You are here

புத்தகப் பயணம்

தங்கவேலு

 

புத்தகப் பயணம் கோவை மாவட்டத்தில் தொடங்கி கரூரில் மிகவும் உற்சாகத்துடன் முடிவு பெற்றது.
கோவையில் பாண்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பேரா. மோகனா மாநில தலைவர் (TNSF) தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தொடக்க விழாவில் பாதுஷா (மா.செயலாளர்), கோவை மாவட்ட நிர்வாகிகள் ராஜாமணி, V.G பாலகிருஷ்ணன் (செயலாளர்), மெகமோனிஷா (பொருளாளர்), கண்ணபிரான், மணி, சு. சரவணன், விசுவநாதன், தாமிரபரணி கலைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மதியழகன் புத்தகம் பேசுதே என்கின்ற பாடலோடு உற்சாகமாக குழந்தைகளுடன் குழந்தைகளை இணைத்து புத்தக வாசிப்பு சம்பந்தமான நாடகம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காமராஜ் பள்ளி, சங்கமம் பள்ளி, சாய் வித்யா விகாஸ் கோஜஸ், Boy angels L.E.F. பள்ளியில் கோவை மாவட்ட புத்தகப் பயணம் நிறைவு பெற்றது. (1-11-17 – 3-11-17)

திருப்பூர் முருகன் பள்ளியில் த.மு.எ.க.ச. மாவட்ட செயலாளர் திரு. R. ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து விக்னேஷ்வரா பள்ளி, போயன்பாளையம், அவினாசி அரசு மேல்நிலைப் பள்ளி, கருவலூர் சாந்தி வித்யாலயா, சமத்துவபுரம், வாவி பாளையம், அமுதா, PEM School, PUMS வெள்ளியங்காடு, PUMS பெரிச்சிபாளையம், தாய்த்மிழ் பள்ளியில் உற்சாகமாக முடிவுற்றது. (4-11-17 – 7-11-17)

கரூரில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி. மு. அய்யண்ணன் தொடங்கி வைத்தார். அதில் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஜான் பாஷா – செயலாளர், தீபன் சங்கர் – தலைவர், ஆரோக்கிய பிரேம் – பொருளாளர் பெற்று கொண்டார், ஆறுமுக அகாடமி, கிரசென்ட், அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளபட்டி, சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இறுதியாக சேரன் பள்ளியில் சேரன் பள்ளி தாளாளர் K. பாண்டியன். DEO. சாமிநாதன், பாதுஷா, மு. தியாகராஜன் ஆகியோர் நிறைவு செய்தனர்.

குழந்தைகளுக்கும் எங்களுக்கும் இது ஒரு புதுவித அனுபவமாக இருந்தது என்று ஆசிரியர்கள் கூறினர்.

மேலும், மாணவர்களுக்கு கதை சொல்லி வீதி நாடகம் பார்ப்பது புதிதாகவும் மிக உற்சாகமாகவும் புத்தகப் பயணத்தைக் கொண்டாடினர்.
குழந்தைகள் புத்தகத்தின் மகத்துவம் தன் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் பாட புத்தகம் தாண்டி இதர அறிவியல், வரலாறு, கதைகள் படிப்பது ஏன் அவசியம் என்பதை நாடக வடிவில் அறிந்து கொண்டனர். மேலும், மாணவர்களுக்கு 400 தலைப்புகளில் ஒவ்வொரு பள்ளியிலும் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. மாணவர்கள் உற்சாகத்துடன் வாங்கி புத்தகம்தான் எங்கள் உற்ற தோழன் என்று புத்தகப் பயணத்தைக் கொண்டாடினர்.

Related posts

Leave a Comment