You are here
tamilnadu-varalaaru நூல் அறிமுகம் 

தமிழ்நாட்டு வரலாறு – பேரா. அ.இராமசாமி

தமிழ்நாட்டு வரலாறு
பேரா. அ.இராமசாமி | என்.சி.பி.எச். பக்.359, விலை ரூ. 260

தமிழ் நிலப்பரப்பின் வரலாறு என்பது இத்தனை ஆழமாக விரிவாக இதுவரை எழுதப்படவில்லை. இந்தியாவை விந்திய சாத்பூரா மலைத் தொடர்களும் நர்மதை, தபதி நதிகளும் வட இந்தியா தென் இந்தியா என்று இரண்டாக பிரிகின்றன. தென் இந்தியாவில் தக்காண பீட பூமிக்கும் தெற்கே குமரியும் கிழக்கு மற்றும் மேற்கே கடலும் சூழ்ந்த பிராந்தியமே தமிழகம் என தொல்காப்பிய சிறப்புப் பாயிரம் சொல்கிறது என தொடங்கும் இந்த நூல் மிக நேர்த்தியாக இந்த நிலப்பரப்பின் மக்கள் வரலாறை சொல்லிச் செல்கிறது.

புதை பொருட்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், செப்பேடுகள், இலக்கியங்கள் வட நூல் செய்திகள் கோயில் சிற்பங்கள் என ஆதாரங்களுடன் வரலாறு அறிவியல் முறைப்படி இந்த வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. கி.மு. 35000 தொடங்கி நீதிக் கட்சியின் காலமாகிய 1950கள் வரை வரலாறு நீள்கிறது. கரிகாலன், கிள்ளிவளவன் பாண்டியர்கள் பற்றி பேசும் அதேசமயம் இருண்ட காலம் என வர்ணிக்கப்பட்ட களப்பிரர் ஆட்சியைப் பற்றியும் பேசுகிறது. களப்பிரர் ஆட்சி பவுத்த சமய ஆட்சியே என ஆசிரியர் நிறுவுகிறார். இசுலாமியர் ஆட்சி, பக்தி இலக்கிய காலம் என ஹிந்து பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்கொண்ட வரலாறு நமக்கு பல்வேறு செய்திகளை புரியவைக்கிறது. அழகப்பா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பேர.அ.இராமசாமி பாராட்டுக்குரியவர்.

Related posts

Leave a Comment