You are here
Uncategorized 

வானவில் யூகலிப்டஸ்

(Rainbow eucalyptus)

செல்வி

ஹவாயில் (Hawaii) கவாய் (Kauai) எனும் இடத்தில் இருக்கும் யூகலிப்டஸ் மரங்களைப் பார்த்தால் யாரோ வண்ணம் தீட்டி வைத்த மரங்கள்போன்றிருக்கும். இந்த மரங்கள் ரெயின்போ யூகலிப்டஸ் மரங்கள் என்று அறியப்படுகின்றன. மரத்தின் மேல் தோல் வருடத்தில் ஒருமுறை பல சமயங்களில் உதிர்ந்துபோகும். அப்போது உள்ளிருக்கும் மரத்தின் பச்சை நிறத்தைப் பார்க்க முடியும். இந்தப் பச்சை நிறம் நாட்கள் செல்லச் செல்ல நீலம், ஊதா, ஆரஞ்சு, செம்பழுப்பு ஆகிய நிறங்களாக மாறும். அவ்வாறு மரத்தின் தோல், வானவில்போன்று பல நிறங்களில் காணப்படும். இந்த மரங்கள் ஏறத்தாழ 250 அடி உயரம் வளரும். அகலம் ஏறத்தாழ ஆறு அடி. ஒவ்வொரு மரத்தின் வண்ண அமைப்பும் ஒவ்வொரு வகையில் இருக்கும்.

Related posts

Leave a Comment