You are here
கட்டுரை 

நீலக்கிளி (Blue Winged Parakeet)

அழிந்துவரும் உயிரினங்கள்

நீலம் கலந்த சாம்பல் நிற இறகுகள் கொண்ட கிளிதான் நீலக்கிளி. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏராளமாக வசிக்கின்றன. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் (coorg) இவை கூட்டம் கூட்டமாகப் பறந்து திரிவதைப் பார்க்கலாம். ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியா மாநிலத்திலும் (Tasmania) இவை காணப்படுகின்றன.

நீலக்கிளிகளின் நீண்ட வாலின் முனை மஞ்சள் நிறத்தில் இருக்கும். நீலக்கிளியின் உடல் நீளம் 30லிருந்து 38 சென்டிமீட்டர்வரை. 15லிருந்து 45 கிராம்வரை எடை இருக்கும். ஆண் கிளியின் கழுத்தைச் சுற்றி நீல நிறத்திலும் பச்சை கலந்த சாம்பல் நிறத்திலும் இரண்டு கோடுகளைப் பார்க்கலாம். ஆண் கிளியின் அலகு சிவப்பு நிறம். பெண் கிளியின் அலகு கருப்பு நிறம். நீலக்கிளிக் குஞ்சுகளின் அலகு ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். நீலக்கிளிகள், உயரமான மரங்களின் மேல் கிளைகளில்தான் கூடுகட்டுகின்றன. மற்ற பறவைகளின் கூடுகளைக் கைப்பற்றவும் செய்யும். பழங்கள், விதைகள் முதலியவைதான் உணவு. நான்கு அல்லது ஐந்து கிளிகள் குழுவாகச் சேர்ந்துதான் வசிக்கும். சில நேரங்களில் மட்டும், அதிக உறுப்பினர்களுள்ள குழுவைப் பார்க்கலாம்.

இவற்றின் ஓசை, மற்றக் கிளிகளின் ஓசையைவிட வித்தியாசமாக இருக்கும். நீலக்கிளிகள் வலசை செல்வதுண்டு.
நீலக்கிளிகளை மனிதர்கள் சட்டவிரோதமாகப் பிடித்து, வளர்ப்புப் பறவைகளாக்க முயற்சி செய்கிறார்கள். அதனால் காடுகளில் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

Related posts

Leave a Comment