You are here
nanbargalin_parvaiyil_marx நூல் அறிமுகம் 

நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் – த.ச.சுப்பாராவ்

நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்
த.ச.சுப்பாராவ் | பாரதி புத்தகாலயம் பக்.80,
விலை ரூ.70

விஞ்ஞான மானுடவியலாளரும், வரலாற்று பொருள்முதல் வாதியும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் சக ஆசிரியரும், மூலதனத்தைப் படைத்தவருமாகிய மார்க்ஸ். மனித இனத்திற்கே சொந்தமானவர். தோழர் சுப்பாராவின் அசுரத்தனமான உழைப்பில் மற்றொரு மணி மகுடமாக வந்துள்ள மார்க்ஸ் குறித்த சிறப்பான நூல் இது.

மார்க்ஸ் எனும் பொருளாதார மேதையான அரசியல் தத்துவ ஆசிரியனைப்பற்றி நிறைய புத்தகங்கள் தொடர்ந்து வாசிக்கிறோம். ஆனால் மார்க்ஸ் எனும் மனிதரைப் பற்றி நாம் சிறிதளவே வாசித்துள்ளோம். இந்த நூலில் அவரோடு நெருங்கிப் பழகி வாழ்ந்த அவரது நண்பர்களான காரல் லீப்னி ஹ்ட் மற்றும் பால் லஃபார்க்கே ஆகியோரின் அரிய பதிவுகள் இடம் பெற்றுள்ளன. வாசிக்க வாசிக்க மனதின் நெகிழ்வும் கண்களில் நம்மையும் அறியாமல் கண்ணீரும் வருகிறது.

மார்க்ஸோடு நடைப் பயணம், மார்க்ஸோடு செஸ்விளையாட்டு, என விரிவடையும் நூல் மார்க்ஸின் மகள் துஸ்ஸியின் திடீர் எழுத்துக்களால் நம்மைத் திணற அடிக்கிறது. ஜென்னி இறந்த அன்றே மார்க்சும் இறந்துவிட்டார் என ஜெனரல் (ஏங்கெல்ஸ்) சொல்லும் இடம் நம்மை மனம் நெக்குர வைக்கும் இடம். தனது எழுது மேசையிலேயே நாற்காலியில் அமர்ந்தபடியே உயிர் நீத்த மார்க்ஸ் பற்றிய உருக்கமான பல நிகழ்வுகள் இந்தப் புத்தகம் முழுவதும் உள்ளன. நமக்கு அவரைப் பற்றி நிறைய தெரியாது என ஏங்கிப் பதறவைக்கும் புத்தகம் இது

Related posts

Leave a Comment