You are here
Uncategorized 

நீலத் தங்கம் என்றால் என்ன?

– ரஃபீக் அகமது

• ‘பிஸ்கட்’ (Biscuit) எனும் பிரெஞ்சு வார்த்தையின் அர்த்தம், ‘இரண்டு நிலைகளில் சமைத்தெடுக்கப்பட்டது.’
• வாக்கியங்களின் முதல் எழுத்துகளை மட்டும் இணைத்தால் வார்த்தைகள் உருவாக்க முடிகிற கவிதை வடிவம் தமிழில் இருக்கிறது. அதன் பெயர், ‘கரந்துறை பாட்டு.’ ஆங்கிலத்தில் ‘அக்ரோஸ்டிக்’ (Acrostic) என்பார்கள்.
• புறாக்கள் மூலம் கடிதப் பரிமாற்றம் செய்யும் முறையை இந்தியாவில் ஏற்படுத்தியவர், ‘சந்திரகுப்த மௌரியர்.’
• ‘நீல ஜீன்ஸ்’ தயாரிக்கும் நிறுவனத்தை முதன் முதலாக ஆரம்பித்தவர், ‘லெவி ஸ்ட்ராஸ்’ (Levi strauss).
• இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் சீருடையில் மூன்று நட்சத்திரங்கள் இருந்தால் அவரது பதவி, ‘கேப்டன்.’
• மருத்துவத் துறையில் ‘பொன்னான நேரம்’ (Golden hour) என்று குறிப்பிடப்படுவது, ‘விபத்து நடந்ததற்குப் பிறகான ஒரு மணி நேரம்’ ஆகும். இந்த நேரத்தில் சரியான சிகிச்சை கிடைத்தால் நோயாளி பிழைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
• மோசமான திரைப்படங்களுக்கும் மோசமான நடிகர்களுக்கும் வழங்கப்பட்டுவரும் உலகப் புகழ் பெற்ற விருதின் பெயர், ‘கோல்டன் ராஸ்பெரி விருது’ (Golden raspberry awards).
• மிகவும் நீளமான தேசிய கீதத்தைக் கொண்ட நாடு, ‘கிரேக்கம்’ (Greece).
• நாம் மிகவும் அதிகம் பயன்படுத்தும் ஆங்கில எழுத்து, E. மிகக் குறைவாகப் பயன்படுத்தும் ஆங்கில எழுத்து, ‘Q.’
• உலகத்திலேயே மிக அதிகமான நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள், ‘அமெரிக்கர்கள்.’
• காடுகளின் மீதும் மரங்களின் மீதும் மிகவும் விருப்பம் கொண்டவர்களை, ‘நெமோபிலிஸ்ட்’ (Nemophilist) என்பார்கள்.
• ‘நீலத் தங்கம்’ என்று அறியப்படுவது தண்ணீர்.
• ‘கோகினூர்’ எனும் வார்த்தையின் அர்த்தம், ‘ஒளியின் மலை.’
• பாலைவனங்களைப் பற்றிய படிப்பின் பெயர், ‘எரிமோலஜி’ (Eremology).
• 1960, ஆகஸ்ட் 15ல் விடுதலை பெற்ற ஆப்பிரிக்க நாடு, ‘காங்கோ குடியரசு’ (Republic of congo).
• ‘இந்தியாவின் பழக்கூடை’ என்று அறியப்படுவது, ‘இமாசலப் பிரதேசம்’ (Himachal pradesh).
• ‘இந்திய நெருப்பு’ என்று அறியப்படும் மரம், ‘அசோக மரம்’.
• ‘பஞ்சலோகம்’ (ஐந்து உலோகம்) என்பது, செம்பு, ஈயம், வெள்ளி, தங்கம், இரும்பு ஆகியவையாகும்.
• உலகத்திலேயே அதிக வனப் பகுதி கொண்ட நாடு, ‘ரஷ்யா.’
• இந்தியாவில் மிகவும் குறைவான வேகம் கொண்ட ரயில், ‘நீலகிரி மலை ரயில்’ (மணிக்கு 10. 42 கிலோமீட்டர் வேகம்).
• சப்தத்தைப் பற்றிய படிப்பின் பெயர், ‘அக்கோஸ்டிக்ஸ்’ (Acoustics).
• பசிபிக் கடலில் உள்ள எரிமலைப் பகுதி, ‘Pacific ring of fire’ என்று அழைக்கப்படுகிறது.
• உலகத்தில் மிக அதிகமாக விற்பனை ஆகும் நாளிதழ், ‘Yomiuri Shimbun’ ஜப்பானிய நாளிதழான இதன் விற்பனை 2010 கணக்குப்படி, 10,021,000 பிரதிகள்.
• ஜப்பானிய மலர் அலங்காரக் கலையின் பெயர், ‘இகபானா’ (Ikebana).
• மிக அதிகமான விலா எலும்புகள் உள்ள பிராணி, ‘பாம்பு.’
• இந்தியாவில் மிக அதிகமாக ஆதிவாசிகள் உள்ள மாநிலம், ‘மத்தியப் பிரதேசம்.

Related posts

Leave a Comment