You are here

அறிஞர்களின் பொன்மொழிகள்

மனித மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களே இந்த உலகின் மிகச் சிறந்த வைரங்கள். – பீட்டர் மார்சன்
நண்பனோடு அளவோடு நட்புகொள், நாளை அவனே உனக்கு விரோதியாகலாம். எதிரியிடம் அளவாகப் பகைமைகொள், ஏனெனில் நாளை அவன் உனக்கு நண்பனாகக்கூடும். – நபிகள் நாயகம்
நான் வாழ்வதற்காக என் பெற்றோர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். ஆனால், நான் முறையாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கே பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். – மாவீரன் அலெக்ஸாண்டர்

சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு செய்தால் எந்த வேலையும் கஷ்டமாக இருக்காது. – ஹென்றி போர்ட்
கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஓடிச் செல்வதில் பயனில்லை. முன்கூட்டியே புறப்பட்டிருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். – பான்டெய்ன்
தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக்கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்கள். – மாமேதை லெனின்

ஒவ்வொரு நல்ல செயலும், நல்ல எண்ணமும் முகத்துக்கு ஓர் அழகை – ஒளியைக் கொடுக்கிறது. – ரஸ்கின்
வேரிலிருந்து அடிமரமும், அடிமரத்திலிருந்து கிளைகளும் தோன்றுகின்றன. அதைப்போல அடக்கத்திலிருந்து அறமும், அறத்திலிருந்து நிறைய நன்மைகளும் ஏற்படுகின்றன.
– மகாவீரர்

நல்லவை எங்கே இருந்தாலும் ஒளிவிட்டுச் சுடரும். கெட்டவை இமயமலை உச்சியில் வைக்கப்பட்டிருந்தாலும் இருள் கவிந்து மறைக்கப்படும். – புத்தர்
அரிய சாதனைகள் வலிமையினால் அல்ல, விடா முயற்சியினால்தான் சாதிக்கப்படுகின்றன. – சாமுவல் ஜான்சன்

Related posts

Leave a Comment