You are here
Uncategorized வாசித்ததில் யோசித்தது 

கணிணித்தமிழ் களஞ்சியம்

கணிணித்தமிழ் களஞ்சியம்

இன்றைய தேதி வரையில் கணிணி உலகின் முன்னேற்றங்களை மிக விரைவாக, மிக எளிமையாக அதுவும் இனிய தமிழ் பெயர்களுடன் படித்து அறியும் வகையில் இந்நூலின் ஆசிரியர் சிறப்பாக தொகுத்துள்ளார்.
கணிணி உலகம் பற்றி எதுவும் அறியாதவர்கள் கூட இந்நூலை ஒரு முறை படிப்பதன் மூலம் தெளிவு பெற முடியும். நேர்த்தியான கட்டமைப்பு, எழுத்துக்களின் ஒழுங்கமைவு ஆகியவை உயர்தரத்தயாரிப்பை நல்குகிறது.
‘cloud computing’என்பது இன்றும் பலர் அறியாத ஒரு சிறந்த தொழில் நுட்பம். மேகம் எப்படி ஏற்றத்தாழ்வு நோக்காமல் பொழிந்து பயன்படுகிறதோ அதைப்போலவே கணிணிக்கான மென்பொருட்கள் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்ட்டது. இதை ஆசிரியர் தமிழில் ‘மேகக் கணிமை’ என்று விளக்குவது இந்நூலில் இடம் பெற்றுள்ள பல விவரங்களைக் குறிப்பிட இதுவே எடுத்துக்காட்டாகும்.
தேவையான இடங்களில் பொருத்தமான விளக்கப் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை இந்நூலை மேலும் சிறப்பாக்குகிறது. எல்லாவித மென், வன் பொருட்கள் பற்றிய சீராய்வு படிப்பதற்கு எளிதாக உள்ளது. எழுத்துருக்கள் பற்றிய பகுதி முழு விபரல்களைத் தருகிறது. ‘pangram’ என்றால் என்னா என்பதைப் பற்றி ஆசிரியர் தரும் விபரம் சுவையான செய்தியாகும்.
களைப்பு ஏற்படுத்தாத வகையில் கணினிபற்றிய முழு நூல் இந்த ‘கணினித்தமிழ் என்ற வகையில் சிறக்கிறது’. இது போன்ற நூல்கள் தமிழில் அதிகம் வெளிவரவேண்டுமென்ற ஆவலை இந்நூல் ஏற்படுத்துகிறது. -ஆத்மா கே.ரவி

Related posts

One thought on “கணிணித்தமிழ் களஞ்சியம்

  1. srikrishnan

    //‘cloud computing’என்பது இன்றும் பலர் அறியாத ஒரு சிறந்த தொழில் நுட்பம். மேகம் எப்படி ஏற்றத்தாழ்வு நோக்காமல் பொழிந்து பயன்படுகிறதோ அதைப்போலவே கணிணிக்கான மென்பொருட்கள் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்ட்டது. // தவறான தகவல். cloud computing technology என்பது மென்பொருள் ஏகபோக நிறுவனங்களின் வியாபார யுத்தியாகவும், பயனாளர்களை தங்கள் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவும், அனைத்து பயனாளர்களின் தரவுகளையும் இணையத்தில் வைக்க வைத்து அவற்றை ஏகபோக நிறுவனங்கள் கட்டுப்படுத்தவுமான ஒரு ஆபத்தான செயல்பாடு என தனது பல பேட்டிகளின் வழியாக அதை கடுமையாக எதிர்த்து வருகிறார் copyleft, சுதந்திர மென்பொருள் இயக்கத்தின் நிறுவனர் ரிச்சர்ட் ஸ்டால்மென் அவருடைய கட்டுரைகள் மற்றும் நேர்காணல்களை வாசிக்கவும்

Leave a Comment