You are here
Jeyandhan Book மற்றவை 

ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – தொ. அகரமுதல்வன்

ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – தொ. அகரமுதல்வன்

பதிப்பகம் –  டிஸ்கவரி புக்பேலஸ்
விலை. ரூ.200

ஜெயந்தன் எனும் சிறுகதை ஜாம்பவானை இளைய தலைமுறை அவசியம் வாசிக்க வேண்டும். தமிழ்ச் சிறுகதைக்கு எழுபதுகளில் அறிமுகமானவர் ஜெயந்தன். ஜெயகாந்தனை ஜி. நாகராஜனை சேர்த்து குழைத்த சுவை. ஆனால் எதில் மேலிட இருக்கும் என்பது ஒரு திரில். இத்தொகுப்பில் உள்ள 18 கதைகளையும் வாசித்து எடுப்பது ஒரு பயிற்சிப் பட்டறைபோல வாழ்க்கையை அதன் முடைநாற்றங்களோடும் ஜீவமரணப் போராட்டங்களோடும் நேருக்கு நேர் சந்திக்கும் அனுபவம்.

ஜெயந்தனின் கதைகளில் ஒரு வகை ஆழ்மனவெளி புதையுண்டு இருப்பதை நாம் காணலாம். ஆதிக்கங்கள் நிறைந்திருக்கும் மிகவும் வெட்கக்கேடான சமூகத்தையும், அதையே தனக்கு ஆதரவாக மாற்றிக் கொள்ளும் ஆணவத்தை, கவுரவத்தை பகடி செய்வது அவருக்கே வந்த கலை. சம்மதங்கள், மனச்சாய்வு, துக்கம் போன்ற கதைகளை வாசித்தால் பல நாட்கள் உறங்கவிடாது.

மனித இயல்புகளும் கோட்பாடுகளும் மன எழுச்சியும் யதார்த்த உலகால் பறி கொடுக்கப்படும் ஏமாற்றம் தரும் ஆத்திரத்தை தோழமையின் பதட்டத்தோடு நம் ஆழ்மனதில் பதிக்கும் கதைகள் இவை. அமைதியைக் குலைக்கும் யதார்த்தவாத உலகம், அரசியல் நம்பகமற்ற யதார்த்தம் சிதைந்த காயமாய் உருவெடுக்கும் தருணங்களை இத்தனை அழகாக யாருமே பதிவு செய்ய முடியாது. அகர முதல்வனின் சிறப்பான முயற்சி.

Related posts

Leave a Comment