You are here
நூல் அறிமுகம் 

(முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் சாதியும் தேர்தல் அரசியலும்)

பேராசிரியர் கே.ஏ. மணிக்குமார் எழுதிய
Murder in Mudukulathur:
Caste and Electrol Politics in Tamilnadu
(முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் சாதியும் தேர்தல் அரசியலும்)
புத்தக வெளியீட்டு விழா

பேராசிரியர் கே.ஏ. மணிக்குமார் எழுதிய (Murder in Mudukulathur: Caste and Electrol Politics in Tamilnadu) முதுகுளத்தூர் படுகொலை, தமிழ்நாட்டில் சாதியும் தேர்தல் அரசியலும் என்னும் நூல் வெளியீட்டு விழா 29.05. 2017 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேனாள் துணைவேந்தர் ம.சு.பல்கலைக் கழகத்தின், முனைவர் வே. வசந்திதேவி தலைமை வகித்தார். இந்நூலை கஸ்தூரி – சன்ஸ் லிமிட்டெட்டின் தலைவர் என். ராம் நூலை வெளியிட்டார்.
விழாவில் முதல் பிரதியை (உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, மூத்த ஆலோசகர் கே.விஜயகுமார் பிரதியைப் பெற்றுக் கொண்டார். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் திருச்சி பொருளாதார பேராசிரியர் (ஓய்வு) முனைவர் வெ.பா. ஆத்ரேயா புத்தக பிரதியின் விற்பனையை துவக்கி வைத்தார். வெளியீட்டு விழாவில் – லயோலாக்கல்லூரியின் முதல்வர் வன. பிதா சேவியர் ஆரோக்கியசாமி, வாழ்த்துரை வழங்கினார்.

Related posts

Leave a Comment