You are here
Puthagam Pesuthu Jan wrapper தலையங்கம் 

வாசிப்பின் திருவிழாவை வரவேற்போம் – ஜனவரி 2018

வாசிப்பின் திருவிழாவை வரவேற்போம்

மன்த்லி ரெவ்யூ’ இதழில் 1949ம் வருடம் ‘சோஷலிசம் ஏன்?’ என்கிற தனது பிரபல கட்டுரையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இவ்வாறு குறிப்பிட்டார். “நமது கல்விமுறை மாணவர்கள் முடங்கிப்போவது எனும் பெருந்தீங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவர் மனதில் புகட்டப்படுகிறது. தன் வருங்காலத்திற்கான தயாரிப்பிற்காக பொருளீட்டும் வெறியை வழிபட மாணவன் பயிற்றுவிக்கப்படுகிறான”’ என்று எழுதினார். இதன் மூலம் சமூகத்தின் ஓர் அங்கமாக தன்னைக் கருதாமல் தனிமனிதனாக அவன் முடங்கிப் போவான் என்றார் அவர். இக்கொடிய தீமையை ஒழிக்க ஒரே வழிதான் உள்ளது: ‘சோஷலிச குறிக்கோள்களை நோக்கிய கல்வி அமைப்பை உருவாக்குதல்; அவரது உள்ளார்ந்த திறன்களை வளர்க்கும் சுதந்திர வாசிப்பை கல்வியின் அங்கமாக்குதல்’ எவ்வளவு சரியான அணுகுமுறை. இதே நோக்கத்தோடுதான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. பாரதி புத்தகாலயம். எல்லா சமூகப் பங்களிப்புகளையும் விட நூல் வெளியீடும் மக்களிடம் அவற்றை கொண்டு சேர்ப்பதும் ஓர் அரசியல் கடமையாக ஏற்று கடும் போராட்டங்களுக்கு நடுவே ஈடு செய்ய முடியாத தனது உழைப்பை நல்கிய அன்புத் தேடலில் நம் பாரதி புத்தகாலயமும் புத்தகம் பேசுது இதழும் முக்கிய வரலாற்றுக் கடமையை தொய்வின்றி ஓர் இயக்கமாக தமிழகம். முழுவதும் புத்தகக் காட்சிகள் எனும் பிடிவாதமான இலட்சியத்தோடு நாம் பயணிக்கிறோம். அறிவியல், சிறார் இலக்கியம், தத்துவம், மற்றும் கல்வி, நடைமுறை அரசியல், பெண்ணியம் மற்றும் ஊடகம் எனும் எல்லாத்துறை சார்ந்தும் மக்களிடமும், மாணவர்களிடமும் வாசிப்பை ஓர் அரசியல் நடவடிக்கையாக அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக கடந்த பதினைந்து ஆண்டுகளில் மாற்றியதில் பெரும் பங்கு பாரதி புத்தகாலயத்திற்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. சோவியத் புரட்சியின் நூற்றாண்டு, மார்க்சின் 200ஆம் ஆண்டு, மார்க்சியசிந்தனையின் 150ம் ஆண்டு. மக்கள் பதிப்பகமான பாரதி புத்தகாலயத்தின் 15ம் ஆண்டு. ஒரு பத்திரிகை, பதிப்பகம், ஒரு கூட்டுப் பிரச்சாரகன், கூட்டுப் போராளி மட்டுமல்ல, அது ஒரு கூட்டு அமைப்பாளனும் கூட’ என்றார் லெனின். அத்தகைய வரலாற்றுக் கடமையை சமூகத்தின் இடையறாத போராட்ட களத்தில் ஆற்றும் மன உறுதியோடு தொடர்ந்து பயணிப்போம். சென்னை புத்தகக் காட்சி எனும் பிரமாண்ட வாசிப்புத் திருவிழாவை ஆண்டின் தொடக்கப் புள்ளியாக்கி வாசிப்பு எனும் இயக்கம் பட்டிதொட்டி எல்லாம் ஆண்டு முழுதும் தொடர உறுதியேற்று நம் பயணத்தைத் தொடர்வோம். வாழ்த்துகள்.
ஆசிரியர் குழு

Related posts

Leave a Comment