You are here
கட்டுரை 

ஐன்ஸ்டைன் சொல்

சிந்தனையால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. சிந்திக்கச் சிந்திக்க எண்ணங்கள் சிறப்படையும். சிந்திப்பது மனிதனின் தனி உரிமை. சிந்திக்கத் தெரிந்தவனே மனிதன். அறிவாளி.

நமது அறிவை மற்றவர்களின் அறிவைக் கொண்டு மெருகேற்றிக்கொள்வது நல்லது.
படித்தவர்கள் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் நல்லவர்கள் தேவைப்படுகிறார்கள். நல்ல மனம் அற்ற அறிவாளிகளால் தொல்லைகள்தான் விளையும்.

மற்றவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எனக்கு முக்கியம் இல்லை. இதற்கும், மற்றவர்களுக்கும் எனக்கும் இடையிலான அன்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மனிதனால் உயிருள்ள ஒரு புழுவைக்கூட செயற்கையாக உருவாக்க முடியாது. ஆனால், கடவுள்களை உருவாக்கிக்கொண்டே இருப்பான்.
தனிமையான சூழ்நிலையில் நல்ல எண்ணங்கள் தோன்றக்கூடும். நல்ல எண்ணங்களின் விளைவாக பல நல்ல செயல்கள் மலர வாய்ப்பு இருக்கிறது.

நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் மற்றவற்றிலிருந்து வேறுபட்டது. இதுபோன்ற வேறுபாடுகள்தான் இந்த உலகத்தின் பொதுவான பண்பு.
விடா முயற்சியும் தெளிவான அறிவும் உங்களை உயர்ந்தவர்களாக மாற்றிக் காட்டும்.

Related posts

Leave a Comment