You are here
அஞ்சலி 

மக்கள் பாடகர் சங்கை திருவுடையான் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் கைநெசவுக் குடும்பத்தில் பிறந்து தனது குரலால், கருத்தாய்வு மிக்க பாடல்களால் தமிழகத்தின் முற்போக்கு மேடைகளுக்கு செறிவூட்டியவர் மக்கள் பாடகர் சங்கை திருவுடையான்.
கரிசல் குயில் இசைக் குழுவின் தபேலா கலைஞராக அறிமுகமானவர். பின்னாளில் தபேலா இசைத்துக் கொண்டே கணீர் குரலில் திருவுடையான பாடத் துவங்கினார்.
தமிழா, தமிழா நீ பேசுவது தமிழா இப்பவெல்லாம் எவன்டா சாதி பாக்குறான்னு அப்பாவி போலவே கேக்குறான்னு
ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்த போல என பெண்ணுரிமை சமூகநீதி, மொழிபற்று, தேசப்பற்று ஆகிய முற்போக்கு விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கும் பாடல்களை தமிழகமெங்கும் இசைத்து வந்தவர் மக்கள் கலைஞர் சங்கை திருவுடையான்.
சேலத்தில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பும் வழியில் 29.08.2016 அன்று சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.
கடந்த கால் நூற்றாண்டுகளாக தனது பாடல்களால், தபேலா இசையில் வசீகரித்த மக்கள் கலைஞர் சங்கை திருவுடையான் அவர்களுக்கு ‘‘புத்தகம் பேசுது’’ ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Related posts

Leave a Comment