேருந்தில் உயரக் கம்பியைப் பிடித்தபடி துன்பப் பயணம் செய்தார் தாத்தா. அடிக்கடி ஏறும் மக்கள் கூட்டம் தம்மைத்தாமே உள்ளே திணித்தது. வியர்வையில் வேகும் மக்களைப் பிளந்து தாத்தா அருகே நடத்துநர் வந்தார். டிக்கெட் வாங்க பிடியை விட்டு சட்டைப் பையில் சில்லறை தேட அந்தோ, குலுங்கிற்று பேருந்து, குழந்தை மீது சரிந்தார் தாத்தா! “அய்யோ குழந்தை!” என்றே கூவி ஆயிரம் கரங்கள் அரணாய் நீண்டன. “அடடா!” என்றே தாத்தாவைத் தாங்கின. குழந்தையைக் காக்கும் கைகள் மீதில் தடுமாறிச் சாய்ந்த தாத்தா நிமிர்ந்தார்! திடுக்கிட்டு விழித்த குழந்தை சிரித்தது, தாத்தா சிரித்தார் – பார்த்து நின்ற பலரும் சிரித்தனர். வெப்பம் அகன்று சற்றே…

Read More
மற்றவை 

குட்டி அலை

மலையாள நெடுங்கதை டாக்டர் கே. ஸ்ரீகுமார் தமிழில்: யூமா வாசுகி “செல்ல மகனே, கொஞ்சம் சீக்கிரம் வாடா. ஒன்னப் பாக்காம இந்த அம்மா நெஞ்சு வலிக்குதுடா…” 1 “மகனே, கொஞ்சம் பாத்து மெதுவாப் போ… நானும் ஒன்னோட வர்றேன்…” “ரொம்ப தூரத்துக்குப் போகாதடான்னு சொன்னா கேக்குறானா இவன்? சொல்லிச் சொல்லி என் தொண்டத்தண்ணியே வத்திப்போச்சி. செல்லங்குடுத்து செல்லங்குடுத்து குறும்புத்தனம் ரொம்ப அதிகமாப்போச்சி இவனுக்கு. ஒத்தப் புள்ளயா இருந்தாலும் கண்டிச்சி வளக்கணும்னு பெரியவங்க சொல்வாங்க. இங்கே வாடான்னு சொன்னா, இவன் நேரா அங்கே போவான். சொல்பேச்சே கேக்கறதில்ல…” அம்மா அலைக்கு ஒரே சலிப்பு. குட்டி அலை எதையும் பொருட்படுத்தாமல் குட்டிக்கரணம் போட்டு ஆடிப் பாடிப் போய்க்கொண்டிருந்தது. “இப்ப ரொம்ப தூரத்துல ஒரு மின்னல் பொட்டுபோலத் தெரியிறான் அவன். என்னதான் சொன்னாலும் கொஞ்சங்கூட காது குடுத்துக் கேக்கமாட்டான். பக்கத்துல எங்கயாச்சும்…

Read More
கட்டுரை 

நீலக்கிளி (Blue Winged Parakeet)

அழிந்துவரும் உயிரினங்கள் நீலம் கலந்த சாம்பல் நிற இறகுகள் கொண்ட கிளிதான் நீலக்கிளி. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏராளமாக வசிக்கின்றன. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் (coorg) இவை கூட்டம் கூட்டமாகப் பறந்து திரிவதைப் பார்க்கலாம். ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியா மாநிலத்திலும் (Tasmania) இவை காணப்படுகின்றன. நீலக்கிளிகளின் நீண்ட வாலின் முனை மஞ்சள் நிறத்தில் இருக்கும். நீலக்கிளியின் உடல் நீளம் 30லிருந்து 38 சென்டிமீட்டர்வரை. 15லிருந்து 45 கிராம்வரை எடை இருக்கும். ஆண் கிளியின் கழுத்தைச் சுற்றி நீல நிறத்திலும் பச்சை கலந்த சாம்பல் நிறத்திலும் இரண்டு கோடுகளைப் பார்க்கலாம். ஆண் கிளியின் அலகு சிவப்பு நிறம். பெண் கிளியின் அலகு கருப்பு நிறம். நீலக்கிளிக் குஞ்சுகளின் அலகு ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். நீலக்கிளிகள், உயரமான மரங்களின் மேல் கிளைகளில்தான் கூடுகட்டுகின்றன. மற்ற பறவைகளின் கூடுகளைக்…

Read More
நூல் அறிமுகம் 

குழந்தைகளின் நூறு மொழிகள் ச.மாடசாமி

கல்வி குறித்த பதிநான்கு கட்டுரைகளடங்கிய ஒரு சிறு தொகுப்பு இந்நூல். பா.ப்ரீத்தி அவரவர் இயல்பு மாறாமல் எதார்த்தமாய்ச் சிரிக்கிற குழந்தைகளின் முகம் பதித்த அட்டைப்படமே நிச்சயமாக குழந்தைப் பிரியர்களை வசீகரிக்கும். குழந்தைகளின் நூறு மொழிகள் என்று பெயரிட்டு ஆயிரம் மொழிகளைப் பேசியிருக்கிறார் ஆசிரியர். “கேட்பது நல்லது என்றறிவோம்.ஆனால் பேசத்தான் விரும்புவோம் -வகுப்பறையில்” என்ற வாசகத்தை வாசித்துவிட்டு அத்தனை சுலபமாய்க் கடந்துவிட முடியவில்லை. ‘Say Yes or No’ என்ற நமது ஒற்றைப் பதில் கேள்விக்குள் அடங்கிட முடியாத குழந்தைகளின் பதில்கள் எத்தனை எத்தனை… நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஆசிரியரைப் பல்வேறு கண்கள் பல்வேறு கண்ணோட்டத்தில் கவனித்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மாணவர்களின் கண்கள் அந்த இளங்கண்கள்- எதிர்காலத்தின் கண்கள் நம்பிக்கையுடன் நம்மை மட்டுமே கவனிக்கின்றன என்பதை அழுத்தமாய் மனதில் ஊன்றிச் செல்கிறது ஒரு கட்டுரை. Yes…

Read More
நூல் அறிமுகம் 

பொதுவுடைமை அறிக்கையின் நடையைக் குறித்து….

உம்பர்டோ இகோ தமிழாக்கம்: க. பஞ்சாங்கம்   ஆழமாகவும் நயமாகவும் எழுதப்பட்ட ஒரு சில பக்கங்கள், இந்த உலகத்தையே மாற்றின என்று எண்ணிப்பார்ப்பது கடினமான ஒன்றுதான். தாந்தேவினுடைய ஒட்டுமொத்த எழுத்துகள் எல்லாம் சேர்ந்தும் கூட, இத்தாலியின் ரோமப் பேராட்சியைப் புதுப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் 1848_இல் எழுதப்பட்ட ‘பொதுவுடைமை அறிக்கை,’ ஒரு பிரதி என்கிற முறையில், இருநூற்றாண்டு மனித வரலாற்றின் மேல் மிகப் பெரிய செல்வாக்கை நிகழ்த்திக் காட்டியுள்ளது என்பது நிச்சயம். எனவேதான் இலக்கிய நோக்கில் இதன் நடை அழகைக் கட்டாயம் மறுபடியும் அணுக்கமாக நாம் வாசித்துப் பார்க்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இதன் மூலத்தை வாசிக்க வாய்ப்பு அமையாத நிலையிலும் கூட! ஒருவர் அசாதாரண முறையில் இப்பிரதியில் வெளிப்படும் விவாதங்களின் அமைப்பையும், அழகியல் திறத்தையும் புலப்படுத்தும் பாங்கில் வாசிக்க வேண்டுமென நினைக்கிறேன்….

Read More
Uncategorized 

மனைவி என்னும் மகாசக்தி

பாவண்ணன் உயர்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற ஒரு பேச்சுப்போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்தது. நான்கு புத்தகங்களை ஒரே கட்டாக வண்ணக்காகிதத்தில் சுற்றிக் கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்ததும் எங்கள் அம்மா அந்தக் கட்டைப் பிரித்தார். “எல்லாமே ஒரே எழுத்தாளர் எழுதிய புத்தகமா இருக்குதுடா” என்றார். நான் அவற்றை எடுத்துப் பார்த்தேன். எல்லாமே மு.வரதராசனார் எழுதியவை. அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பருக்கு ஆகியவை. அந்த வாரத்திலேயே அவை அனைத்தையும் படித்துமுடித்தேன். கடித வடிவத்தில் கூட ஒரு புத்தகத்தை எழுதமுடியும் என்னும் அம்சம் புதுமையாகவும் வியப்பளிப்பதாகவும் இருந்தது. அறிவுரைகள், வாழ்க்கைச்சம்பவங்கள், சின்னச்சின்ன கதைகள், எடுத்துக்காட்டுகள் என ஏராளமான விஷயங்களின் கலவையாகவும் தொகுப்பாகவும் இருந்தது. ஒரு பயணம் போய்வந்த அனுபவத்தைக்கூட அவர் ஒரு கடிதமாக எழுதியிருந்தார். ஏதோ ஒரு கடிதத்தில் அன்று படித்து மனத்தில் பதியவைத்துக்கொண்ட ஒரு கருத்து, (சாதிசமய…

Read More

இந்த ஆண்டவரின் மன்றாட்டை கேட்டருளும் மானிடரே

ஆயிஷா இரா. நடராசன் கனடாவிலிருந்து நாம் துவங்கலாம். எதற்கும் ஓர் ஆரம்பம் வேண்டுமே. அங்கே தாமஸ் ஃபிஷர் நூலகம் உள்ளது. உலகின் அற்புதங்களில் அது ஒன்று. நியூட்டனின் பிரின்ஸிபியா புத்தகத்தின் பிரதான கையெழுத்து பிரதி அங்கேதான் வைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இன்னொரு கையெழுத்து மூலப்பிரதி, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. சமீபத்தில் அந்த நூலகத்திற்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் வருகை புரிந்தார். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தின் பெயரைச் சொல்லி மூல கையெழுத்து பிரதி பற்றி விசாரிக்கிறார். ஏற்கெனவே இந்த புத்தகத்தின் மூலப் பிரதியைத் தேடி அவர் டென்மார்க் கோபன்ஹேகன் நகரின் டானிஷ் ராயல் நூலகத்திற்கும் நேரில் விஜயம் செய்திருக்கிறார். அங்கே அது இல்லை. ஆனால் அவர் தேடிய மூலக் கையெழுத்துப் பிரதி கனடா, தாமஸ் ஃபிஷர் நூலகத்தில் கிடைத்தது. நூலின் தலைப்பு ‘தி மாஸ்டர் அண்ட் மர்காரிட்டா….

Read More