You are here
நூல் அறிமுகம் 

ஈசாப் கதைகள் தொகுப்பு: முல்லை முத்தையா

வாய்மொழி மரபில் உலகப்புகழ் பெற்ற கதைகள் இவை. எகிப்திய மன்னன் ஃபாரோ அமாசீஸ் காலத்தில்,அதாவது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஈசாப் என்று சொல்கிறார்கள்.எழுத்தறிவு இல்லாத இவரின் வாழ்நாள் முழுவதும் வறுமையும் துன்பமுமே நிறைந்திருந்தது. இவரின் மரணமும் கூட இயற்கையானதல்ல எனப்படுகிறது.ஏதோ ஒரு குற்றச்சாட்டின் பேரில் மலைமீதிருந்து உருட்டிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புரட்சியாளர்களுக்கும்,புதுமையான கருத்தாளர்களுக்கும் அக்காலத்தில் இயற்கையான மரணம் இல்லை. எழுதப்படிக்கத் தெரியாமல் அடிமையாகத் துயரப்பட்டாலும் உலகமே வியக்கும் கதைகளை வழங்கியவர் ஈசாப். கிரேக்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட இக்கதைகள் காலத்தை வென்று நிற்பவை..பத்து அல்லது பதினைந்து வரிகளுக்குள் முடிந்துவிடும் இக்கதைகளின் பாத்திரங்கள் பெரும்பாலும் விலங்கினங்களே.அவற்றின் வழியே உணர்த்தப்படும் நீதி மானுடம் முழுமைக்கானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதே ஈசாப் கதைகளின் பலம்.

Related posts

Leave a Comment