You are here
நூல் அறிமுகம் 

லெமுரியக் கண்டத்து மீன்கள்

இரா தெ. முத்து

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் துடிப்பான கவிஞர் ஆன்மன். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு லெமூரியக் கண்டத்து மீன்கள். முகநூலில் இவர் இடும் கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதைக் கவனிக்க முடிகிறது. நேர்முகத்தில் சூழலைக் கலகலப்பாக வைத்திருப்பதில் வல்லவர் என்பதையும் அறியமுடிகிறது. தொகுப்பின் தொடக்கத்திலேயே தன் சொற்கள் வழியாக யாரென அறிய முடிகிறதோ அதுதான் தான் என்று தன்னிலை விளக்கம் தந்து விடுகிறார்.இருத்தலுக்கும் அதை மீறுவதற்குமான மனநிலைக்கான ஊடாட்டமாக இவரின் கவிதை இருக்கிறது. அதிகாரம், அங்கீகாரம்,சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார். கேள்விகளை தீர்க்கமாக்கி கைமாற்றாமல், அய்யங்களால் அனுமானங்களால் உலவவிடுகிறார் ஆன்மன். கானுயிர்களை விடுதலை உணர்விற்கான படிமமாகப் பயன்படுத்தலாம்.மானுட வாழ்வின் நிறைதலுக்கு கானுயிர்களின் சுருக்கப்பட்ட தேவையை முன் வைப்பதன் வழி, வளங்களைச் சுரண்டுவோர் மீதான பெருக வேண்டிய கோபம் கவிதைகளில் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகிறது. இருப்பியலைக் கலைத்துப் போட வேண்டிய கவிதையின் மயங்கித் திரியும் ஊடாட்டம், தற்கொலைக்குச் சமமானதாகி திரிந்து நிற்கிறது.
“மேய்ச்சலின்போது ஈன்ற தன் குட்டிகளைத்
தூக்கிச் சுமக்கும் மேய்ப்பனின்
கால்களை நாவால் முத்தமிட்டு
உரசி நடக்கிறது
செம்மறி“

Related posts

Leave a Comment