You are here

பொன்மொழிகள்

முதியோர்களின் அறிவுரைகள் குளிர்காலச் சூரியன்போல சுடாது ஒளிரும். – அ. எர்மான்
கட்டுப்பாடும் கவனமும் இன்றி செய்யத் தகாதவற்றைச் செய்பவனும், செய்யத் தக்கவற்றை செய்யாது இருப்பவனும் பெரிய துன்பத்துக்கு ஆளாவான் – புத்தர்
உண்மையைக் கடைப்பிடிக்கும் மனிதன் அதிர்ஷ்டமில்லாதவனாக இருந்தாலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான் – அரிஸ்டாட்டில்
நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பமே வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் ஏற்படாது – கன்ஃபூசியஸ்
வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் தேடி ஓடும்போதுதான் நாம் கால்கள் இடறி விழுந்துவிடுகிறோம் – ஷேக்ஸ்பியர்
கற்பனை நம் வாழ்க்கையை உயர்வடையச் செய்கிறது – எமர்சன்
நான் அனைத்தையும் நேசிக்கிறேன். அதனால்தான் என்னால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது – டால்ஸ்டாய்
சுடர்விட்டுப் பிரகாசிக்கும் விளக்காக இரு. அப்போதுதான் மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம் – தாகூர்
மனித இனத்தின் பொறுப்புகள் மூன்று. ஒன்று, பகைவனை நண்பனாக ஆக்குதல். இரண்டு, கெட்டவனை நல்லவனாக மாற்றுதல். மூன்று, படிப்பறிவற்றவர்களுக்குகல்வி கற்பித்து அவர்களின் வாழ்க்கையை உயர்த்துதல்
– டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்

Related posts

Leave a Comment