You are here
மற்றவை 

கண்கள்

மாதவன்

வெளிச்சம் குறைவான இடத்தில் படிப்பதோ, வேலை செய்வதோ கூடாது. மங்கிய வெளிச்சத்தில் படிக்கும்போது நம் கண்களுக்கு அதிக சிரமமாக இருக்கும். அதனால் கண்கள் சோர்வடையும்.

சூரியனுக்கு நேராக ஒருபோதும் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. புற ஊதாக் கதிர்கள் (Ultra Violet) நேரடியாகக் கண்களின் மீது பட்டால், அது கண்களின் விழித்திரையை (Retina) கடுமையாகப் பாதிக்கும்.

கணிப்பொறித் திரையையோ, கைப்பேசித் திரையையோ நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. வெறும் கண்களால் நீண்ட நேரம் இப்படிப் பார்த்துக்கொண்டிருந்தால் கண்களில் உள்ள நீர் வற்றிப்போகும். இது கண்களுக்கும் பார்வைத் திறனுக்கும் கேடு விளைவிக்கும்.

கண்கள் ஆரோக்கியத்துடன் இருக்க நம் உணவில் பழங்களும் காய்கறிகளும் முட்டையும் பாலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

கண்களில் ஏதும் அரிப்பு ஏற்பட்டால் உடனே கண்களைப் பலமாகக் கசக்கிக்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் கண்களில் உள்ள அணுக்கள் சேதமடையும். அதனால் கண்களைத் தொடும்போது சுத்தமான விரல்களால் மென்மையாகத் தொடவேண்டும்.
குளிர்ச்சியான தண்ணீரில் அடிக்கடி கண்களைக் கழுவிக்கொள்வது மிகவும் நல்லது. கண்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும் கண்களில் உள்ள தூசு நீங்குவதற்கும் இது உதவும்.

இந்த உலகத்தை நமக்குக் காட்டுவது நம் கண்கள்தான். அதனால் நம் கண்களை மிகவும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Related posts

Leave a Comment