You are here
நூல் அறிமுகம் 

எமது புதிய வெளியீடுகள்

மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
டெரி ஈகிள்டன் , தமிழில்: அ.குமரேசன், பக். 96 | ரூ.65
மானுடத்தின் முழு விடுதலைக்குப் போராடும் உறுதியை வலுப்படுத்தவே மார்க்சியத் திறனாய்வு என்பதை வாதத்திற்கான கருத்தாக இல்லாமல் வரலாற்றுச் சான்றாகவும் விளக்கி வாழ்க்கைப் பாடமாக்கியிருக்கிறார் டெரி ஈகிள்டன் இந்நூலில்.

விடுதலைப் போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள்
சீத்தாராம் யெச்சூரி , தமிழில்: ஹேமா, பக்.224 | ரூ.140
நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் போராடியபோது, அந்தப் போராட்டத்தை வலுவாக்கித் தீவிரப்படுத்தியதில் கம்யூனிஸ்டு களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அத்தகைய 25 தியாகிகளின் விடுதலைப் போராட்ட நினைவலைகளே இந்நூல்.

ரோசா லக்ஸம்பர்க்
தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி, பக்248 | ரூ.160
14 தொகுதிகளில் விரியும் ரோசா லக்ஸம்பர்க்கின்  ஆழமும் ஒளியும் நிரம்பிய எழுத்துகள் பெருமளவு தமிழுக்கு வந்து சேரவில்லை. இந்நிலையில் ஒரு சிறு அறிமுகமாக, ரோசா எழுதிய இரு முக்கியமான கட்டுரைகளும், சுருக்கமான வாழ்க்கை வரலாறும் இந்நூலில் தரப்பட்டுள்ளது.

இயக்கவியல் பொருள்முதல்வாதம்
மாரிஸ் கான்போர்த் , தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி , பக்.718 | ரூ.500
மார்க்சியத் தத்துவம் குறித்து எழுதப்பட்ட நூல்களில், இன்றுவரை மார்க்சியத் தத்துவத்திற்கான ‘செம்பனுவல்’ எனும் தகுதியோடு விளங்கும் மாரிஸ் கான்ஃபோர்த் எழுதிய இந்நூல் முழுமையாகத் தமிழில் முதன் முறையாக வெளிவந்துள்ளது.

களப்பணியில் கம்யூனிஸ்டுகள்
ஜி. ராமகிருஷ்ணன், பக்.352 | ரூ.200
மூலை முடுக்கு களிலெல்லாம் நிறைந் திருக்கும் இயக்கப் போராளிகளின் பங்களிப்பை வரலாறாகப் பதிவு செய்த இந்த முயற்சி வளரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் எழுதப்பட்டது. இந்தப் பதிவில் இடம் பெற்றவர்களின்  இடையறாத உழைப்பும் சோஷலிஸ சமூகம் பற்றிய அவர்களின் பிடிப்பும் உத்வேகமூட்டும் தனிக்காவியமாகும்.

அமெரிக்கா கருப்பின மக்களின் வரலாறு
ஆர். பெரியசாமி , பக்.128 | ரூ.90
ஆப்பிரிக்க மக்கள் ஐரோப்பியர்களால் வேட்டையாடப்பட்டு, அடிமைச்சந்தையிலே விற்கப்பட்டு, அமெரிக்காவின் பருத்தி வயல்களிலும், ஆழ்துளைச் சுரங்கங்களிலும் மயங்கி வி-ழுகிறவரை வேலை செய்யத் தள்ளப்பட்டனர். அந்த அடிமைகளின் உழைப்பே அமெரிக்க மூலதனத்தை உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்தது என்பதைப் பின்புலமாகக் கொண்டுள்ளது இந்நூல்.

பாசிஸ்ட் நீதிமன்றத்தில் டிமிட்ரொவ்
தமிழில்: வீ.பா.கணேசன்,  பக்.112 | ரூ.80
டிமிட்ரோவ் பாசிஸ்ட் நீதிமன்றத்தின் முன் மரணதண்டனையை எதிர்நோக்கி நின்றபடி பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பற்றியும் கம்யூனிஸ்ட் அகிலம் பற்றியும் உலகந்தழுவிய வர்க்க ஒற்றுமை பற்றியும் முன்வைத்த கருத்துக்கள் நூல் வடிவில்.

கலையின் அவசியம் : ஒரு மார்க்சிய அணுகுமுறை
எர்னஸ்ட்ஃபிஷர்,  தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி, பக்.288 | ரூ.180
கவின் கலைகளான ஓவியம், இசை ஆகியவற்றின் சமூக பொருளியல், வரலாற்று அடிப்படைகள் அவற்றுக்கும் அரசியல். பொருளாதாரம், சமூகத் தளங்களுக்கும் இடையிலான ஊடாடல், இவற்றில் செல்வாக்கு செலுத்தும் போக்குகள், கோட்பாடுகள் ஆகியவற்றை மார்க்சிய நோக்கில் விவாதிக்கிறது இப்பிரதி.

விடுதலைப் போரில் பெண்கள் 1857 எழுச்சிகளின் பின்னணியில்
எஸ்.ஜி. ரமேஷ்பாபு, பக்.32 | ரூ15
விடுதலைப் போரில் பென்கள் என்கிற வரலாற்றுத் தொடர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாத இதழான ”மகளிர் சிந்தனை”யில் கடந்த 19 மாதங்களாக வந்து கொண்டிருக்கிறது. அந்தத் தொடரின் ஒரு பகுதியின் சுருக்கப்பட்ட வடிவமே இந்நூல்.

தாய்
மக்சீம் கார்க்கி, தமிழில்: ரகுநாதன், பக். 560 | ரூ.300
தொழிலாளி வர்க்கமும், இளைஞர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி இந்நாவலில் தீட்டியிருக்கிறார்.

ஜிகாதி:பதுங்கு குழியில் மறைந்திருக்கும்  ஒரு சொல்
ஹெச்.ஜி. ரசூல். பக்.120 | ரூ.80
மதத்தின் மீதான பிரேமையில் வன்முறை மூலமாக மனிதகுல அமைதிக்கு பங்கம் விளைவிப்பவனுக்குப் பெயர் ஜிகாதி அல்ல.  தவறாகப் பொருள் கொள்ளப்பட்ட சில சொல்லாடல்களில் ஜிகாதியும் ஒன்று. கவிஞராகப் பெரிதும் அறியப்பட்ட ஹெச்.ஜி.ரசூல் தனது உலகளாவிய பார்வை கொண்டு எழுதிய  சமகால இஸ்லாமியப் பின்புல
ஆய்வு நூல்.

பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன்
கோணங்கி நேர்காணல், சந்திப்பு: கீரனூர் ஜாகிர்ராஜா, பக்.80 | ரூ.50
மதினீ¤மார்கள், பாட்டிமார்கள்,  நண்பர்கள்,  தோழிகள், அப்பா, அம்மா  தாத்தா, உடன்பிறப்புக்கள் என எல்லோருடைய ஞாபகங்களுடனும் கோணங்கி தன்னுடைய முன்மாதிரிச் சுயசரிதையை இந்நேர்காணலில் நிகழ்த்தியிருக்கிறார். இதுவரை வெளிவராத அளவில்
விரிவான நேர்காணல்.

மதினிமார்கள் கதை
கோணங்கி,  பக்.128 | ரூ.80
11 கதைகள் அடங்கிய கோணங்கியின் முதல் கதைத் தொகுப்பு. வெளிவந்த காலக்கட்டத்தில்  பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்.  கரிசக்காட்டின்  வெக்கையும்,  வறட்சியும் கடந்து  வெள்ளரிக்காயின் குளிர்ச்சியாய்  வாசகனுள் இறங்கும் கதைகள்.

கொல்லனின் ஆறு பெண்மக்கள்
கோணங்கி,  பக்.200 | ரூ.130
முத்திரைக் கதைகள் கொண்ட கோணங்கியின் இரண்டாவது தொகுப்பு. எதார்த்தவாத எழுத்திலிருந்து  கோணங்கி அடையும் இன்னொரு பரிணாமத்தை இத்தொகுப்பி லிருந்தே நாம் அடையாளம் காணலாம். எல்லாக் கதைகளிலும் இழையோடுவது மானுடத்தின் மீதான கோணங்கியின் அபிமானமே.

மஹாகவி ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ் வாழ்க்கை, கவிதைகள், கருத்துகள்…
ப.கு.ராஜன்  | பக். 136 ரூ.90.
ஒரு பற்றுறுதி கொண்ட மார்க்சிஸ்ட். உருது மொழியின் மஹாகவிகளுள் ஒருவர்… ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ்.  இந்த ஆளுமையின்  வாழ்க்கை நிகழ்வுகளும் அவர் எழுதிய முக்கிய கவிதைகளுள் சிலவும் அவரைக் குறித்த கருத்தாக்கங்களும் சிறப்பான முறையில் இந்நூலில்  தொகுக்கப்பட்டுள்ளது.

சித்தார்த்தன்
ஹெர்மன் ஹெஸ்ஸே,  தமிழில்: திருலோக சீதாராம். பக். 144 | ரூ.90
சித்தார்த்தன் ஐரோப்பிய நாவல். ஜெர்மனி மொழியில் 1922ஆம் ஆண்டில் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதினார். அதற்கு  1946ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.   வாழ்க்கையை வாழ்க்கையின் தத்துவ சரட்டைச் சொல்லும் பெரிய நாவல். ஆனால் குறைந்த பக்கங்களில் எழுதப்பட்ட மகத்தான நாவல்.

அதர்பட யாத்தல்
சா.கந்தசாமி, பக்.128 | ரூ.80
இலக்கிய வகைமைகளான  கதை, கவிதை, நாவல் மற்றும் அவற்றை  எழுதிய எழுத்தாளர்கள், இலக்கிய உலகில் நி-கழ்ந்த  குறிப்பிடத்தக்க சம்பவங்கள், எழுத்தனுபவங்கள் என சா. கந்தசாமியின் இந்நூலில் சுவாரஸ்யமிகு பல கட்டுரைகள் அடங்கியுள்ளன.

ஆண்டர்சன் கதைகள்
ஹான்ஸ் கிறிஸ்டியன். தமிழில்: யூமா வாசுகி, பக்.327 | ரூ.195
இக்கதைகளில் பல்வேறு ஜீவராசிகளும் உயிர்த்தெழுந்து மனிதர்களைப் போலவே பேசுகின்றன,  சிந்திக்கின்றன. செயலாற்றுகின்றன. இவை அனைத்தும் அறம் சார்ந்த வழிகளில் ஆனந்தமய வாழ்வை நோக்கிய உந்துதல்களாகவே அமைந்திருக்கின்றன. இதுவே இக்கதைகளின் சிறப்பு.

ஒரு நாயின் கதை
பிரேம்சந்த், தமிழில்: யூமா வாசுகி , பக்.48 | ரூ.30
இந்திக் கதை இலக்கியத்தின் சக்கரவர்த்தியாக இருந்த பிரேம்சந்த் குழந்தைகளுக்காக எழுதிய கதை. தன் அறிவாலும் ஆற்றலாலும் மனிதர்களுக்கு வியப்பூட்டும்  கல்லு எனும் நாய்க்குட்டி தன் கதையைச் சொல்கிறது.

சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும்  உலக நாடோடிக் கதைகள்
தமிழில்: யூமா வாசுகி , பக்.64 | ரூ.40
பல்வேறு உலக நாடுகளில் வழங்கி வந்த வாய்மொழிக் கதைகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இந்த நூல், அந்தந்த தேசத்து நம்பிக்கைகள் மற்றும் கலாசாரங்கள் சார்ந்தவை. ரசனை மிகுந்த இந்தக் கதைகள் எளிய நடையில் மலர்ச்சியைத் தருபவை. உள்ளுணர்வைத் தூண்டிக் குதூகலிக்கச் செய்பவை.
ஜேம்ஸ் வாட்டின் மந்திர எந்திரம்
பேரா. எஸ்.சிவதாஸ், தமிழில்: யூமா வாசுகி  , பக். 32 | ரூ.25
எப்படி ஜேம்ஸ் வாட்  இவ்வளவு திறமை சாலியானான்? எப்படி இவ்வளவு அறிவாளியானான்? எப்படி ஒரு சாதனையாளனாக மாறினான்? எப்படி வாழ்க்கையில் வெற்றிபெற்றான்? இந்த ரகசியங்களையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? இந்தக் கதையைப் படியுங்கள்.

சார்லிசாப்ளின்
பி.பி.கே. பொதுவால், தமிழில்: யூமா வாசுகி , பக். 96 | ரூ.60
உலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினுடைய வாழ்க்கை வரலாறு. தன் வாழ்க்கை அனுபவங்களை திரைப் படங்களில் சித்தரித்துப் பார்வையாளர்களை ஒரே நேரத்தில் சிரிக்க, சிந்திக்க, அழவும் வைத்த சாப்ளின் கதை.

வானவில்லின் மனது
சதீஷ் கே.சதீஷ் | தமிழில்: யூமா, வாசுகி, பக். 128 | ரூ80
இது வழக்கமான சிறார் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நாவல். ஏழு வயதுக்குள், வரைந்து வரைந்து ஓவியங்களின் வண்ணப் பிரபஞ்சத்தை உருவாக்கிய ஒரு குழந்தையைப் பற்றிய நினைவுகள். வாராது வந்த மாமணியாய் வாய்த்த கேரளத்து சிறார் இலக்கியத்தின் முன்மாதிரிகளில் ஒன்று.

மாத்தன் மண்புழுவின் வழக்கு
பேரா. எஸ்.சிவதாஸ் தமிழில்: யூமா வாசுகி,  பக்.104 | ரூ.70
இயற்கையின் ரகசியங்களை வெளிப்படுத்தும் புதுமையான நூல் இது. மண்புழுவைக் குறித்தான விவரங்களுடன் மண்புழு  உரம், இயற்கை விவசாயம் ஆகியவற்றையும் இந்த நூல் விவரிக்கிறது. உயிரியலைப் பற்றி உற்சாகமாக வாசிக்கத் தூண்டும் அருமையான நூல்….

ஹோய்டி டொய்டி
எ.பெலாயேப், தமிழில்: யூமா வாசுகி  ,பக்.88 ரூ 60
ரஷ்ய அறிவியல் புனைகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் பெலாயேப். இவர் எழுதிய ‘ஹோய்டி டோய்டி’ எனும் நீண்ட கதையின் மறுகூறல் வடிவம் இது. யானையின் உடலில் மனிதனின் மூளையைப் பொருத்திய ஒரு விஞ்ஞானி மற்றும் அந்த யானையின் கதை.

எட்டுக்கால் குதிரை
கொ.மா.கோ. இளங்கோ,  பக். 48 | ரூ.30
எண்களின்  உருவச்சிதைவோ, உருவப்பெருக்கமோ குழந்தைகளுக்கு அதீத கற்பனை களைத் தரும். அவற்றின் மீது மனித சுபாவங்களை ஏற்றி வேடிக்கை பார்ப்பதும் மகிழ்வதும், சில பாடங்களைக் கற்றுக் கொள்வதுமாக கொ.மா.கோ இளங்கோ இந்நூலை வடிவமைத்திருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு: வாழ்வும் அரசியலும்
ரோ.அ. உலியானோவ்ஸ்கி, தமிழில்: இரா.கௌதம் , பக். 48 | ரூ.30
சோஷலிஸ்டாகிய நேரு, மெல்ல மெல்ல காங்கிரஸ் ஸ்தாபனத்தின், காந்தியின் பக்கம் செல்ல நேர்ந்த முரணை விளக்குகிற அதே நேரத்தில், அவருடைய மாறாத முற்போக்கு மனத்தையும் நுட்பமான மொழியில் படம் பிடிக்கிறது இந்நூல்.

யானை சவாரி
பாவண்ணன் , பக். 64 | ரூ.40
விதவிதமான சொற்கள். விதவிதமான சத்தம். ஒவ்வொன்றையும் ஓர் இசைத்துணுக்கு என்றே சொல்ல வேண்டும். அதிசயமான அந்தத் தாளக்கட்டை ஒரு போதும் மறக்கவே முடியாது. அந்தக் காட்சிகளும் அவர்கள் மொழிந்த சொற்களும்தான் இந்தத் தொகுதியில் உள்ள பாடல்களுக்கான ஊற்றுக்கண்கள்.

டார்வின் நாடகம்
ஆயிஷா இரா. நடராசன் , பக். 32 | ரூ.25
சிறுவன் டார்வினின் பூச்சி சேகரிப்பு, பீகிள் கப்பல் பயணம், மனிதன் ஆண்டவனால் படைக்கப்பட்டவன் அல்ல என்பதை உணரும் தருணம் என  படித்த நாமே  டார்வினாக மாறி இந்தப் பயணத்தை நடத்தி முடித்த உணர்வை அளிக்கின்றது. நாடகமாய் நடித்து மகிழ்வதற்கும் ஏற்ற நூல்.

எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க!
இல. சண்முகசுந்தரம் , பக். 48 | ரூ.25
முடியும். நிச்சயமாய் முடியும். அமைச்சர் வீட்டுப்பிள்ளையும், அரசு அதிகாரிகள் வீட்டுப்பிள்ளையும் படிக்கும் பள்ளிகளாய் அரசுப்பள்ளிகள் மாறினால், நிச்சயம் முடியும். இந்நிலை வரும் நாள் வெகுதொலைவில் இல்லை. இதையே இந்நூல் உணர்த்துகிறது.

திரு. குரு ஏர்லைன்ஸ்
விழியன் , -பக். 48 | ரூ.30
திருகுரு என்ற மனிதக்குரங்கார் முதல் விமானத்தை இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு இயக்குகிறார். யார் யார் விமானத்தில் சென்றார்கள். வழியில் என்ன நடந்தது என்ற கதையே திரு.குரு ஏர்லைன்ஸ்

நோயர் விருப்பம்
ஜி. ராமானுஜம்  , பக். 80 | ரூ.50
மருத்துவர் ஜி.ராமானுஜம் துணுக்குகளை சப்ளை செய்து சிரிக்க வைக்காமல், நமது கேண¤யில் ஊறிக் கொண்டிருக்கும் கல்கண்டு நீரை நாமாக  எடுத்து அருந்திக் கொண்டாடக் கற்கும் வண்ணம் எழுதுகிறார். நாம் கேட்காமலே எழுதித் தரும் பிரிஸ்கிருப்ஷன், மனம் விட்டுச் சிரியுங்கள் என்பதுதான்.
உடலும் உள்ளமும் கொண்டாடும் இடத்திலே
எஸ்.வி. வேணுகோபாலன்  , பக். 48 | ரூ.30.
கல்லீரல் தொடங்கி காதுகள் வரை உடலின் முக்கிய உறுப்புகள் பற்றிய எளிய விவாதங்களை இந்த நூல் உங்கள் முன் எடுத்து வைக்கிறது.  உள்ளன்போடு இந்த வாழ்க்கையை வாழ இயலுமானால் மனிதப் பிறவியும்  இனிமையானதே என்பதையே இந்தக் கட்டுரைகள் பேசத் துடிக்கின்றன.

Related posts