You are here
Uncategorized 

செத்துப் பிழைத்தல்

இறந்தவர்களுக்கு உயிர் கொடுப்பதற்கான தொழில்நுட்பத்தை அறிவியல் என்றாவது கண்டுபிடித்துவிடுமா? கண்டுபிடித்துவிடும் என்றுதான் பலர் நம்புகிறார்கள்!
ஆனால் அந்தத் தொழில்நுட்பம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டால் இப்போது உள்ளவர்களுக்கு என்ன பயன்? அதற்குத்தான் ‘கிரையோனிக்ஸ்’ (Cryonics) முறை இருக்கிறது! ‘Kryos’ எனும் கிரேக்க வார்த்தைக்கு ‘கடுங்குளிர்’ என்று அர்த்தம். அதிலிருந்து வந்ததுதான் கிரையோனிக்ஸ். இது என்னவென்று கேட்கிறீர்களா? இறந்த பிறகு என்றாவது உயிர் பெறவேண்டும் எனும் ஆசை உள்ளவர்கள், இறப்பதற்கு முன்பே கிரையோனிக்ஸ் திட்டத்தில் சேரவேண்டும். இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர் இறந்த உடனே மருத்துவர்கள் வந்து சவ உடலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படாமல் தாழ்நிலை 196 பாகையில் (Minus 196 Degree) பாதுகாப்பார்கள். என்றாவது அறிவியல், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் முறையைக் கண்டுபிடிக்கும்போது அதைப் பயன்படுத்தி இவர்களுக்கு உயிர் கொடுப்பார்கள்!
‘இது என்ன முட்டாள்தனம்!’ என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இதைக் கேளுங்கள், இதுவரை, ஏறத்தாழ ஆயிரம் பேர் இந்தத் திட்டத்தில் சேர்ந்திருக்கிறார்கள்! இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு இறந்த 250 பேரின் சவ உடலை மிகப் பெரிய ஜாடிகளில் குளிர் நிலையில் பாதுகாக்கிறார்கள். எங்கே? அமெரிக்காவில். இனிமேல் அவர்கள் திரும்பி வருவார்களா? உலகம் அதற்காகக் காத்திருக்கிறது!

Related posts

Leave a Comment