You are here
Uncategorized 

அறம் செய்ய விரும்புவோம் புத்தக வெளியீட்டு விழா!

அறம் செய்ய விரும்புவோம்
புத்தக வெளியீட்டு விழா!

 

மாலை 6 மணிக்கு, சென்னை கோடம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள நவபாரத் பள்ளிக் கட்டடத்தில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
தோழர் நல்லக்கண்ணு ஐயா ‘புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். சமத்துவம் நிறைந்த குழந்தைகளுக்கு அந்த நாடகநூல் சென்று சேரும். மாற்றம் தரும்’ என்று வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார்.

6 மணிக்கு நிகழ்வு துவங்கியது. அப்பள்ளியின் ஒன்றாம் வகுப்பு மாணவர், நான்காம் வகுப்பு மாணவர், எட்டாம் வகுப்பு மாணவியர் என எட்டு பேர் கொண்ட குழு, நாடகமாக அரங்கேற்றியது.

அறம் செய விரும்பு – என்ற நாடகக் காட்சியை அந்தக் குழந்தைகள் அவ்வளவு அற்புதமாக 2 மணிநேரத்தில் தயார் செய்து, 3 நிமிடங்களில் அழகாக நடித்துக் காட்டி வந்திருப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

நிகழ்விற்கு முன்னிலை வகித்த கல்வியாளரும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் நிறுவனருமான பிரின்ஸ் கஜேந்திர பாபு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

‘புக்ஸ் ஃபார் சில்ரன்’ பி.கே.ராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மூத்த பத்திரிகையாளரும், கல்வியாளருமான, பொன்.தனசேகரன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். மல்லிகை மகள் மாத இதழ், பதிப்பகம் ஆகியவற்றின் நிறுவனர் ம.கா.சிவஞானம் சிறப்புரை ஆற்றினார்.

புத்தகத்தை மூத்த பத்திரிகையாளர் பொன். தனசேகரன் வெளியிட பேராசிரியர் ரத்தினசபாபதி, ம.கா.சிவஞானம், பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பத்திரிகையாளராக இருந்து கொண்டு, குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதுவது என்பது மிகவும் கடினமான காரியம். இருப்பினும் இது போன்ற புத்தகங்களை மோ.கணேசன் தொடர்ந்து எழுதவேண்டும்’’ என்றார் பொன்.தனசேகரன்.

‘மோ.கணேசனை 15 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். நான் விகடனில் பணியாற்றிய போது, மாணவ பத்திரிகையாளராக விகடனுக்குள் நுழைந்தவர். ஒரு பட்டதாரி இளைஞருக்குள் இருக்கும் ஆர்வம், தேடலை இன்று வரை அவரிடம் நான் பார்க்கிறேன். அறம் செய்ய விரும்புவோம் என்ற தலைப்பில் அவர் எழுதியதை பாராட்டுகிறேன். இன்றைய சூழ்நிலையில் அறத்தின் தேவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. சமூகத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள். தீயவர்களும் இருக்கிறார்கள். நல்லவை நடக்க வேண்டுமென்றால், நல்ல விஷயங்கள் காதுகளில் விழுந்து கொண்டிருக்க வேண்டும். நல்ல விஷயங்கள் நம் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அந்த வகையில் அறம் செய்ய விரும்புவோம் என்ற புத்தகம், காலத்தின் தேவை கருதி வெளிவந்ததாக நினைக்கிறேன். இது எதிர்கால சந்ததிகள் அறம் பயின்று வாழ்வதற்கு வழிகாட்டியாக இருக்கும். இத்தருணத்தில் இது போன்ற புத்தகங்களை நிறைய எழுத வேண்டும். வாழ்த்துகள் கணேசன்’’ என்றார் ம.கா.சிவஞானம்.

இந்த புத்தகத்தை வாசித்த போது, நூலாசிரியரின் சமூக அக்கறை தெரிந்தது. ஆத்திசூடியை கதையாக எழுதி இருக்கிறார்கள். இவர் நாடகமாக எழுதி இருக்கிறார். கதையாக சொல்வது வேறு, நாடகமாய்
இறுதியாக நூலாசிரியர் மோ.கணேசன் நன்றியுரை வழங்கினார்.

Related posts

Leave a Comment