You are here
Uncategorized 

தேசிய வனவிலங்கு வாரம்

காடுதான் வனவிலங்குகளின் வாழிடம். காடுகள் சிறுகச் சிறுகக் குறைந்து வருகின்றன. பல அரிய வனவிலங்குகளும் அழிந்துகொண்டிருக்கின்றன. சில முற்றிலும் அழிந்துவிட்டன. வனவிலங்குகள் தப்பித்தவறி மனிதர்களின் கண்ணில் பட்டுவிட்டால் அவை உயிர் பிழைப்பது மிகவும் சிரமம்தான். இந்த உலகில் மனிதன் வாழ்வதற்கு எந்த அளவு உரிமை உள்ளதோ, அந்த அளவு உரிமை விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மற்ற பிராணிகளுக்கும் உண்டு.
மனிதர்கள் அச்சத்தின் காரணத்தாலும் வெறுப்பாலும் பொழுதுபோக்குக்காகவும் பொருளாதார லாபத்துக்காகவும் விலங்குகளைக் கொல்கிறார்கள். இது ஒட்டுமொத்த மனித வாழ்க்கையையே பாதிக்கும் செயலாகும்.
ஏனென்றால், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவைதான். ஒன்று பாதிப்படைந்தால், அது தொடர்பான மற்றொன்றும் பாதிப்படையும். இது இப்படியே தொடரும். பல கண்ணிகளால் ஆன ஒரு சங்கிலியின் ஒரு கண்ணி அறுபட்டால் அனைத்துமே பாதிப்படையும் அல்லவா, அதுபோன்றுதான். எனவே, சுற்றுச்சூழலைக் காப்பதும் – இந்த உலகில் விலங்குகளும் பறவைகளும் மற்ற பல்வேறு உயிரினங்களும் வாழ்வதற்கான உரிமையை மதிப்பதும் நம் மிகப் பெரிய கடமையாகும். நாம் என்றும் மறக்காமல் இதை நினைவுகொள்வோம்.

Related posts

Leave a Comment