You are here

புத்தரின் பொன்மொழிகள்

உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதுதான்.

தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்.

நம் எண்ணங்களும் செயல்களும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக் கூடாது. மற்றவர்களுக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.

தன் வாழ்வில் கவனத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழ்ந்து, வெள்ளத்தால் சேதமடையாத ஒரு தீவைப்போல தன்னைப் பலப்படுத்திக்கொள்பவன்தான் அறிஞன்.

ஒருவனது எண்ணங்கள் எப்படி இருக்கின்றனவோ, அப்படியே அவன் ஆகிவிடுகிறான்.

ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்கமுடியும். வேறு ஒருவன் அவனுக்குத் தலைவனாக இருக்க முடியாது. தன்னைத்தானே அடக்கிக் கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதனே பெரிய பொறுப்புகளைப் பெற முடியும்.

கையில் புண் இல்லையென்றால் ஒருவன் தன் கையில் நஞ்சையும் எடுக்கலாம். நஞ்சு அவனைப் பாதிப்பதில்லை. அதுபோல நீங்கு செய்யாத ஒருவனுக்குத் தீங்கு நேர்வதில்லை.

ஆகாயத்துக்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.

எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து பாருங்கள். எது நல்லது என்று முடிவு செய்யுங்கள்.

முடிவு செய்ததையே உறுதியாக நம்பிப் பின்பற்றுங்கள்.

பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான்.

அமைதிக்கான உறுதியும் அதுதான்.

Related posts

Leave a Comment