You are here

புத்தரும் மேய்ப்பனும்

அன்வர் அலி புத்தர் தவம் செய்துகொண்டிருந்தார். கடுமையான கோடைக்காலம். மனிதர்களாலும் மற்ற பிராணிகளாலும் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. வெப்பத்தால் புத்தரும் கஷ்டப்பட்டார். உடல் சோர்ந்து பலவீனமடைந்தார். சற்று நேரத்துக்குப் பிறகு அவர் மயங்கி விழுந்தார். கொஞ்சம் நேரம் சென்றது. ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் ஆடுகளை ஓட்டியபடி அந்த வழியாக வந்தான். மர நிழலில் மயங்கிக் கிடக்கும் புத்தரைப் பார்த்து அவன் அதிர்ச்சியடைந்தான். பக்கத்தில் சென்று பார்த்தான். புத்தரைத் தொட்டுப் பார்ப்பதற்கு அவனுக்குத் தைரியம் வரவில்லை. ‘நான் கீழ் சாதிக்காரன் ஆயிற்றே. நான் தொட்டால் இவரின் தூய்மை கெட்டுவிடும். இவரைத் தொடுவதன் மூலம் எனக்குப் பாவம் ஏற்பட்டுவிடுமே!’ என்று அவன் நினைத்தான். ஆயினும் புத்தரை அப்படியே விட்டுச் செல்ல அவனுக்கு மனம்வரவில்லை. ஏதாவது செய்யவேண்டுமே, என்ன செய்வது? வாயிலும் முகத்திலும் தண்ணீர் பட்டால் புத்தர் மயக்கம் தெளிந்து…

Read More
கட்டுரை 

நதிகள்

மழை பெய்யும்போது தெருவில் நீர் வழிந்தோடுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி நீர் ஓடுவதைப் பார்த்தே, நதி எப்படி உருவாகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ளலாம். மழை நீர் ஒன்று சேர்ந்து சிறுசிறு ஓடைகளாகிறது. இந்த ஓடைகள் மேலும் சில ஓடைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய நீரோட்டமாகிறது. இதைப்போலத்தான், மலைகளிலும் குன்றுகளிலும் பெய்யும் மழை நீர், பல சிறு ஓடைகளாக ஓடி, பிறகு ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெரிய நதியாக உருவாகிறது. நதிகள் பெரும்பாலும் மலைகளில்தான் உற்பத்தியாகின்றன. சில சமயம் நீர் ஊற்றுகளும் ஆறாக ஓடுவது உண்டு. இமயமலைபோன்ற பகுதிகளில் சூரிய வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகி, அந்த நீர் நதியாகப் பாய்கிறது. ஆகவே, பனிக்கட்டிகளும் நதிகளை உருவாக்குகின்றன. பெரிய நதிகளுடன் வந்து கலக்கும் சிறு ஆறுகளுக்கு ‘உபநதிகள்’ (Tributary) என்று பெயர். பெரிய நதிகளிலிருந்து சில ஆறுகள் கிளையாகப் பிரிந்து செல்வதும்…

Read More
Uncategorized 

மூங்கில் பூச்சிகள்

பார்த்தால் உயிருள்ள பூச்சிகளைப்போன்று தோன்றும் இவை, மூங்கிலில் செய்யப்பட்ட சின்னச் சிற்பங்கள். ஜப்பானியர் ‘நோரியுகி சைதோ’ (Noriyuki saitoh) உருவாக்கியவை.

Read More
Uncategorized 

கண்ணாடிப் பூக்கள்

மேலே உள்ள வெள்ளைப் பூக்களைப் பாருங்கள். இப்போது கீழே பாருங்கள், கண்ணாடி இதழ்களுள்ள அருமையான பூக்கள்! இரண்டும் ஒரே பூக்கள்தான். வெள்ளைப் பூக்களில் தண்ணீர் விழுந்தபோது இதழ்கள் கண்ணாடிபோன்று ஆகிவிட்டன! தண்ணீர் காய்ந்துவிட்டால் இந்தப் பூக்கள் மீண்டும் வெள்ளை நிறமாகிவிடும்! இந்தக் கண்ணாடிப் பூவின் பெயர் ‘எலும்புக்கூடுப் பூ’ (Skeleton Flower). இதன் அறிவியல் பெயர், ‘Diphelleia grayi.’ அமெரிக்காவில் அப்பலாச்சியன் மலைகளிலும் (Appalachian Mountains) சீனாவிலும் ஜப்பானிலும் மட்டுமே இந்தப் பூக்கள் இருக்கின்றன.

Read More
Uncategorized 

படகு

வி. சுதேயெவ் | தமிழில்: பூ. சோமசுந்தரம் தவளை, கோழிக்குஞ்சு, சுண்டெலி, எறும்பு, வண்டு ஆகிய எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து உலாவச் சென்றன. சற்று நேரத்தில் ஓடைக் கரைக்கு வந்தன. “ஆகா! குளிக்கலாம், வாருங்கள்!” என்று சொல்லி, ‘டபக்’ என்று தண்ணீரில் பாய்ந்தது தவளை. “எங்களுக்கு நீந்தத் தெரியாதே!” என்று கோழிக்குஞ்சும் சுண்டெலியும் எறும்பும் வண்டும் கத்தின. கோழிக்குஞ்சுக்கும் சுண்டெலிக்கும் எறும்புக்கும் வண்டுக்கும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘தவளை நம்மை அவமானப்படுத்திவிட்டதே! எப்படி இந்த அவமானத்தைப் போக்குவது?’ என்று ஆலோசித்தன. யோசித்தன, யோசித்தன, அப்படி யோசித்தன. பிறகு இப்படிச் செய்தன. “கர்ர் – புர்ர், கர்ர் – புர்ர்” என்று ஏளனமாகச் சிரித்தது தவளை. “உங்களுக்கெல்லாம் நீந்தக்கூடத் தெரியவில்லையே, நீங்களெல்லாம் உதவாக்கரைகள், சோம்பேறிகள்” என்று தவளை கேலி செய்தது. கோழிக்குஞ்சு ஓடிப்போய், ஒரு இலையைக் கொத்தி எடுத்து…

Read More
Uncategorized 

ஆசிரிய முகமூடி அகற்றி

பா. ப்ரீத்தி   அமெரிக்கப் பள்ளி ஆசிரியர் பிராங்க் மக்கோர்ட் (Frank Mccourt) என்பவர், தனது கற்பித்தல் அனுபவங்களை Teacher man என்ற நூலாக எழுதியிருக்கிறார். ஆசிரியர் மக்கோர்ட்டின் அனுபவத்தையும் தனது வாசிப்பு அனுபவத்தையும் இணைத்து ‘ஆசிரிய முகமூடி அகற்றி’ என்ற தலைப்பில் பேராசிரியர் ச.மாடசாமி இந்நூலை எழுதியிருக்கிறார். 1950களில் அமெரிக்கப் பள்ளிகளில் தனக்குக் கிடைத்த வகுப்பறை அனுபவங்களை உள்ளது உள்ளபடியே எழுதியிருக்கிறார் மக்கோர்ட். வகுப்பறையை ஆசிரியர்- மாணவர் மோதும் களமாகத்தான் பார்க்கிறார் மக்கோர்ட். கூச்சலிடும்-கட்டுப்பட மறுக்கும்-சண்டையிடும் விடலைகளின் வகுப்பில்தான் மக்கோர்ட் ஆசிரியராக முதன்முதலில் நுழைகிறார். மாணவர்களைப் பேசவைத்து எந்த விதத்திலும் அவர்களை வெல்ல முடியாமல் கடைசியில் கத்திக்குத்து பட்டு அவர்களை வெல்கிறார். மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்க ஆசிரியரிடம் என்ன இருக்கிறது? பிரம்பா? துப்பாக்கியா? ஆசிரியரிடம் இருப்பது வாய் மட்டுமே! A Teacher has nothing but…

Read More
Uncategorized 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாசிப்புப் பயணம் எங்கெங்கும் பரவட்டும்!

தமிழ்நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் புத்தக இயக்கங்கள் புதுவேகம் எடுத்துவருவது உவகை அளிக்கிறது. ஒருபுறம் ‘தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான ‘பபாசி’ சிறு நகரங்களை நோக்கிச் செல்ல, மறுபுறம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளிகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மிக ஆரோக்கியமான முன்னெடுப்பு இது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூரில் தற்போது பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து தொடங்கியிருக்கும் ‘சிறுவர் புத்தகக் காட்சி’ பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. புத்தகங்களைச் சிறுவர்களை நோக்கி எடுத்துச்செல்வதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் நீண்ட காலமாகவே பாரதி புத்தகாலயம் கைகோத்துச் செயல்பட்டுவருகிறது. வெறுமனே புத்தகங்களைப் பதிப்பிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், புதிய வாசகர்களை உருவாக்குவதில், பல்வேறு தளங்களிலும் புத்தகங்களைக் கொண்டுசெல்வதில் பாரதி புத்தகாலயம் எடுத்துவரும் முயற்சிகள் மிகுந்த பாராட்டுக்குரியன. பாரதி புத்தகாலயத்தின் நிர்வாகியாக நாகராஜன் பொறுப்பேற்றதிலிருந்தே நிறையப் புதுப்புது முயற்சிகள் தொடங்கின. அவற்றில் முக்கியமானது…

Read More
நூல் அறிமுகம் 

பயங்கரவாதி எனப் புனையப்பட்டேன் தன் வரலாறு

சி.திருவேட்டை அதிகம் படிக்காதவன்; பழைய டில்லியின் நாலு சுவத்துக்குள் வளர்ந்தவன்,அப்பா, அம்மா, அக்காள் ஒருசில நண்பர்கள். இதுவே இவனது உலகம். வயதோ இருபது; ஆனால்குழந்தைத்தனமாக. கராச்சிக்கு சென்று தனது அக்காவை காணும் ஆசை. ஒருமுஸ்லிம் இன்னொரு முஸ்லிமை கொலை செய்யும் நாட்டில் என் கால்படாதென இறக்கும் வரை உறுதி காத்த தந்தையிடம் அனுமதி பெற்று,பாஸ்போர்ட் விசாவுடன் கராச்சி பயணத்தோடு வாழ்க்கை பயணம் துவங்குகிறது. பதினான்கு ஆண்டுகள் சிறை, இருபத்தினான்கு குண்டு வெடிப்புவழக்குகள். காவல்துறையின் வித விதமான (சகிக்க முடியாத)சித்திரவதைகள். காட்டிய இடத்தில் கையெழுத்து போடுயென விரல் நகத்தைபிடுங்குவது. மதத்தை சம்மந்தப் படுத்தி ஆபாசமான அர்ச்சனைகள்.இதையெல்லாம் தாண்டி தாய், தந்தை, அக்கா குடும்பத்தையே அழித்துவிடுவோமென மிரட்டுவது. சித்திரவதைகளோடு இது பொய் வழக்கு, நீவெளியே வந்து விடலாமென நம்பிக்கையூட்டி குற்றத்தை ஒப்புக் கொள்ளவைப்பது. இக்காவல்துறை கனவான்களுக்கு அரசின் பாராட்டு, பரிசுமழை,பதவிஉயர்வுகள்……

Read More
Uncategorized 

கறைபடிந்த காலம்: கைவிடலின் கதறல்

எஸ்.ஜி.ரமேஷ்பாபு எத்தனை எத்தனை வாழ்க்கை தோறும் வாசலில் நான் காத்துக் கிடக்கிறேன்; ஆனால் அவை திறக்கவில்லை; இடைவிடாத ப்ரார்த்தனைகள் செய்துசெய்து என் நாக்கு வறண்டு விட்டது; ஒளிக்கிரணம் ஒன்றைத் தேடி இருளின் ஊடே பார்த்துப்பார்த்து என் கண்கள் சோர்ந்து விட்டன; இதயம் இருளில் பயந்து தடுமாறுகிறது; நம்பிக்கை எல்லாம் பறந்து விட்டது. வாழ்க்கையின் கூரான உச்சிமுனையில் நின்றுகொண்டு பள்ளத்தை நான் பார்க்கிறேன்; அங்கே- வாழ்க்கை, மரணம் இவற்றின் துன்பமும், துயரமும், பைத்திய வெறியும், வீண் போராட்டங்களும், முட்டாள் தனங்களும் எல்லாம் கட்டற்று உலவுகின்றன. காண நான் நடுங்குகின்ற இந்தக் காட்சி இருட்பள்ளத்தின் ஒருபுறம் தெரிகிறது; சுவரின் மறுபுறமோ……….. இது சுவாமி விவேகானந்தரின் முடிவுறா கவிதை. பிர்தவ்ஸ் ராஜகுமாரனின் கறைபடிந்த காலம் புத்தகத்தைப் படித்ததும் இந்த கவிதை என் நினைவுக்கு வர தஞ்சை சுந்தர்ஜி பிரகாஷ் வலைப்பூவிலிருந்து இதை…

Read More
Uncategorized 

சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்ற உரைகள் – ஆர். செம்மலர்

சீத்தாராம் யெச்சூரி  நாடாளுமன்ற உரைகள் – ஆர். செம்மலர்   மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை நாடாளுமன்ற ஜனநாயகத்தை உள்ளும் புறமும் போராடப் பயன்படுத்துவது எனும் வகையில்தான் தேர்தல்களைப் பயன்படுத்துகிறது. அந்த வகையில் மாநிலங்களவையில் தோழர் யெச்சூரி ஆற்றிய 20 உரைகளின் தொகுப்பு இது. குருசேவ் சூயென்லாயைச் சந்தித்தபோது, ’பிரபு குலத்தில் பிறந்த நீயும் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த நானும் கம்யூனிஸ்ட்டாக இருக்கிறோம்’ என்று கூறியதற்கு, ‘இருந்தாலும் இருவருமே பிறந்த வர்க்கத்திற்குத் தானே துரோகம் செய்கிறோம் என்று திருப்பிக் கொடுத்திருப்பார் சூயென்லாய். 11 வயதில் வேதங்கள்/பூணூல் போன்றவை சூட்டப்பெற்று, பார்ப்பனிய பிண்ணனியிலிருந்து வந்தபோதும், சூயென்லாயின் கூற்றின் தன்மையில் பார்ப்பனியச் சிந்தனைக்குச் செய்யும்/செய்யப்படவேண்டிய துரோகத்திற்கு அடையாளமாக இருக்கின்றன யெச்சூரியின் உரைகள். பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி , ஊக வாணிபம் , புதிய தனியார் மற்றும் தாராளமயக்…

Read More