You are here
Uncategorized 

காண்டாமிருகம் (Rhinoceros)

அழிந்துகொண்டிருக்கும் விலங்குகள்

ஹசன் மாலுமியார்

முகமூடிக் கொள்ளையர்கள் டப்ளினில் ஓர் அருங்காட்சியகத்தை உடைத்துத் திறந்து 65 லட்சம் டாலர் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள். அவர்கள் தங்கத்தையோ வைரத்தையோ கொள்ளயடித்துச் செல்லவில்லை. அவர்கள் வேறு எதைத் திருடிச் சென்றார்கள்? நான்கு காண்டாமிருகத் தலைகளைத்தான்அவர்கள் எடுத்துச் சென்றார்கள். காண்டாமிருகத்தின் கொம்புகளில் கேன்சர் நோய்க்கான மருந்து இருக்கிறது எனும் மூடநம்பிக்கைதான் அந்த விலங்கின் உயிருக்கு அச்சுறுத்தலாகிறது. காண்டாமிருகத்தின் கொம்புக்கு மிக அதிகமான விலை கிடைப்பதால் காண்டாமிருகங்கள் கொல்லப்படுகின்றன.
சீனாவிலும் வியட்னாமிலும் பழைய வீடுகளில் காண்டாமிருகக் கொம்பை காட்சிப்படுத்துவதுண்டு. இந்த வழக்கம், பெருமையைக் காட்டும் அடையாளமாகக் கருதப்பட்டது.

காண்டாமிருகத்தின் தோல் ஒன்றரை சென்டிமீட்டர் முதல் ஐந்தரை சென்டிமீட்டர்வரை கனமுள்ளதாக (Thickness) இருக்கும்.
காண்டாமிருகத்தின் கொம்புகள் அதன் வாழ்நாள் முழுதும் வளர்ந்து கொண்டிருக்கும். இந்தியக் காண்டாமிருகத்துக்கு ஒரு கொம்புதான் இருக்கிறது.
உலகத்தில் மொத்தம் ஐந்து இன காண்டாமிருகங்கள் உள்ளன. இரண்டு இனங்கள் ஆப்பிரிக்காவிலும் மூன்று இனங்கள் ஆசியாவிலும் உள்ளன. இவை படுத்துக்கொண்டும் நின்றுகொண்டும் தூங்கக்கூடியவை.

காண்டாமிருகங்கள் பெரிய உடல் கொண்டிருந்தாலும், ஓடுவதிலும் திறமையுள்ளவை. மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். தண்ணீர் குடிக்காமல் நான்கைந்து நாட்கள் இருக்கவும் முடியும்.

காண்டாமிருகத்தை ஆங்கிலத்தில் Rhinoceros என்று அழைக்கிறார்கள். மூக்கு எனும் பொருளுடைய Rhino, கொம்பு எனும் பொருளுடைய Ceros ஆகிய கிரேக்க வார்த்தைகள் சேர்ந்துதான் இந்தப் பெயர் உருவானது.

Related posts

Leave a Comment