You are here
Suvadi Padhukappu Varalaru நூல் அறிமுகம் 

சுவடிப் பாதுகாப்பு வரலாறு – முனைவர் ப. பெருமாள்

சுவடிப் பாதுகாப்பு வரலாறு
முனைவர் ப. பெருமாள் | கோவிலூர் மடாலயம்,
பக். 240, விலை ரூ.135

சீனர்கள் காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பே தமிழ் மண் பருத்தியிலிருந்து தகடுபோல எழுதப் பயன்படுத்திய காகிதம் ஒன்றை கி.மு. 327ல் கொண்டிருந்ததாக இந்த நூலின் ஆரம்பத்திலேயே ஒரு சூப்பர் அதிர்ச்சி நமக்கு காத்திருக்கிறது. அலெக்சாந்தர் படைதளபதி நிர்சூஸ் இதை பற்றி சொல்கிறார் முனைவர் பெருமாள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தின் பாதுகாவலர் மற்றும் நூலகம் மிக நேர்த்தியாய் நம் தமிழின் இதுவரை சொல்லப்படாத சுவடி பாதுகாப்பு வரலாற்றை தொகுத்து தருகிறார்.

சுவடி எனும் சொல் எழுதி முடிக்கப்பட்ட நூலை குறிக்கும். தமிழில் நூல், சுவடி, மடல், ஓலை, ஏடு, இதழ், தந்திரம், தூக்கு, பனுவல், பொத்தகம் எல்லாமே ஆதிகால சொற்கள். யாவுமே புத்தகத்தைக் குறிப்பவை. பாதுகாப்பாக சுவடிகளை கையாளப் பயன்படுத்தும் நான்கு புறமும் கயிற்றுடன் கட்டும் பலகையை தூக்கு என்றார்கள். இப்படி ஏராளமான புதையல்கள் நூலில் உண்டு.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்வெட்டுகளில் நூலகம் பற்றிய செய்திகள் உள்ளன என்றால் எத்தனை சிறப்பு அது. காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகமே இருந்ததாக சீன யாத்திரிகர் யுவாங்சுவாங்கின் சுவடி சொல்வதும் காஞ்சி ஏகாம்பர நாதர் கோயில் நெல்லை அம்பாசமுத்திரம் திரௌபதி அம்மன் கோயில் உள்ளிட்ட பத்தொன்பது கோயில்களில் நூலகங்கள் இருந்துள்ளன. இதை தவிர குன்றகுடி முதல் திருவாவடுதுறை, மயிலம் வரை மடங்களில் எல்லாம் நூலகங்கள் சிறப்பாக செயல்பட்டன. இந்த ஒரு புத்தகம் வரலாற்றுப் பொக்கிஷம்.

Related posts

Leave a Comment