You are here

பொன்மொழிகள்

• மகிழ்ச்சி பனித்துளிபோன்றது. சிரிக்கும்போதே உலர்ந்துவிடுகிறது – மகாகவி தாகூர்

• ஒரு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்குச் சமம் – வோயஸ்
• நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்டவேண்டிய கடமையே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்ப்பது சிறுமைக் குணமே ஆகும் – தந்தை பெரியார்
• அறிவின் வழியே செல்பவன் புகழப்படுவான். உணர்ச்சியின் வழியே செல்பவன் இகழப்படுவான் – வி.ச. காண்டேகர்
• உன்னை ஒருவர் குறைத்துப் பேசும்போது அடக்கமாக இரு – அது உன் வீரம். உன்னை ஒருவர் புகழ்ந்து பேசும்போது எச்சரிக்கையாக இரு -அது உன் விவேகம் – ஃபிராங்க்வுட்
• படித்து வளர்ந்த பின் நான் கற்றுக்கொண்டதைவிட, படிக்கத் தெரியாத என் தாயிடம் நான் கற்றுக்கொண்டவையே அதிகம் – காந்தியடிகள்
• கேலியைக் கண்டு ஏன் கவலைப்படவேண்டும்? உன் மீது ஒருவன் உப்பை அள்ளிப் போட்டால், புண்கள் இருந்தாலன்றி உனக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது – பைபிள்
• உங்களிடம் இருப்பதில் சிறந்ததை உலகத்துக்குக் கொடுங்கள். உலகம், தன்னிடம் உள்ளதில் சிறந்ததை உங்களுக்குக் கொடுக்கும்
– சார்லஸ் டிக்கன்ஸ்
• பிறருக்குக் கற்றுக்கொடுப்பது, நாம் இருமுறை கற்றதற்குச் சமம்
– நெ.து. சுந்தரவடிவேலு
• நீ வழியில் எத்தனை புயல்களைச் சமாளித்தாய் என்பது முக்கியமில்லை; கப்பலை பத்திரமாகக் கரைசேர்த்தாயா என்பதுதான் முக்கியம் – வில்லியம்

Related posts

Leave a Comment