You are here
சமூக உணர்வுடன் கூடிய படைப்புகளே தற்போதைய தேவை நிகழ்வு 

சமூக உணர்வுடன் கூடிய படைப்புகளே தற்போதைய தேவை

சமூக உணர்வுடன் கூடிய படைப்புகளை கொண்டு வருமாறு படைப் பாளிகளுக்கும், பதிப்பாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இளங்கோ சாலையில், புத்தகங்களுடன் புத்தாண்டு கொண் டாட்டத்திற்கு பாரதி புத்தகாலயம் ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்வில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் யூமா வாசுகியை ஜி.ராமகிருஷ்ணன் கவுரவித்தார்.

பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதி, பத்திரிகையாளர் அ.குமரேசன் மொழிபெயர்த்த “மூலதனம் நூலை எதற்காகப் படிக்க வேண்டும்?” என்ற சிறுநூலையும் வெளியிட்டார்.இந்நிகழ்வில் பேசிய ராமகிருஷ்ணன், “நம் முன்னோர்கள் நமக்கு அளித்த சமூகத்தை விட, சிறந்த சமூகத்தை அடுத்த தலைமுறைக்கு நாம் தர வேண்டும்.அதற்கான சிந்தனையை, சமூக மாற்றத் திற்கு பாடுபடக்கூடிய உணர்வை இந்தத்தலைமுறைக்கு ஊட்ட வேண்டும். அந்த வகையில் படைப்பாளிகள் படைப்புகளையும், பதிப்பகங்கள் புத்தகங்களையும் கொண்டு வரவேண்டும்” என்றார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் பேசுகையில், “ஒரு நகரில் ஒருநாளில் பிறக்கிற குழந்தைகளின் எண்ணிக் கைக்கு சமமான புத்தகங்கள் பதிப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் ஒரு வீட்டிற்கு செல்லும்போது புத்தகங்களை கொண்டு செல்வார் கள், வரும்போது அந்த வீட்டில் இருந்து ஒரு செடியை கொண்டு வருவார்கள். இந்த கலாச்சாரம் தமிழகத்திலும் பரவ வேண்டும். கேரளாவில் கவிஞர் ஒருவர் வசிக்கும் தெருவின் முகப்பில் அந்த கவிஞர் இங்கு வசிக் கிறார் என்று பலகை வைத்து பெருமைப்படுத்துவார்கள். அந்த மரபை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.நிகழ்வில் எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, எஸ்.ஏ.பெருமாள், பாரதி கிருஷ்ணகுமார், பத்திரிகையாளர் அ.குமரேசன், சமஸ், மொழிபெயர்ப்பாளர் மயிலைபாலு, கவிஞர் இரா.தெ.முத்து உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment