You are here
Koonduku Veliye நூல் அறிமுகம் 

கூண்டுக்கு வெளியே – டாக்டர் ந. பன்னீர்செல்வம்

கூண்டுக்கு வெளியே
டாக்டர் ந. பன்னீர்செல்வம் | அந்திமழை,
பக்.182, விலை ரூ.16

தேசிய உயிரியல் பூங்காக்களில் முக்கிய பணியில் தொடர்ந்து இருந்து 2015ல் ஓய்வு பெற்றவர் மருத்துவர் ந.பன்னீர்செல்வம். வனவிலங்கு மருத்துவர் என்கிற முறையில் தனது அனுபவங்களை அவர் ஒரு புத்தகமாக எழுதி இருப்பதற்கே நாம் அவருக்கு கடன்பட்டிருக்கிறோம். ஏனெனில் இப்படியான தொகுப்புகள் மிக அபூர்வம். சொன்னால் நம்புவீர்களா. நான் ஒரே இரவில் மடமடவென வாசித்து முடிக்கும்படி சுவாரசியமாக அதை எழுதி செல்கிறார். சூப்பர்.

யானை அனுபவத்தோடு நூல் தொடங்குகிறது. திருவையாறு கோவில் யானை மதம் பற்றியது. யானை மூலவிக்ரஹத்தை சேதப்படுத்தும் உடனே சுட்டுக் கொன்றுவிட முடிவெடுக்கிறார்கள். பன்னீர் சார் யானையையும் காப்பாற்றி கடவுளையும் காப்பாற்றி கடமையாற்றுகிறார். கால்நடை மருத்துவர் வேறு; வனவிலங்கு மருத்துவர் வேறு என்பதை திருவண்ணாமலை கோயில் யானை சம்பவம். அழகாக விவரிக்கிறது. அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து சிங்கவால் குரங்குகளை டில்லி தேசிய உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி அங்கிருந்து ஒரு ஜோடி வெள்ளைப் புலிகளை பெற்ற அனுபவம் படுஜோர். இப்போது வண்டலூரில் 22 வெள்ளை புலிகள் இருப்பது எப்படி என்பதற்கு இதுவே பதில்.

ராஜநாகம் போன்ற பாம்புகள் ரத்தினம் கக்கும் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதைப் போட்டு உடைக்கும் டாக்டர் ந,.பன்னீர்செல்வம் மேலும் பல எழுத வேண்டும். சிங்கப்பூர் உயிரியல் பூங்காவின் 3 ரஸ்குட்டான் குரங்குகளுடன் உடன் உட்கார்ந்து காப்பி சாப்பிடும் அனுபவம் கிளாஸிக்.

 

Related posts

Leave a Comment