You are here
Neengalum Vagai Soodalam நூல் அறிமுகம் 

நீங்களும் வாகை சூடலாம் – முனைவர் இளசை சுந்தரம்

நீங்களும் வாகை சூடலாம்
முனைவர் இளசை சுந்தரம் | நேசம் பதிப்பகம் பக்.200, விலை ரூ. 125

இளசை சுந்தரம் என்றாலே மகாகவி பாரதியை நினைக்காமல் இருக்க முடியாது. இவரும் எட்டயபுரம் என்பதல்ல காரணம். பாரதி போலவே வேடமேற்று மேடைகளில் அவரது பாரதி முழக்கம் பற்றி அறியாதவர்கள் குறைவு. நம்பிக்கை நூல்கள் வரிசையில் இது வித்தியாசமான அருமையான முயற்சி.

வெற்றி வாகை சூடிய பலரது வாழ்வை முன் உதாரணமாகக் காட்டி வானொலி இயக்குநராக அவர் வழங்கிய உரைகளின் தொகுப்பு இது. நகைச்சுவை சிந்தனை, விவாதம், தகவல்கள் என அனைத்தும் உண்டு. திருமணத்திற்கு முன் கனியே தேனே என கொஞ்சியவர், நிச்சயதார்த்தம் ஆனதும் ‘பொன்னே மணியே காரே ஸ்கூட்டரே’ என்று கொஞ்சுவது ஏன் என்கிற இடம் போல எளிய சாட்டைகள்.

லெனின் 17வது முறை கைது செய்யப்பட்டபோது நடக்கும் உரையாடல். கனடா நாட்டு மருத்துவர் கண்டுபிடித்தது, தாகூர் தன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்கு சொன்ன விசேஷ காரணம் என நூல் முழுவதும் ஆங்காங்கே பளிச்சிடும் விஷயங்கள் மிக அழகு. நம்மை வசப்படுத்துவதில் இளசை சுந்தரம் வாகை சூடி இருக்கிறார்.

Related posts

Leave a Comment