You are here

தொல்காப்பியப் பதிப்பாசிரியர்கள்

முனைவர் இரா. வெங்கடேசன்

மொழியைக் கற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் வரையறுத்துக்கொள்ளும் வகையிலும் மொழியில் இலக்கண நூல்கள் உருவாக்கம்பெறுகின்றன. அந்தவகையில் உருவாக்கம்பெறுகின்ற இலக்கண நூல்களுள் சில, மிக நீண்ட காலத்திற்குத் தொடர்ச்சியான அளவில் புலமை வழக்கில் நீடித்துவருகின்ற தன்மையைப் பெற்றுவிடுகின்றன. வழக்கில் நிலைபெற்றுவிடுகின்ற இலக்கண நூல்களுள் வகுக்கப்பட்டிருக்கும் மொழி பற்றிய சில வரையறைகள் மொழியின் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப ஈடுகொடுக்கும் வகையில் அமைந்துவிடுவதுண்டு. தொல்காப்பியம் வகுத்தளித்துள்ள தமிழ் மொழி பற்றிய வரையறைகள் பல சமகால மொழியமைப்பிற்கும் பொருந்தும்வகையில் அமைந்திருப்பதைக் காணமுடியும்.

பலநூறு ஆண்டுகள் கடந்தவிட்ட நிலையிலும் சமகாலத் தமிழ் மொழியின் அமைப்பைத் தெளிவுபடுத்தும் விதிகளைக் கொண்டுள்ள தன்மையினால்தான் தொல்காப்பியம் எனும் இலக்கண நூல் நெடுங்காலமாகப் புலமை மரபில் செல்வாக்குடன் நிலைபெற்று வருகின்றது. அதன் வெளிப்பாடுகளாகத்தான் அதன் உரைகள், சுவடிகள், அச்சுப் பதிப்புகள் ஆகியன அமைகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகம் தொல்காப்பியத்தைப் பயன்படுத்திக்கொண்ட வரலாற்றுத் தரவுகளை உரைகள், சுவடிகள், அச்சுப் பதிப்புகள் வழியே பெறமுடிகின்றன.

பண்டைய உரையாசிரியர்கள் உரை எழுதியதன் வழியாகத் தொல்காப்பியத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கையளித்துவிட்டுச் சென்றனர். அதேவகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டு அச்சு ஊடகத்தின் துணையால் தொல்காப்பியத்தை அச்சில் பதிப்பித்து வெளியிட்ட பதிப்பாசிரியர்களும் அதன் நிலைபேற்றிற்குப் பெரும்துணைபுரிந்துள்ளனர். தமிழின் செம்மொழித் தகுதிப்பாட்டிற்குப் பேராதாரமாக உள்ள தொல்காப்பியத்தைக் கையளித்துவரும் புலமை மரபில் பதிப்பாசிரியர்கள் முக்கிய ஆளுமைகளாகத் தென்படுகின்றனர். அந்தப் பதிப்பாளுமைகளை இன்றைக்கு நாம் நினைகூர்வது ஒருவகையில் அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலானது. அந்தவகையில், குறிப்பிட்ட சில பதிப்பாளுமைகளின் விவரங்கள் இங்குத் தரப்படுகின்றன. அடைப்புக் குறிக்குள் உள்ள ஆண்டு அவர்கள் பதிப்பித்த தொல்காப்பிய அச்சுப் பதிப்பு வெளிவந்த ஆண்டாகும்.

 1. மழவை மகாலிங்கையர் (1847)
 2. இ. சாமுவேல் பிள்ளை (1858)
 3. ஆறுமுக நாவலர் (1866)
 4. திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் (1868)
 5. கோமளபுரம் இராசகோபால பிள்ளை (1868)
 6. சி.வை. தாமோதரம் பிள்ளை (1885)
 7. வா. கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் (1905)
 8. ராவ்பகதூர் ச. பவானந்தம் பிள்ளை (1916)
 9. ரா. இராகவையங்கார் (1917)
 10. கா. நமச்சிவாய முதலியார் (1920)
 11. வ. உ. சிதம்பரம் பிள்ளை (1921)
 12. பி. புன்னைவனநாத முதலியார் (1922)
 13. கா. சுப்பிரமணிய பிள்ளை (1923)
 14. ச. கந்தசாமியார் (1923)
 15. தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் (1923)
 16. தி. த. கனகசுந்தரம் பிள்ளை (1923)
 17. அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929)
 18. பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரி (1930)
 19. எஸ். வையாபுரிப் பிள்ளை (1934)
 20. வே. துரைசாமி ஐயர் (1935)
 21. சி. கணேசையர் (1937)
 22. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை (1938)
 23. மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை (1941)
 24. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் (1942)
 25. வே. வேங்கடராஜுலு ரெட்டியார் (1944)
 26. ஞா. தேவநேயப் பாவாணர் (1944)
 27. கா.ர. கோவிந்தராச முதலியார் (1946)
 28. ஈ. எஸ். வரதராச ஐயர் (1948)
 29. ஆ. பூவராகம் பிள்ளை (1954)
 30. புலியூர்க் கேசிகன் (1961)
 31. இராம. கோவிந்தசாமி பிள்ளை (1962)
 32. கு. சுந்தரமூர்த்தி (1962)
 33. க. வெள்ளைவாரணன் (1962)
 34. சி. இலக்குவனார் (1963)
 35. ஆபிரகாம் அருளப்பன், வி. ஐ. சுப்பிரமணியன் (1963)
 36. ச.வே. சுப்பிரமணியன் (1967)
 37. புலவர் குழந்தை (1968)
 38. பூ.சு. குப்புசாமிராஜா (1968)
 39. ஆபிரகாம் அருளப்பன் (1968)
 40. அடிகளாசிரியர் (1969)
 41. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்(1971)
 42. ரா. சீனிவாசன் (1971)
 43. மு. அருணாசலம் பிள்ளை (1975)
 44. க.ப. அறவாணன் (1975)
 45. ஆ. கு. ஆதித்தர் (1977)
 46. ஆ. சிவலிங்கனார் (1980)
 47. பாவலரேறு ச. பாலசுந்தரம் (1988)
 48. இராம. சுப்பிரமணியன் (1989)
 49. மு. சண்முகம் பிள்ளை (1995)
 50. தி. வே. கோபாலையர் (2003)

Related posts