You are here
Uncategorized 

டோடோ (Dodo) – அழிந்துபோன உயிரினம்

இந்தியப் பெருங்கடலில் இருக்கும் மொரீஷியஸ் தீவில் மட்டும் காணப்பட்ட ஒரு வகைப் பறவைதான் ‘டோடோ’. இது புறா இனத்தைச் சேர்ந்தது. இந்தப் பறவைகளால் பறக்க முடியாது. ஒரு பறவையின் எடை, 12 லிருந்து 24 கிலோகிராம் வரை இருக்கும்.

1507ல் மொரீஷியஸ் தீவில் கப்பலிறங்கிய போர்ச்சுக்கீசிய மாலுமிகளிடமிருந்துதான் இந்தப் பறவையைப் பற்றிய விவரங்கள் முதன் முதலாகத் தெரிய வந்தன. ஆனால், 1790 – 1800களில், அதாவது கண்டுபிடிக்கப்பட்டு 300 வருடங்களுக்குள்ளேயே டோடோ பறவைகள் அழிந்துபோயின.
இந்தப் பறவைகள் சதைப் பற்றான உடல் கொண்டவை. இவற்றின் நடமாட்டமும் மந்த கதியில் இருக்கும். இந்தக் காரணங்களால்தான் அவை பெரிதும் வேட்டையாடப்பட்டன. மனிதனின் பேராசையின் காரணமாக அழிந்துபோன உயிரினங்களில் ஒன்றுதான் டோடோ.

டோடோ பறவையுடன் தொடர்புடைய ஒரு செய்தியும் உண்டு. டோடோ பறவைகள் அழந்துபோனவுடன், மொரீஷியஸில் இருந்த ஒரு வகை மரங்களும் அழிந்துபோகத் தொடங்கின. இந்த மரத்தின் பெயர், ‘கல்வேரியா மேஜர்’(Calvaria major). 1973 ஆம் ஆண்டு கணக்குப்படி, மொரீஷியஸில் 13 கல்வேரியா மேஜர் மரங்கள் மட்டும்தான் மிச்சமிருந்தன. இந்த மரங்களோ, முன்னூறு ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுடையவை.

டோடோ பறவை அழிந்தபிறகு இந்த மரத்தின் ஒரு விதைகூட முளைக்கவில்லை. காரணம் என்ன தெரியுமா? இந்த மரத்தின் பழங்கள்தான் டோடோவின் உணவாக இருந்தன. கல்வேரியா மேஜர் பழங்கள் மிகவும் கடினமாக இருக்கும். அவை, டோடோ பறவையின் உணவாக அதன் வயிற்றுக்குள் செல்லும்போது, அவற்றின் கடினமான மேல் ஓடு மென்மையாகிறது. டோடோவின் செரிமான நீரால் மென்மையாக்கப்பட்ட விதைகள் மட்டுமே மண்ணில் முளைக்கும். டோடோ பறவை அழிந்தபிறகு இந்த செயல்பாடுகளெல்லாம் இல்லாமல்போயின. எனவே கல்வேரியா மேஜர் மரமும் அழிந்துபோனது.

இயற்கை, எப்படியெல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கிறது, பார்த்தீர்களா!

Related posts

Leave a Comment