You are here

மாற்றம் ஒன்றே மாறாதது

மாற்றம் ஒன்றே மாறாதது

“கல்வியையும்,மருத்துவ சேவையையும் எல்லா மக்களுக்கும் ஒரே தரமான,விலையற்ற உரிமையாக நிலை நாட்டுவதைத் தன் கடமையாகக் கொள்ளும் அரசே உண்மையான ஜனநாயக அரசு.”
– அமர்தியாசென் (பொருளாதார அறிஞர்)
தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறையில் நடந்துவரும் அதிரடி மாற்றங்கள் மக்களிடையே மாறுபட்ட கருத்துகளை ஏற்படுத்தியுள்ளன.என்றாலும் பொதுவாக பதட்டத்தில்றோர்கள்.-குறிப்பாக மத்தியதர வர்க்கம். மதிப்பெண்களைத்துரத்தும் மன அழுத்தத்தில் குழந்தைகள்.துருப்பிடித்து முனை மழுங்கிய கல்விமுறை.இந்தச்சூழலைச் சாதகமாக்கி பணக்கொள்ளையில் ஈடுபடும் தனியார் கல்வி நிறுவன முதலாளிய வர்க்கம்-என இவ்வாறு முடியாமற் தொடரும் அவலத்தின் பெயர்தான் தமிழகத்தின் கல்வி.நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அரசாங்கத்தின் இலவசக்கல்வி இருக்கிறது.ஆனால் அதனை வெகுமக்களுக்குக் கொண்டு சேர்க்காமலேயே கல்வி உரிமைச்சட்டம் பல்பிடுங்கப்பட்டு விட்டது.

தியகல்விக்கொள்கை என்கிற பெயரில் கார்ப்பரேட் – காவிக்கூட்டணிக் கல்வியில் குலக்கல்வி முதல் பகவத்கீதை பஜனைவரை மோடியின் மோசடி மறுபுறம். இதற்கு நடுவில் ரேங்க் அடிப்படையில் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுதலை நிறுத்தியும்,மேநிலைக்கல்விப் பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வரப்போகும் அறிவிப்பை வெளியிட்டும் நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் பள்ளிக்கல்வித்துறைச் செயலர். ஏனெனில் இவை நமது நீண்ட நாளையக் கோரிக்கைகள்.ஆனால் நாம் தேடும் மாற்றங்கள் இவை மட்டுமே அல்ல.நாம் கேட்பது மாற்றுக்கல்விக்கான வசந்திதேவி கல்விக்குழு பரிந்துரைகளின் முழுமையான அம்சங்கள் அமலாகும் நாள். வசதி படைத்தவர்களுக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்வி எனும் நிலையை மாற்ற உண்மையான கல்விஉரிமைச்சட்டம்.கடந்த 50 ஆண்டுகளில் மாறிவரும் இந்திய-பன்னாட்டு முதலாளித்துவ முறையின் தேவைகளுக்கு ஏற்ப பொதுகல்வி தன்னைத் தகவமைத்துக் கொண்டதைத்தான் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.இந்தச்சூழலில் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை கொண்டுவரவிருக்கும் புதிய பாடமுறை,ராஜீவ் காந்தியின் புதிய கல்விக்கொள்கையால் ஏற்பட்ட பல அவலங்களைச் சரி செய்துவிடும் என்கிற நம்பிக்கையை விதைத்துள்ளது உண்மையே.மதிப்பெண்களைவிட மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் தருதல்,மனப்பாடத்தைவிட அறிவுவளர்ச்சி நோக்கிய கல்வி,மன அழுத்தம் தராத-மனஎழுச்சியோடு ஆர்வம் கொள்ளவைக்கும் பயிற்றுமுறை.

வையே முதல் நோக்கில் முறை மாற்றமாக இருக்க வேண்டும்.மத்திய நுழைவுத் தேர்வு-நீட்-வந்ததால் மாற்றுகிறோம் என்று தொடர்ந்து பேசப்படுவதே நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது.இந்தியா மாதிரியான ஒரு நாட்டில் நமது கல்வி சமூகத்திற்கான கல்வியாக இருக்கவேண்டும் என்பது கோத்தாரி கல்விக்குழு உட்பட சமூக ஆர்வலர்களின் குரல்.பாடத்தை உரக்கக்கத்துவதும் கூட்டமாக ஒப்பிப்பதும் குட்டித்தேர்வுக்கூடங்களையே வகுப்பறைகளாக மாற்றுவதும் முடிவடைந்து எப்போது சுயதேடல்,வாசிப்பு,விவாதம் என கல்வி மிளிர்கிறதோ அப்போது நம் கல்வி சிறப்பான சமூகக்கல்வியாக மாறும்.அதற்கான சில முக்கிய அடிவைப்புகளை நமது தற்போதைய பள்ளிக் கல்வித்துறை எடுத்திருக்கிறது என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.இது தொடரட்டும்….
– ஆசிரியர் குழு

Related posts

Leave a Comment