You are here
அஞ்சலி 

அஞ்சலி

கவிஞர். குமரகுருபரன் (43) திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். 19.6.2016 அன்று மாரடைப்பால் காலமானார். இவர் கால்நடை மருத்துவர். சென்னையில் ஊடகத்துறையில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் கனடாவின் இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான இயல் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது. கனடா விருது வழங்கும் அதே நாளில் குமரகுருபரன் இறந்தது அதிர்ச்சியான சம்பவம். ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்கிற கவிதைத் தொகுப்பை உயிர்மைப் பதிப்பகமும் சினிமாக் கட்டுரையை அந்திமழையும் வெளியிட்டிருக்கிறது. ‘குமுதம்‘ பப்ளிகேஷன்ஸ் – பயணிகள் கவனிக்கவும் என்ற தலைப்பில் ‘குமுதம்‘ இதழில் அவர் பணிபுரிந்தபோது எழுதிய பயணக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக கொண்டு வந்திருக்கிறது.
புத்தகம் பேசுது தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

Related posts

Leave a Comment