You are here
அஞ்சலி 

அஞ்சலி: ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அநாதைகளாயின…

   மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் கடந்த 27.07.2015 அன்று ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாடிக் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக இயற்கை எய்தினார். அவருக்கு புத்தகம் பேசுது இதழ் ஆசிரியர் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
திரு. கலாம் அவர்கள் 2011 பிப்ரவரி 16 அன்று, தில்லியில் சாகித்திய அகாதெமியின் இலக்கியத் திருவிழாவின் போது ஆற்றிய ‘சாம்வத்ஷார்’ உரையில், புத்தக வாசிப்பு மற்றும் குடும்ப நூலகம் குறித்து செறிவான பல கருத்துகளைக் கூறியிருந்தார். அந்த உரை புத்தகம் பேசுது 2011 ஆகஸ்ட் இதழிலில் பிரசுரமாகியிருந்தது. அதிலிருந்து ஒரு பகுதியை இங்கு மறுபிரசுரம் செய்துள்ளோம். திரு. கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நம் எல்லோருடைய இல்லங்களிலும் குடும்ப நூலகம் ஒன்று அமைப்போம்!

    நண்பர்களே, இங்கே ஒரு அனுபவத்தைக் கூற விரும்புகிறேன். நான் ஈரோட்டில் நடைபெற்ற புத்தகக் காட்சியின் முடிவாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். அத்தோடு ஒரு உறுதிமொழியை அவர்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் அதனை வாசித்தேன். அந்தப்பெருந்திரளான கூட்டம் முழுமையும் பொங்கும் உற்சாகத்துடன் கீழ்க்கண்ட அந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டது.

  • இன்று முதல் நான், 20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன்.
  • எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள்.
  • எமது பேரக்குழந்தைகள் குடும்ப நூலகத்தை 2000 புத்தகங்களாக்குவார்கள்.
  • நான் எங்களுடைய நூலகத்தை வாழ்க்கை முழுமைக்குமான செல்வமாகவும் விலைமதிப்பற்ற சொத்தாகவும் கருதுகிறேன்.
  • நாங்கள் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து படிப்பதற்கு குடும்ப நூலகத்தில் குறைந்தது 1 மணி நேரம் செலவழிப்போம்.

இந்த உறுதிமொழிக்குப் பிறகு, குடும்ப நூலகம் பற்றி அவர்களிடம் ஏற்பட்ட மகிழ்ச்சியை என்னால் காண முடிந்தது. இதன் தொடர்ச்சியாக, ஆச்சரியப்படவைக்கும் நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அவர்களில் ஆயிரமாயிரமானோர் புத்தக விற்பனை நிலையங்களுக்கு விரைந்தனர்; ஒரு மணி நேரத்திற்குள் பெரும்பாலான புத்தகங்கள் விற்றுத்தீர்ந்தன. இந்நூல்கள் இந்த இளம் சிந்தனையாளர்களை மகத்தான வித்வான்களாகவும் தொழில்நுட்பர்களாகவும் அறிவியலாளர்களாகவும்  ஆசிரியர்களாகவும் எழுத்தாளர்களாகவும்  தலைவர்களாகவும் மாற்றும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

Related posts

Leave a Comment