You are here

தகவல் துளிகள்

stevelenzphoto/iStockphoto

செல்லக் கரப்பான்கள்
பூனைகளையும் நாய்களையும் வீடுகளில் வளர்ப்பதுபோல, கரப்பான் பூச்சிகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். சாதாரண கரப்பான் பூச்சி அல்ல. ‘மடகாஸ்கர் ஹிஸ்ஸிங் காக்ரோச்’ (Madagascar Hissing Cockroach). இது மூன்று அங்குல நீளமும் கடினமான மேலோடும் கொண்டது. நம் பிரதேசத்துக் கரப்பான்களுக்கு சிறகுகள் இருக்கின்றன; ஹிஸ்ஸிங் கரப்பான்களுக்கு சிறகுகள் இல்லை. பெயரைப்போலவே இது மடகாஸ்கரைச் சேர்ந்தது.

விசித்திர நத்தை
கோன் ஸ்நெய்ல் (Cone snail) என்று ஒரு நத்தை இனம் இருக்கிறது. இதன் மேலோடு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அழகாக இருக்கிறதே என்று ஓடிச் சென்று கையில் எடுத்தால், அவ்வளவுதான். வந்தது ஆபத்து! இதன் மேலோட்டுக்குள்ளிருந்து நாடாபோன்ற ஒரு உறுப்பு வெளியே நீண்டு வந்து குத்தும். இந்த உறுப்பு, நத்தையின் உடலுக்குள் இருக்கும் ஒரு விஷச் சுரப்பியிலிருந்து வருகிறது. இந்த விஷம் மனித உடலுக்குள் சென்றால், கொஞ்சம் நாட்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், சிறுகச் சிறுக தசைகள் சோர்வடையும். பார்வைத் திறன் குறையும். மூச்சுத் திணறல் வந்து மரணம்கூட ஏற்படும்!

 

காலை மதியச் சாப்பாடு!
சிலர் காலையில் மிகவும் தாமதமாகத்தான் சாப்பிடுவார்கள். உதாரணமாக, காலையில் ஏறத்தாழ பதினொரு மணிக்கு சாப்பிடக்கூடும். விடுமுறை நாட்களில் பலர் இதுபோன்று சாப்பிடுவார்கள். இவ்வளவு தாமதமாகச் சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் மதிய உணவு சாப்பிடமாட்டார்கள். இப்படி இரண்டு வேளைக்கும் சேர்த்துச் சாப்பிடும் காலை உணவை, ‘ப்ருஞ்ச்’ Brunch என்று சொல்வார்கள். Breakfast (காலை உணவு), lunch (மதிய உணவு) ஆகிய வார்த்தைகளை சேர்த்து உருவாக்கிய வார்த்தைதான் ப்ருஞ்ச்.

Related posts

Leave a Comment