You are here
Nee Ezhudha Marukkum Enadhazhagu நூல் அறிமுகம் 

நீ எழுத மறுக்கும் எனதழகு கவிதைகள் – இளம்பிறை

நீ எழுத மறுக்கும் எனதழகு கவிதைகள்
இளம்பிறை, டிஸ்கவரி புக்பேலஸ் | பக். 247,
விலை ரூ. 230

‘என்னை நீ ஆக்காமல்/ இருப்பாயா நீ’ என நெஞ்சுக்கு நேராக ஆட்காட்டி விரலை காட்டி எச்சரித்த மவுனக்கூடு. தொகுப்பு நாட்களில் இருந்து கவிஞர் இளம்பிறை பரிட்சயம். பிறகு ஒரு போதில் தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற சென்ற நாளில் நானும் பெறுகிறேன் என்று இணைந்த வரை அப்புறம் பத்து பதினைந்து ஆண்டு கழித்து இப்போது இந்த கவிதைத் தொகுப்பின் மூலம் முழுமையாய் அறிகிறேன். மனசாட்சிக்கு எரியூட்டும் கனப்பு.

பிறகென்ன/ வார்த்தை கிடைத்தவரை/ எழுத்தாய் வடித்துவிட்டு மிக்க நிதானமாக விறகுகளுடன் சேர்த்து எரிப்பேன் எனது வீணையையும்/ என பொங்கும் வரிகள் சமூகத்தின் அடிமை சட்டங்களை எரிக்கத் துடிக்கின்றன. உழைக்கும் மக்களை சித்தரிக்கும் நேர்மையை சிற்பி பாராட்டுகிறார். தூயகாற்றை சுவாசித்து கிராமத்து நியாயம் பேசுபவை என சிவகாமியும் நவீன கவிதைக்கான உரையாடலை வெளிச்சங்களும், மவுனங்களும், புதிர்களும் நிரம்பியவையாய் மிளிர்கின்றன என்று கவிஞர் இந்திரனும் கொண்டாடுகிறார்கள். தோழமையான நம் நட்பு மனம் துள்ளுகிறது.

எரிந்த வனத்தில் கரித்துண்டுகளாய், மறுநாள் உனக்கு, வைத்திருப்பேன், சில வார்த்தைகளை பொறுக்கி, இளம்பிறையின் கவிதைப் படிமங்கள் நம் நெஞ்சை உலுக்கி கனவுகளைக் களவாடும், சுதந்திர மனப்பாண்மை கொண்டவை. ஆனால் உள்ளத்திலேயே எண்ணத்தை சுட்ட வரிகள் இதோ: அம்மா, அடுப்பை பற்றவை, குளிராவது காயலாம். இத்தொகுப்பில் சுமாராக 213 கவிதைச் சாட்டைகள்

Related posts

Leave a Comment