You are here
ஒரு குடும்பத்தின் ஷெட்ரின் கதை நூல் அறிமுகம் 

ஒரு குடும்பத்தின் ஷெட்ரின் கதை – தமிழில்: நா.தர்மராஜன்

ஒரு குடும்பத்தின் ஷெட்ரின் கதை
தமிழில்: நா.தர்மராஜன் | பாரதி புக் ஹவுஸ்,
பக். 115, விலை ரூ.60

ஷெட்ரின் புரட்சிக்கு முந்தைய ரஷ்யமொழி படைப்பாளி. தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர். ரஷ்ய புரட்சி ஏற்பட்டதன் பின்னணியில் வாழும் ஒரு குடும்பத்தின் கதையை தோழர் நா.தர்மராஜன் மொழி பெயர்த்தார். முன்பே இதை வாசித்திருக்கிறேன். தற்போது மீண்டும் பதிப்பித்திருக்கிறார்கள். என்ன அற்புதமான எழுத்து.

நிலவுடைமை சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் குழிபறிக்கும் குடும்பம் இறுதியில் முற்றிலும் அழிந்துபோகிறது. கடைசியாக மிஞ்சுபவர்கள் போர் புரியும் அவனது மருமகள் அன்னின்காவும் மட்டுமே. போர் புரியும் நிலவுடைமை சமூக எஜமானர் சமூக பண்ணை முதலாளி. கருமித்தனமும் வெட்டிப் பேச்சு சுரண்டல் குணம் அவனது உடன் பிறந்தது.

பண்ணை அடிமை முறைக்கு எதிராக ஜார்மன்னனுக்கு எதிராக உள்ளது என தடை செய்யப்பட்ட புத்தகம் இது. ஆனால் ஷெட்ரினின் எழுத்துக்களுக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கைக் கண்டுக் அரசு அச்சமுற்றது என்பது வரலாறு.
தான் பயன்படுத்தும் சில சொற்களுக்கு தோழர் தர்மராஜன் அந்தப் பக்கத்தின் கீழே அந்த ஆங்கிலச் சொல்லைத் தந்து செல்வது தனி சுவை.

Related posts

Leave a Comment