You are here
அஞ்சலி 

மணவை முஸ்தபா அஞ்சலி

அறிவியல் தமிழ் நூல்களிலும், அகராதிகள் உருவாக்கத்திலும் முன்னோடி அறிஞரான மணவை முஸ்தபா அவர்கள் பிப்ரவரி 6 அன்று சென்னை அண்ணாநகரில் காலமானார். அவருக்கு வயது 92.
அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம், கணினித் துறை சார்ந்த எட்டு கலைச் சொல் அகராதிகளைத் தொகுத்து வெளியிட்டார். ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழ் 30 மொழிகளில் வெளியான ஒரு சர்வதேச இதழ். அதன் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 35 ஆண்டுகள் பணியாற்றியவர் மணவை முஸ்தபா. கணினி கலைச் சொல் களஞ்சிய அகராதி உட்பட 31 நூல்களை எழுதியவர்.என் சைக்ளோ பீடியா பிரிட்டானிகா களஞ்சியம் தமிழ்ப் பதிப்பின் பொறுப்பாசிரியராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார்.,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன உறுப்பினர், அறிவியல் தமிழ்மன்றத் தலைவர், தமிழ்மொழி மேம்பாட்டு வாரிய உறுப்பினர், தமிழ் அறக்கட்டளைத் தலைவர் உட்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். தந்தை பெரியார் விருது, கலைமாமணி விருது, திரு.வி.க.விருது உட்பட 35க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

Related posts

Leave a Comment