You are here
மார்க்சியம் 

மார்க்சியம் கற்போம் மார்க்சிடம் கற்போம்

முன்வெளியீட்டு திட்டம் தொடக்கம்

மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் 200ஆவது பிறந்தநாள் விழா வெள்ளியன்று (மே 5) பாரதிபுத்தகாலயத்தில் கொண்டாடப் பட்டது.மார்க்ஸ் 200ம் ஆண்டையொட்டி மார்க்ஸ், ஏங்கெல்ஸ் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் 12 தொகுதிகளை பாரதி புத்தகாலயம் வெளியிட உள்ளது. சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த தொகுப் பின் விலை 3 ஆயிரம் ரூபாயாகும். முன்வெளியீட்டு திட்டத்தின் கீழ் 1500 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது.இந்த முன்வெளியீட்டுத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடிக்கு தீர்வு காண மார்க்ஸ்சின் ‘மூலதனம்’ நூலை படியுங்கள் என்று போப் கூறினார்.
முதலாளித்துவ நெருக்கடிக்கும், மிகப்பெரிய பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கும் தீர்வு காண்பதாக மார்க்சியம் உள்ளது” என்றார்.“இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல் 1 விழுக்காடு பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு, நாட்டின் மொத்த மதிப்பில் 49 விழுக்காடாக இருந்தது. தற்போது அது 58 விழுக்காடாக மாறியுள்ளது. இதிலிருந்து மீண்டுவர மார்க்சியம்- லெனினியம் தேவைப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.அந்நியர்களுக்கு எதிராக 1857ல் சிப்பாய் எழுச்சி நடைபெற்றது. அதனை ஆய்வு செய்த மார்க்ஸ், “பல காரணங்களால் மாறுபட்டிருக்கக்கூடிய இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து அந்நியர்களை எதிர்த்தது பாராட்டுக்குரியது. இந்திய சமூகம் பல நூறு ஆண்டுகளாக தேக்கமுற்றுள்ளது. அச்சமூகத்தின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு சாதிய ஆதிக்கம் தடையாக உள்ளது” என்றார். மார்க்சியம் – லெனினியம் வறட்டு தத்துவம் அல்ல.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சூழலுக்கு ஏற்ப பொருத்திப் பார்த்து அமல்படுத்த வேண்டியதாகவும், உலகுக்கு வழிகாட்டுவதாகவும் மார்க்சியம் – லெனினியம் உள்ளது என்றும் ராமகிருஷ்ணன் கூறினார்.ஜூன் 5 வரை முன்பதிவுபாரதி புத்தகாலய பொறுப்பாளர் க.நாகராஜன் கூறுகையில், “மார்க்சியம் கற்போம், மார்க்ஸ்சிடம் கற்போம்’ என்ற முழக்கத்தோடு பாரதி புத்தகாலயம் இந்நூல்களை கொண்டு வருகிறது. ஜூன் 5ந் தேதி வரை வாசகர்கள் முன்பதிவு செய்யலாம். ஏங்கெல்ஸ் நினைவு தினமான ஆக.5 அன்று நூல்கள் வெளியிடப்பட உள்ளது.” என்றார்.பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வரலாற்றுப் பேராசிரியர் ஆர்.சம்பகலஷ்மி, ஆய்வாளர் வ.கீதா, புத்தகாலய நிர்வாகி ப.கு.ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

Related posts

Leave a Comment