You are here
Madhvadha Arasiyal நூல் அறிமுகம் 

மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம் – டி.ஞானையா

நூலின் பெயர் : மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம்

ஆசிரியர் : டி.ஞானையா

பதிப்பகம் : என்சிபிஎச்.

விலை. ரூ.80

இதை நீங்கள் வாசித்து முடிக்கும் முன் இந்திய கொலைபாதக மதவெறி அரசியல் ஒரு நிமிடத்துக்கு மூன்று பேர் என்ற விகிதத்தில் அப்பாவி மக்களை காவு வாங்குகிறது. எனும் பாசிச காலத்தில் இப்போது வாழ்கிறோம். அத்தகைய மதவெறிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றன. கவுரிலங்கேஷ் இருப்பது இரண்டாம் பட்ச பட்டியலில்தான். கொலை, பட்டியலின் முதல் தர வரிசையில் அறிஞர்கள், விஞ்ஞானிகள், மக்கள் எழுத்தாளர்கள் உள்ளனர். பண்டாரங்கள் தவிர வேறு யாவுமே கம்யூனிச தேசத் துரோகிகள். இந்த சூழலில் இந்தப் புத்தகம் மிக அற்புத தேவை.

இதில் நம் பாரம்பரியத்தை, பன்முக அடையாளமான வேற்றுமையில் ஒற்றுமை என்பதை பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்சும், சங்பரிவார கும்பலும் எப்படி சிதைத்தெறிகின்றன என்பதை ஆழமான ஆதாரங்களோடு அவர் எழுதிச் செல்கிறார். 1528ல் பாபர் மசூதி கட்டப்பட்டபோது வெளிவந்த துளசிதாஸர் ராமாயணம் பாபர்மசூதி கட்டப்படும் இடத்தில் ராமர் பிறந்தாரா என எழுதவில்லை என்பதில் இருந்து, 1947ஆகஸ்ட் 15 சுதந்திர தின வி-ழாவை, ஆர்.எஸ்.எஸ். புறக்கணித்தது வரை பல அதிர்ச்சித் தகவல்கள். சிவாஜி தன் ராணுவ தளபதியாய் ஒரு இசுலாமியரையும் திப்பு சுல்தான் ராணுவ கமாண்டிராக ஒரு இந்துவை கொண்டிருந்ததும் எவ்வளவு அழகு. எத்தகைய அரசியல்.

Related posts

Leave a Comment