You are here
Uncategorized 

அ. பாக்கியம் எழுதிய பசு பாதுகாப்பு: பாசிச அணிதிரட்டல்

நூல் வெளியிடு

மூளை வளர்ச்சிக்கு அடிப்படையே அசைவ உணவுதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள “பசு பாதுகாப்பு: பாசிச அணிதிரட்டல்” சிறுநூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று (மே 28) சென்னையில் நடைபெற்றது.

இந்நூலை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் வெளியிட, மாவட்டக் குழு உறுப்பினர் வி.செல்வி பெற்றுக்கொண்டார். இந்நூல் குறித்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வே.மீனாட்சிசுந்தரம் பேசியது வருமாறு:இந்தியாவில் உள்ள 120 கோடி பேரில் 20 கோடிபேர்தான் சைவம் உண்பவர்கள். மீதமுள்ள 100 கோடிபேர் அசைவ உணவு உண்பவர்கள். அனைவரும் சைவம்உண்ண ஆரம்பித்தால் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும். மூளை வளர்ச்சிக்கு அடிப்படையே அசைவ உணவுதான். குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற காரணமாக அமைந்தவை, சொந்த உழைப்பின் மூலம்பொருளை தேடிச் சென்றதும், அசைவ உணவை வேக வைத்து உண்டதும்தான். மூளை மட்டும்தான் இல்லாததை கற்பனை செய்யும். மூளையின் ஆற்றலுக்கு அடிப்படையானது அசைவ உணவு.

அண்டை நாடுகளுடன் மோதிக்கொண்டும், உள்நாட்டில் கலவரத்தை உருவாக்கியும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பது, தேர்தலை தள்ளிப்போடுவது போன்ற வேலைகளை பாஜக அரசு செய்து வருகிறது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளை விவாதிக்காமல் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறது. இவற்றிற்கு எதிராக மக்களைத் திரட்டும் ஊழியர்களுக்கு இந்நூல் ஆயுதமாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் நூலாசிரியர் ஏ.பாக்கியம், பாரதி புத்தகாலய நிர்வாகி நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment