You are here
நூல் அறிமுகம் 

பாரதியார் சரித்திரம்‘

மகாகவி பாரதியின் வாழ்க்கைத் துணைவியாக வாழ்ந்த செல்லம்மாள் படிப்பறிவு மிகவும் குறைவாகப் பெற்றிருந்த  ஓர் எளிய கிராமத்துப் பெண். அவர் கண்ட கனவுகளெல்லாம்  நிராசையாகி நொறுங்கிப் போயிருந்திருக்க வேண்டும். எனினும் பாரதியின் கவிமனதைப் புரிந்து கொண்டு தொடர்ந்து ஈடு கொடுத்து வந்திருக்கிறார் அவர் என்பதை இந்நூலைப் படிப்போர் உணர முடியும். கண்ணீரை வரவழைக்கும் பல வரிகள் செல்லம்மாவினால் கூறப்பட்டுள்ளன. அவருடைய பேதை நெஞ்சின் அடியாழத்திலிருந்து, ஆழ்ந்த உணர்ச்சி வெளிப்பாட்டுடன் வெளிப்பட்ட உண்மை மொழிகள் இவை. எனவேதான் ’கவியோகி’ சுத்தானந்த பாரதி,  ‘நேரே நின்று பேசுவதுபோல்’ அவ்வளவு சரளமாக இந்த நூலை எழுதியளித்த ஸ்ரீமதி பாரதிக்குத் தமிழர்கள் நன்றி  செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று பாராட்டியிருக்கிறார். அதோடு, பாரதியாரின் காதல், வீரம், தியாகம், நாட்டன்பு, தமிழன்பு, தைரியம், ஈகை, சமத்துவம், கவிதா சக்தி, அன்பு முதலிய குணங்களைப் படம் பிடித்ததுபோல் அம்மையார் எடுத்துக் காட்டியிருக்கிறார்  எனவும் கூறுகிறார். பேச்சு நடையில் 37 தலைப்புகளில் சிறு சிறு கட்டுரைகளாக அமைந்துள்ள நூல்.

Related posts

Leave a Comment